மேஸ்ட்ரோ பட்ஜெட் டச்ஸ்கிரீன் மொபைல்

நம்ம பர்ஸுக்குக் கட்டுப்படியாகாது என்று பலரும் எண்ணி விலகிச் செல்லும், டச்ஸ்கிரீன் மொபைல் போன்களைத் தரும் பழக்கத்தைக் கொண்டுள்ள மேக்ஸ் மொபைல்ஸ் நிறுவனம் , அண்மையில் இன்னுமொரு போனை Maestro MT255 என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் 3.2 அங்குல அகலத்தில் தொடுதிரை தரப்பட்டுள்ளது. குறைவான தடிமனில், அழகான வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் போன் மல்ட்டி மீடியா மற்றும் சோஷியல் நெட்வொர்க்கிங் வசதிகளைக் கொண்டுள்ளதாய் அமைக்கப் பட்டுள்ளது.


இரண்டு சிம்களை இயக்கக்கூடியது. இரண்டு கேமராக்கள் (2 எம்.பி. திறன் மற்றும் பிளாஷ் கொண்டது), eBuddy, Bolt & Nimbuzz ஆகிய அப்ளிகேஷன்கள் தரப்பட்டுள்ளன.

இதன் King Movie player வீடியோ பைல்களை பத்தில் ஒரு பங்கு என்ற அளவில் சுருக்கி இயக்கக் கூடியவை.

இதன் பேட்டரி 1000 mAh திறன் கொண்டதாய் அமைந்துள்ளது. இதன் மெமரியினை 8 ஜிபி வரை அதிகப் படுத்தலாம். புளுடூத் மற்றும் MMS/WAP /GPRS ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன.

MP3/ AAC/ WAV / M4A ஆகிய ஆடியோ பார்மட்டுகளையும், MP4 / 3GP / AVI வீடியோ பார்மட்களையும் இந்த போன் சப்போர்ட் செய்கிறது. இதன் எப்.எம். ரேடியோவினை நேரம் செட் செய்து இயக்கலாம்.

தற்போது இதனை வாங்கினால், 4 ஜிபி மெமரி கார்ட் மற்றும் ரூ.2,499 மதிப்புள்ள ரீபாக் ஷூ பரிசாகத் தரப்படுகிறது.

மேக்ஸ் மொபைல்ஸ் டீலர்களிடமும், பிளாநெட் எம், குரோமா, ஹைப்பர்சிட்டி, ஸ்டார் பஸார், இந்திய கடற்படை கேண்டீன், ரிலையன்ஸ் வெப் வேர்ல்ட், நெக்ஸ்ட் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிரபலமான மொபைல் விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes