மகனை வெறுக்கும் தாய்?

கமல்ஹாசன் நடித்த "காதலா காதலா', "பம்மல் கே.சம்பந்தம்', "பஞ்சதந்திரம்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஸ்ரீராஜ்லஷ்மி ஃபிலிம்ஸ் பி. லிட். நிறுவனம் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரிக்கும் புதிய படம் "அய்யனார்'. இதில் "மிருகம்' படத்தில் நடித்த ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். "வால்மீகி' படத்தில் நடித்த மீரா நந்தன் கதாநாயகியாக நடிக்கிறார். சந்தானம், சூரி, ஜெயபிரகாஷ், சரண்யா, ராஜஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

பிரேம்-ரம்யா நடித்து பெரும் வெற்றி பெற்ற "ஜொதேகாரா' கன்னடப் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன், இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் இயக்கும் முதல் தமிழ்ப் படம் இது. "அய்யனார்' பற்றி கேட்டபோது...

""இது ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையேயான வித்தியாசமான சென்டிமெண்ட் கதை. ஒரு வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களிடையே பாரபட்சம் காட்டாமல் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்தான் தாய். பிள்ளை எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும் ஒரு தாய்க்கு தன் மகன் சொக்கத் தங்கம்தான். இப்படிப்பட்ட குணம் படைத்த ஒரு தாய், தன்னுடைய மகன்களில் ஒருவரை நிராகரிக்கிறார். அதற்கான காரணம், அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றை புதுமையான கதைக் களத்தில் சொல்லுவதுதான் "அய்யனார்' கதை. இதில் கமர்ஷியல் விஷயங்களை யதார்த்தம் மீறாமல் காட்டுகிறோம்'' என்றார் இயக்குநர் ராஜமித்ரன்.

இசை -தமன். பாடல்கள் -நா.முத்துக்குமார், தாமரை. ஒளிப்பதிவு -சேது ஸ்ரீராம். கலை -ஸ்ரீ. படத்தொகுப்பு -மு.காசிவிஸ்வநாதன்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes