இன்டர்நெட்டின் எதிர்காலம்


இன்டர்நெட் என்பது எந்த ஒரு நாட்டிற்கும் சொந்தம் அல்ல. உலகளாவிய பல நாடுகள் இணைந்து இன்டர்நெட் சொசைட்டி என்ற ஒன்றை அமைத்து இதனை நிர்வகித்து வருகின்றன. 

இந்த அமைப்பில் பல தொழில் நுட்ப குழுக்களும், நாட்டின் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்களும் உள்ளன. இன்டர்நெட்டில் இயங்கும் பெரிய நிறுவனங்கள் அடங்கிய குழுக்களும் இதன் இயக்கம் சார்பாக முடிவெடுத்து அமல்படுத்தி வருகின்றன. 

வரும் டிசம்பரில், 193 அரசுகளின் பிரதிநிதிகள் துபாய்நாட்டில் ஒன்றாகக் கூடி, இனி வருங்கால இன்டர்நெட் இயக்கம் குறித்த முடிவுகளை எடுக்க இருக்கிறார்கள். இது World Conference on International Telecommunications என்ற கருத்தரங்கின் போது நடக்க இருக்கிறது.

இங்கு எடுக்கப்படும் முடிவுகள், உலக அளவில், மொபைல் போன் பயன்படுத்தும் ஏறத்தாழ 600 கோடி மக்களையும், 200 கோடி இன்டர்நெட் பயன்படுத்துபவர்களையும் பாதிக்க இருக்கிறது. 

பொதுவாக, இத்தகைய கருத்தரங்கில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து, சிறிய அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, பின்னர் இந்த மாநாட்டுக் கருத்தரங்கில் முடிவு செய்யப்படும். ஆனால், இதுவரை இல்லாத வகையில், இந்த கருத்தரங்க மாநாட்டு பிரதிநிதிகள் தற்போது இரு வேறு பார்வை உடையவர்களாகப் பிரிந்துள்ளனர்.

ஒவ்வொரு நாட்டிலும், மக்கள் கருத்து மற்றும் படித்தவர்கள் எதிர்பார்ப்பு ஒரு பக்கமும், இன்டர்நெட் இயக்கும் மற்றும் சேவை நிறுவனங்கள் ஒரு பக்கமுமாக கருத்துக்களைக் கொண்டுள்ளன. இது குறித்து மத்திய அரசின் இந்திய தொலை தொடர்புத் துறை செயலாளர் சந்திரசேகரன் கருத்து தெரிவிக்கையில், இரண்டு பக்க விவாதங்களையும் நாங்கள் கேட்டுள்ளோம். இறுதி முடிவு ஒன்றைக் கலந்து ஆய்வு செய்து எடுத்து, மாநாட்டில் தெரிவிக்க உள்ளோம் என்று கூறியுள்ளார். 

1988 ஆம் ஆண்டு வரை, அனைத்து நாடுகளிலும், தொலைபேசி நிறுவனங்கள் அனைத்தும் அரசு வசமே இருந்து வந்தன. அப்போது இன்டர்நெட் வசதி நுகர்வோருக்குத் தரப்படவில்லை. அந்த ஆண்டில் தான், பன்னாட்டளவிலான தொலைதொடர்பு விதிகள் (Inter national Telecom Regulations) வரையறை செய்யப்பட்டன. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் International Telecommunications Union என்ற அமைப்பு மேற்கொண்டது. 

இப்போது பல நாடுகளில் பெரும்பாலான தொலைபேசி மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்கள் தனியார் வசம் உள்ளன. 1995ல், ஒரு கோடியே 60 லட்சம் பேரை சந்தாதாரர்களாகக் கொண்ட இன்டர்நெட் சேவை, இன்று இருநூறு கோடிப் பேருக்கு மேலாக பரவியுள்ளது. தினந்தோறும் உலக அளவில், ஐந்து லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைகின்றனர். 

மாற்றம் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், வரும் டிசம்பரில் மாநாடு கூடுகிறது. இதில் இணையவெளிப் பாதுகாப்பு, தனிநபர் தகவல்கள் திருட்டுப் பயன்பாடு தடுத்தல், மோசடி மற்றும் தேவையற்ற மெயில்கள் போன்ற பல பிரச்னைகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

குறிப்பாக ஆளும் அரசுகளுக்கு தொழில் நுட்ப சாதனங்களின் இயக்கம் மேலான கட்டுப்பாடு அதிகரிக்க உள்ளது. நவீன தொழில் நுட்ப அமலினால், பயனாளர்களுக்கு ஏற்படும் நிதி சுமை குறித்தும் இங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவெடுக்கப்படும். 

பன்னாட்டளவில் பயன்படுத்தக் கூடிய சிம் கார்டுகளுக்கான கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட இந்த மாநாட்டில் செயல் முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.


2 comments :

Thozhirkalam Channel at October 4, 2012 at 3:24 PM said...

நல்ல பகிர்வு,,,

தொடருங்கள் சகோ,,,

திண்டுக்கல் தனபாலன் at October 4, 2012 at 4:24 PM said...

நல்ல முடிவுகள் விரைவில் வரட்டும்... தகவலுக்கு நன்றி...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes