விண்டோஸ் 7 - பயனாளர் மாற்றம்

விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்கத் தொடங்கியவுடன், மாறா நிலையில் ஓர் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்குகிறது. இது ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இருக்க வேண்டும். அதன் பின்னர் பயனாளர் அக்கவுண்ட் (standard user account) எனப் பலவற்றை உருவாக்கலாம்.

இவர்களுக்குக் கம்ப்யூட்டரில் உள்ள வசதிகளைப் பயன்படுத்துவதில் சில வரையறைகளை அமைக்கலாம். இது மட்டுமின்றி, இன்னொருஅட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டையும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் அமைத்துக் கொள்ளலாம்.

இருவேறு அக்கவுண்ட்களிடையே பயனாளர் மாறிக் கொள்ளலாம். இதனை எப்படி உருவாக்குவது எனப் பார்க்கலாம்.

எப்படி ஒரு பயனாளர் அக்கவுண்ட்டினை, அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டாக மாற்றலாம் என இங்கு காணலாம்.

1. கண்ட்ரோல் பேனலைத் திறந்து “User Account” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.

2. அல்லது ஸ்டார்ட் மெனுவில் “User Account” என டைப் செய்து தேடலாம்.

3. அடுத்து, நாம் அக்கவுண்ட் வகையினை மாற்றிக் கொள்ள, “change your account type” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.

4. இன்னொரு பயனாளர் அக்கவுண்ட்டில் செயல்பட “Manage another account” என்பதில் கிளிக் செய்திடவும்.

5. பயனாளருக்கான ஐகானில் (“user’s icon”) டபுள் கிளிக் செய்திடவும். அல்லது “Change the account type” என்பதில் ஒருமுறை கிளிக் செய்திடவும். இதன் மூலம் இப்போது ஒரு புதிய விண்டோ “Select a new account type for [xyz user]” என்ற தலைப்பில் கிடைக்கும். இதில் இரண்டு ஆப்ஷன்கள் –– “Administrator” or “Standard user” –– கிடைக்கும்.

6. தேவையான ஆப்ஷன் தேர்ந்தெடுத்தவுடன் “Change account type” என்பதில் கிளிக் செய்திடவும்.
இதே போல அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டில் இருந்து பயனாளர் அக்கவுண்ட்டிற்கும் மாறிக் கொள்ளலாம்.


1 comments :

krishy at April 19, 2012 at 1:02 AM said...

அருமையான பதிவு

வாழ்த்துகள்..

உங்கள் பதிவுகளை மேலும் பிரபலபடுத்த தமிழ் DailyLib இணைத்து பயன் பெறுங்கள்
DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ் DailyLib

To get the Vote Button

தமிழ் DailyLib Vote Button

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் DailyLib

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes