விண்டோஸ் 8 - புதிய மவுஸ் மற்றும் கீ போர்ட்

சர்பேஸ் டேப்ளட் மூலம் ஹார்ட்வேர் பிரிவில் மைக்ரோசாப்ட் இறங்கப் போகிறது என்ற செய்தியைக் கேட்டு ஆரவாரம் செய்தவர்களுக்குத் தீனி போடும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் கிடைக்கும் கீகளுடன் இயங்கும் வகையில், புதிய வகை மவுஸ் மற்றும் கீ போர்ட்களை மைக்ரோசாப்ட் தயாரித்து வழங்க இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாகவே மைக்ரோசாப்ட் கீ போர்டுகளையும், மவுஸ்களையும் தயாரித்து வழங்கி வருகிறது.

ஆனால், இப்போது வர இருக்கும் கீ போர்ட்களும், மவுஸும் சற்று மாறுபாடு கொண்டதாக இருக்கப் போகின்றன. Wedge, the Sculpt, மற்றும் the Touch என மூன்று மாடல்களில் இவை வெளியாகின்றன. இவற்றின் பயன்பாடு பெரும்பாலும் விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களின் செயல்பாட்டினை ஒட்டியே அமைந்துள்ளதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.

சென்ற ஜூலை 30ல் இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், புளுடூத் வசதியுடன் கூடிய இரண்டு மாடல் கீ போர்ட் மற்றும் மவுஸ் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவை Wedge Touch Mouse, the Wedge Mobile Keyboard, the Sculpt Touch Mouse, and the Sculpt Mobile Keyboard எனவும் கூறப்பட்டது.

இவை விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் மட்டுமின்றி, விண்டோஸ் ஆர்.டி., விண்டோஸ் 7 மற்றும் டேப்ளட் பிசிக்களுடன் இணைந்து செயலாற்றும். மேலும் மேக் சிஸ்டம் ஓ.எஸ்.எக்ஸ் பதிப்பு 10.6 மற்றும் 10.7 ஆகியவற்றுடனும் இவை இயங்கும். Wedge Touch Mouse மற்றும் Sculpt Touch Mouse ஆகியவற்றில், நாம் டேப்ளட் பிசி ஒன்றின் டச் ஸ்கிரீன் திரையில் விரல்களைக் கொண்டு என்ன செயல்பாடுகளை மேற்கொள்வோமோ, அவற்றை மேற்கொள்ளலாம்.

Wedge Touch Mouse நான்கு வகையான டச் ஸ்குரோலிங் இயக்கம் கொண்டதாக இருக்கும். நம் பாக்கெட்டில் எடுத்துச் செல்லும் வகையில், அளவில் சிறியதாக இருக்கும். புளுடூத் 4 தொழில் நுட்பம் இதில் இயங்கும். இதனால், இதனை இணைக்கத் தேவையான கேபிள் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

புளுடூத் இயக்கத்துடன், ப்ளூ ட்ராக் இயக்கமும் இதில் கிடைக்கும். இதனால், எந்த தளத்திலும் இதனை இயக்கலாம். சிறப்பான செயல்பாடு கிடைக்கும். மேலும் இதில் உள்ள பேக் அப் (Backpack Mode) மூலம் இதன் மின் சக்தி தேவையற்ற வகையில் வீணாவது தடுக்கப்படுகிறது. இதன் விலை 70 டாலர் அளவில் இருக்கலாம்.

Wedge Mobile கீ போர்ட் தடிமன் குறைவாகக் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தின் ஹாட் கீகள் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மீடியா இயக்குவதற்கான கீகளும் தரப்பட்டுள்ளன. இதிலும் புளுடூத் இயக்கம் கிடைக்கிறது. இந்த கீ போர்டில் கவர் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதனை டேப்ளட் பிசியின் ஸ்டாண்டாகவும் பயன்படுத்தலாம். இதன் விலை 80 டாலர் என்ற அளவில் இருக்கும்.

தடிமன் பற்றிக் கவலை இல்லை என எண்ணுபவர்களுக்கு Sculpt கீ போர்ட் உகந்ததாக இருக்கும். Sculpt கீ போர்ட் வழக்கமான கீ போர்டாக வடிவமைக்கப் பட்டு, சில கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. நான்கு முனைகளும் வளைவாக இருப்பதால், இதனை வைத்து இயக்கப் போதுமான இடம் மட்டும் இருந்தால் போதும்.

விண்டோஸ் 8 சிஸ்டம் ஹாட் கீகள் தனியே தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 10 மாதங்களுக்கு மின் சக்தியைத் தரக் கூடியதாக அமைந்துள்ளது. கீ போர்டிலிருந்து எந்த இயக்கமும் கம்ப்யூட்டருக்கு குறிப்பிட்ட காலம் வரை செல்லவில்லை எனில், மின் சக்தி மிச்சப்படுத்தும் வகையில் ஸ்லீப் மோடுக்குத் தானாகச் சென்றுவிடுகிறது.

மேலே கூறப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் இணைந்து இதனை இயக்கலாம். விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்துடனும் இதனை இயக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இதன் விலை 50 டாலராக இருக்கலாம்.

Sculpt மவுஸ் நான்கு வழி இயக்கம் கொண்டுள்ளது. புளுடூத் இயக்கம் உள்ளடக்கியது. இதன் விலை 50 டாலராக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் மைக்ரோசாப்ட் டச் மவுஸ் (Touch Mouse) ஒன்றையும் தருகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அசைவுகள் வழி இயக்கத்திற்கு இது துணை புரிகிறது. ஸ்வைப்பிங், இரு விரல் கொண்டு இயக்குவது, மூன்று விரல் கொண்டு ஸூம் செய்வது, முன்னரும் பின்னரும் செல்ல, போன்ற செயல்பாடுகளை இதன் மூலமும் மேற்கொள்ளலாம். இதன் விலை 80 டாலர் அளவில் இருக்க வாய்ப்புள்ளது.

இந்த சாதனங்களினால், இனி கம்ப்யூட்டர் வைத்து இயக்கும் டேபிள்களில் கூட மாற்றங்கள் ஏற்படலாம்.

வயர்லெஸ் மற்றும் டச் ஸ்கிரீன் செயல்பாட்டுக்கு உதவும் வகையில் கீ போர்டும் மவுஸும் அமைய இருப்பதால், மாற்றங்களையும், சாதனங்களை இயக்கும் வகையில் முற்றிலும் புதிய வழிகளையும் எதிர்பார்க்கலாம். இந்த சாதனங்கள் அனைத்துமே, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்துபவர்களின் வேலைப் பளுவினை எளிதாகவும், இனிமையாகவும் அமைக்க எடுத்துக் கொள்ளும் தீவிர முயற்சிகளின் அடையாளங்களே.

எப்படியாவது, தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மக்கள் விரும்பும் சிஸ்டமாக மாற்ற, அனைத்து வழிகளிலும் மைக்ரோசாப்ட் திட்டமிட்டு உழைத்திடும் என நாம் எதிர்பார்க்கலாம். இவற்றின் மூலம் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெற்றியை ஈட்டலாம்.


1 comments :

திண்டுக்கல் தனபாலன் at August 14, 2012 at 7:19 AM said...

விரிவான தகவல்கள்...
விளக்கம் அருமை...

வாழ்த்துக்கள்... தொடருங்கள்... நன்றி...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes