`ரோமியோ-ஜுலியட்' காதல் வளர்ந்த இடத்தில் `முன்தினம் பார்த்தேனே' படப்பிடிப்பு

`வேட்டையாடு விளையாடு,' `இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' ஆகிய படங்களை தயாரித்த செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் முதல் முறையாக புதுமுகங்களை வைத்து, `முன்தினம் பார்த்தேனே' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இது, ஒரு காதல் படம். தனக்கு பொருத்தமான மனைவியை தேடும் ஒரு இளைஞனின் கதை. மிக பிரமாண்டமான முறையில் இந்த படம் தயாராகி வருகிறது. 2 பாடல் காட்சிகள் இங்கிலாந்திலும், இத்தாலியிலும் சமீபத்தில் படமாக்கப்பட்டது. லண்டனில் தேம்ஸ் நதிக்கரையிலும், இத்தாலியில், ரோமியோ-ஜுலியட் காதல் வளர்ந்த இடமான `வெரோனா'விலும் படப்பிடிப்பு நடந்தது.

இதுவரை யாரும் படமாக்கியிராத டோவர் அரண்மனை, டோவர் பீச் மற்றும் டோவர் சிகரம் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. இத்தாலியில் உள்ள வெனீஸ் நகரிலும் படப்பிடிப்பு நடந்தது.

வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தில், புதுமுகங்கள் சஞ்சய்-ஏக்தா காதல் ஜோடியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் லிஸ்னா, பூஜா, சாய் பிரசாந்த், லட்சுமி, யோகேஸ்வரி, ஜோதி, நிஷா, கிருஷ்ணா, குமரன் ஆகிய புதுமுகங்களும் நடிக்கிறார்கள்.

தமன் சாய் இசையமைக்க, வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, திரைக்கதை-வசனம்-டைரக்ஷன்: மகிழ் திருமேனி


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes