அடிப்படை மற்றும் சிறந்த வசதிகளைக் குறைக்காமல், ரூ.10,000க்கும் குறைவாக விலையிட்டு, இந்தியாவில் விற்பனையாகும், ஸ்மார்ட் போன்களை ஒரு பட்டியல் இட்டுப் பார்த்ததில், பல போன்கள் இடம் பெற்றன.
1. சாம்சங் காலக்ஸி பேம் (Samsung Galaxy Fame):
3ஜி, வை-பி, இரண்டு கேமரா, 3.5 அங்குல டச் ஸ்கிரீன், இரண்டு சிம், 1,300 பேட்டரி, ஜெல்லி பீன் 4.1 என சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்ட இந்த போன் விலை ரூ. 8,450.
2. எல்.ஜி. ஆப்டிமஸ் எல் 4 - 2 டூயல் (LG Optimus L4 II Dual):
இரண்டு சிம், 512 எம்.பி. ராம் மெமரி, 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், ஜெல்லி பீன் 4.1.சிஸ்டம், 3,8 அங்குல திரை என நல்ல அம்சங்களுடன் கொண்ட இந்த போன் கடைகளில் ரூ.8,800க்குக் கிடைக்கிறது.
3. நோக்கியா லூமியா 520 (Nokia Lumia 520):
இது ஒரு விண்டோஸ் சிஸ்டம் கொண்ட போன். மல்ட்டி டச் வசதி கொண்ட 4 அங்குல திரை. 5 எம்.பி. கேமரா, டூயல் கோர் எஸ்4 ப்ராசசர், 512 எம்.பி. ராம், 1430mAh திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளது. சில்லரை வர்த்தகர்களிடம் இதன் விலை ரூ. 9,900.
4. பானாசோனிக் டி11 (Panasonic T11):
நல்ல விரைவான செயல்பாட்டிற்க்கு குவாட் கோர் ப்ராசசர், 2 கிகா ஹெர்ட்ஸ் சிப்செட், ஜெல்லி பீன் 4.1, 4 அங்குல ஐ.பி.எஸ். டச் ஸ்கிரீன், 5 எம்.பி.கேமரா, 1500 mAh திறன் கொண்ட பேட்டரி, 1 ஜி.பி. ராம் மெமரி என அம்சங்கள் கொண்ட இந்த போன் ரூ.9,250க்குக் கிடைக்கிறது.
5. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பன் ஏ76 (Micromax Canvas Fun A76):
1.2 கிகா ஹெர்ட்ஸ் வேக ப்ராசசர், ஜெல்லி பீன் 4.2., டச் ஸ்கிரீன் 5 அங்குல அகலத்தில், 5 எம்.பி.கேமரா, 2000 mAh திறன் கொண்ட பேட்டரி கொண்ட இந்த மொபைல் போனை ரூ.8,300க்கு வாங்கலாம்.
0 comments :
Post a Comment