பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்கள்

அனைவரும் வாங்கும் வகையில், பட்ஜெட் போன்களைத் தயாரித்து வழங்கும் செல்கான் நிறுவனம், அண்மையில் மூன்று ஸ்மார்ட் போன்களை வழங்கியுள்ளது. 

அவை -மோனோலிஸா எம்.எல்.5,சிக்னேச்சர் ஸ்விப்ட் ஏ 112 மற்றும் கேம்பஸ் ஏ10 (Monalisa ML5, the Signature Swift A112 and the Campus A10)


இவை தொடக்க நிலையிலிருந்து மத்திய நிலை வரையிலான போன்களாகும். இவற்றில் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் சிஸ்டம் இயங்குகிறது. Signature Swift A112 மொபைல் போனில் 5 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், 512 எம்.பி. ராம் மெமரி ஆகியவை உள்ளன. 

இரண்டு கேமராக்கள் (8/1.3 எம்.பி.) தரப்பட்டுள்ளன. இதன் ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி. பேட்டரி 2,000 mAh திறன் கொண்டது. 

இதன் அதிக பட்ச விலை ரூ. 8,799.

Monalisa ML5 மொபைல் போனில், 4.5 அங்குல டச் ஸ்கிரீன், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் இடம் பெற்றுள்ளன. 

8எம்.பி/2 எம்.பி என இரண்டு கேமராக்கள் இயங்குகின்றன. பேட்டரி 1,800mAh திறன் கொண்டதாக உள்ளது. 1 ஜிபி ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 10,999.

Campus A10 மொபைல் போனில் திரை 3.5 அங்குல அகலத்தில் உள்ளது. 1.3 எம்.பி. மற்றும் ஒரு வெப் கேமரா தரப்பட்டுள்ளது. இதனுடைய பேட்டரி திறன் 1,500 mAh. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,299.

மற்றபடி மேலே கூறப்பட்டுள்ள அனைத்து போன்களும், சில வசதிகளைப் பொதுவாகப் பெற்றுள்ளன. WiFi 802.11 b/g/n, 3G WCDMA, EDGE, Bluetooth மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரியை 32 ஜிபி ஆக அதிகப்படுத்தும் வசதிகள் தரப்பட்டுள்ளன.


2 comments :

கலியபெருமாள் புதுச்சேரி at October 3, 2013 at 8:45 PM said...

பயனுள்ள தகவலுக்கு நன்றி...

திண்டுக்கல் தனபாலன் at October 3, 2013 at 8:57 PM said...

நல்லது... நன்றி...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes