மொபைல் போன் தொழில் நுட்பம்


மொபைல் போன்கள் குறித்த தகவல்களில் நாம் அடிக்கடி சந்திக்கும் சொற்கள், சுருக்குச் சொற்கள் குறித்து இங்கு அறியலாம்.

AGPS – Assisted Global Positioning System:

இன்டர்நெட் மற்றும் அதில் இணைந்த சர்வர்கள் வழியாக தேவையான சாட்டலைட்களிலிருந்து தகவல்களைப் பெற்றுத் தரும் சிஸ்டம். GPS இயக்கக் கூடிய மொபைல் போன்கள் AGPS இல்லாமலேயே தகவல்களைப் பெறும் தகுதி பெற்றவையாகும். 

ஆனால் அதற்கான நேரம் சற்று அதிகமாகும். AGPS பயன்படுத்த உங்கள் மொபைல் போன்களில் இன்டர்நெட் இயக்கும் சேவையைப் பெற்றிருக்க வேண்டும். இதனை உங்களுக்கு மொபைல் போன் சர்வீஸ் தரும் நிறுவனம் வழங்கும்.

Android:

இது கூகுள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட போன். Open Handset Alliance என்னும் அமைப்பின் ஆஸ்தான போன் மாடலாக உள்ளது. இது போன் மட்டுமின்றி ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஆகும். 

இது லினக்ஸ் கெர்னல் கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்டது. இது ஏறத்தாழ ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் தொகுப்பினை ஒத்ததாகும். ஜாவாவுடன் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் குறியீடுகளை இணைத்து இதற்கான கூடுதல் பயன் தரும் புரோகிராம்களை புரோகிராம் எழுதத் தெரிந்த யாவரும் அமைக்கலாம் என்பது இதன் சிறப்பு. முதன் முதலாக இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வந்த மொபைல் போன் எச்.டி.சி. நிறுவனத்தின் எ1 போனாகும். 

Bluetooth:

வயர்லெஸ் தொடர்பினை இது குறிக்கிறது. டேட்டாக்களை மாற்றுவதற்கும் ரிமோட் வகை அணுகுமுறைக்கும் கட்டுப் பாட்டிற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இதன் வகைகள்: Bluetooth 2.0 + EDR : Bluetooth (BT) with Enhanced Data Rate என்பதன் சுருக்கம். இந்த தொழில் நுட்பத்தின் கீழ் புளுடூத் இணைப்பில் உள்ள சாதனங்கள் இடையே மிக வேகமாக தகவல் பரிமாற்றத்திற்கு இது உதவுகிறது. 

A2DP - Advanced Audio Distribution Profile:

இந்த தொழில் நுட்பத்தின் மூலம் புளுடூத் இணைந்த சாதனங்களில் இøணைக்கப்பட்டுள்ள ஹெட்செட்களில் சிறந்த முறையில் ஆடியோ வினை ரசிக்க முடியும். 

AVRCP - Audio/Video Remote Control Profile:

இதன் மூலம் புளுடூத் மூலம் இøணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் இடையே டேட்டா பரிமாற்றத்தினை இன்னும் சற்று விரிவாக மேற்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மீடியா பிளேயரை புளு டூத் மூலம் இணைப்பு பெற்ற மொபைல் போன் மூலம் கட்டுப்படுத்த முடியும். மொபைல் போனில் புளுடூத் மட்டுமின்றி அதில் AVRCP profile இருக்க வேண்டும். 

CDMA - Code division multiple access:

இதுவும் ஒரு வகை மொபைல் போன் இணைப்பு தொழில் நுட்பமாகும். ஜி.எஸ்.எம். என்னும் மொபைல் தொழில் நுட்பம் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும் சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பம் மிகச் சிறந்த மொபைல் தொழில் நுட்பமாக மதிக்கப்படுகிறது. 

இந்த தொழில் நுட்பம் இரண்டாம் உலகப் போரின் போது முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. தற்போது அனைத்து நாடுகளிலும் இந்த தொழில் நுட்பத்தில் இயங்கும் போன்களும் உள்ளன. தொடக்கத்தில் இந்த வகை மொபைல் போன்களில் சிம் கார்ட் போனிலேயே அமைக்கப்பட்டு தரப்பட்டன. தற்போது தனியாகவும் கிடைக்கின்றன. 

CMOS Sensor – Complementary Metal Oxide Semiconductor:

இந்த செமி கண்டக்டர்கள் மொபைல் போன்களில் உள்ள கேமராக்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஏனென்றால் இந்த சென்சார் செயல்பட ஒரு சில பாகங்கள் இருந்தால் போதும். அதனாலேயே மொபைல் போன் போன்ற சிறிய சாதனங்கள் இதனைப் பெரும் அளவில் பயன்படுத்துகின்றன. மேலும் குறைவான மின்சக்தி இவை இயங்கப் போதுமானது. இதன் விலையும் குறைவு.

EDGE - Enhanced Data rates for GSM Evolution:

இது மொபைல் போன்களுக்கான நெட் வொர்க் அமைக்கத் தேவையான தொழில் நுட்பத்தினைக் குறிக்கிறது. இதனை EGPRS அல்லது Enhanced GPRS என்றும் அழைக்கலாம். இது GPRSக்கும் ஒரு படி நவீனமானது. மொபைல் போனில் இன்டர்நெட் பிரவுசிங் அனுபவத்தை வேகமாக வழங்கவல்லது. டேட்டா பரிமாற்றமும் வேகமாக நடைபெறும்.

GSM - Global System for Mobile communications (originally from Groupe Spécial Mobile):

இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மொபைல் போன்கள் தங்களுக்கு மொபைல் சர்வீஸ் தரும் சர்வீஸ் நிறுவனங்களுடன் இணைத்துக் கொள்ள முடியும். அல்லது உலகின் எந்த ஒரு சர்வீஸ் புரவைடருடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். ஜி.எஸ்.எம். மொபைல் போன்கள் சிம் கார்டுடன் பயன்படுத்தப் படுகின்றன.


1 comments :

திண்டுக்கல் தனபாலன் at October 20, 2012 at 11:33 PM said...

விரிவான விளக்கத்திற்கு நன்றி...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes