ஜிமெயில் வழி எஸ்.எம்.எஸ் (SMS)


தொடர்ந்து ஏதேனும் ஒரு புதுமையான வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கூகுள், அண்மையில் ஜிமெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் ஜிமெயில் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். வழங்கும் வசதியைத் தந்துள்ளது. 

இந்தியா உட்பட 54 நாட்டில் உள்ளவர்களுக்கு, அவர்களின் மொபைல் போனுக்கு இதன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். கூகுள் இதற்கான ஒப்பந்தங்களை ஒவ்வொரு நாட்டிலும் மொபைல் சேவை வழங்கும் பெரும்பாலான நிறுவனங்களுடன் மேற்கொண்டுள்ளது. 

இந்த சேவை பயன்படுத்த கட்டணம் இல்லை; முற்றிலும் இலவசமே. ஆனால், மொபைல் சேவை வழங்குபவர்கள், எஸ்.எம்.எஸ். பெறுவதற்கு கட்டணம் வசூலித்தால், எஸ்.எம்.எஸ். பெறுபவர் அதனை மொபைல் சேவை நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டியதிருக்கும். 

இந்த சேவையை எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். முதலில் ஜிமெயிலில் உள்ள நீங்கள் தொடர்பு கொள்ளும் நண்பரின் மொபைல் எண்ணை ஜிமெயில் தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ். செய்திக்கு, உங்கள் நண்பர் பதில் அனுப்பினால், அது ஜிமெயில் உரையாடல் (chat) பகுதியில் செய்தியாகக் கிடைக்கும். 

உங்கள் மொபைல் போனுக்குக் கிடைக்காது. மேலும் நீங்கள் எஸ்.எம்.எஸ். அனுப்ப முயற்சிக்கும் நேரத்தில், உங்கள் நண்பர் ஜிமெயிலைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், உரையாடல் வசதியைப் பயன்படுத்தும்படி ஜிமெயில் அறிவுறுத்தும். 

இருப்பினும் நீங்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். ஒவ்வொரு ஜிமெயில் பயனாளருக்கும், ஒவ்வொரு நாளும் 50 எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதி தரப்படும். அனுப்பும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்.க்கும் ஒன்று கணக்கில் கழிக்கப்படும். எஸ்.எம்.எஸ். பெறும் உங்கள் நண்பர், உங்களுக்குப் பதில் செய்தி அனுப்பினால், உங்கள் கணக்கில் மேலும் 5 அதிகரிக்கப்படும். 

இந்தியாவில் ஏர்டெல் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாததால், இவற்றின் மொபைல் எண்களுக்கு ஜிமெயில் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாது. ஏர்செல், ஐடியா, லூப் மொபைல், எம்.டி.எஸ்., ரிலையன்ஸ், டாட்டா டொகோமோ, டாட்டா இண்டிகாம் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களிடம் பெற்றுள்ள மொபைல் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். 

இன்டர்நெட் வழி எஸ்.எம்.எஸ். செய்தியை இலவசமாக அனுப்பக் கூடிய வசதியை பல தளங்கள் தந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே sendsmsnow.com என்ற தளம் இவ்வகையில் முன்னணியில் இந்தியாவில் இயங்கி வருவது குறித்து, தகவல் வெளியிடப்பட்டது. 

இதே போல சில தளங்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் இந்த சேவையை வழங்கி வருகின்றன. அமெரிக்காவிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ண்ஞுணஞீண்ட்ண்ணணிதீ.ஞிணிட் என்ற தளத்தினைப் பயன்படுத்தலாம். இருப்பினும், மெயில் தளம் ஒன்று இந்த சேவையைத் தருவது கூகுள் மட்டுமே. இந்த ஜிமெயில் குறுஞ்செய்தி சேவையை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.

1. முதலில் ஜிமெயில் தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டில் செல்லுங்கள். வலது பக்க மேல் மூலையில் “Settings” என்பதில் கிளிக் செய்திடவும்(படம்1). 

2. அதன் பின் “Labs” என்பதில் கிளிக் செய்திடவும்(படம்2). பின் “gmark” என்ற பிரிவிற்குச் சென்று, இதனை இயக்க “Enable” என்பதில் கிளிக் செய்திடவும்(படம்3). 

3. இறுதியாக இந்தப் பக்கத்தின் இறுதி வரை சென்று, இந்த மாற்றங்களை சேவ் செய்திடவும் (படம்4). அவ்வளவுதான்! இனி நீங்கள் ஜிமெயில் எஸ்.எம்.எஸ். செய்தி சேவையைப் பயன்படுத்தலாம். இதில் இன்னொரு இயக்கத்தினையும் இயங்குமாறு செய்துவிட்டால், எஸ்.எம்.எஸ். அனுப்புவது இன்னும் எளிதாகும். 

ஜிமெயில் லேப் பகுதியில் உள்ள “Send SMS” என்னும் பகுதிக்குச் சென்று, அதனை “Enable” செய்திடவும். இந்த வசதிக்குப் பெயர் “SMS in Chat Gadget”. இதனை இயக்கிவிட்டால், எஸ்.எம்.எஸ். அனுப்புவது  இன்னும் எளிதாகும்.


2 comments :

திண்டுக்கல் தனபாலன் at October 29, 2012 at 10:33 PM said...

பயனுள்ள பகிர்வு விளக்கத்துடன்... நன்றி...

Thozhirkalam Channel at October 30, 2012 at 11:00 AM said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes