புதிய கூகுள் குரோம் பிரவுசர் 16

போட்டி என்று எடுத்துக் கொண்டால், குரோம் பிரவுசரை மிஞ்சிட யாரும் இல்லை என்று சொல்லும் வகையில், கூகுள் தன்னுடைய குரோம் பிரவுசரின் பதிப்பு 16னை வெளியிட்டுள்ளது.

அதிக கூடுதல் வேகத்துடன் இயங்குவதுடன், அனைத்து நவீன இணையத் தொழில் நுட்பத் தினையும் இணைத்து செயல்படுவதுட் இதன் முதன்மைச் சிறப்பாக உள்ளது.

பயர்பாக்ஸ் பிரவுசரின் சில நுண்ணியமான செட்டிங்ஸ் அமைப்பு இதில் இல்லை என்றாலும், புதிய தொழில் நுட்பங்களான நேடிவ் கிளையண்ட் (Native Client) மற்றும் எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்துடன் இயங்குவதில் சிறந்த பிரவுசராக இது விளங்குகிறது.

தற்போது குரோம் பிரவுசர், குரோம் பீட்டா, குரோம் டெவலப், குரோம் கேனரி மற்றும் குரோம் ஸ்டேபிள் என நான்கு வகைகளில் கிடைக்கிறது. இங்கு குரோம் ஸ்டேபிள் குறித்து தகவல்கள் தரப்படுகின்றன.

இணையத்தின் புதிய தரப்பட்டுத் தப்பட்ட வரைமுறைகளுடன் இணைந்த செயலாக்கம், தானாக முகவரிகள் மற்றும் சொற்களை அமைக்கும் திறன், மற்ற பிரவுசர்கள் தரும் சிறப்பு களைச் சீராக்கி தரும் போட்டி செயல்பாடு, குறைந்த அளவில் பைல், அசாத்திய வேகம் எனப் பல்வேறு சிறப்புகளுடன் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது.

Native Client தொழில் நுட்பத்தினை தன் பதிப்பு 14ல் கூகுள் வழங்கியது. NaCl எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த தொழில் நுட்பம் மூலம் சி மற்றும் சி ப்ளஸ் ப்ளஸ் குறியீடுகளை, ஒரு பிரவுசரில் பாதுகாப்பாக இயக்கலாம். ண்ச்ணஞீஞணிது எனப்படும் இரண்டு அடுக்கு நிலையில், பாதுகாப்பான இயக்கம் கிடைக்கிறது. தொடக்கத்தில் குரோம் இணைய ஸ்டோரில் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களில் மட்டும் இது தரப்பட்டது. பதிப்பு 15ல் புதிய டேப்கள் வடிவமைப்பு அறிமுகமானது.

குரோம் 16 பல முனைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஒரே நேரத்தில் பல அக்கவுண்ட்களைத் திறந்து வைத்துப் பயன்படுத்தும் வசதி கிடைக்கிறது. அதாவது, ஒரே நேரத்தில் பல ஜிமெயில் அக்கவுண்ட்களைத் திறந்து வைத்துப் பயன்படுத்தலாம். ஆனால் இதில் சிக்கல் உள்ளது.

ஒருமுறை நீங்கள் உங்கள் அக்கவுண்ட்டில் நுழைந்து மெயில்களைப் பார்த்துவிட்டால், அக்கவுண்ட் தகவல்கள் கூகுள் சர்வர்களில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால், அடுத்து நீங்கள் உங்கள் அக்கவுண்ட் தகவல்களைத் தராமலேயே, மெயில்கள் உங்களுக்கு கிடைக்கும்; குரோம் பயன்படுத்தும் மற்றவர்களுக்கும் கிடைக்கும்.

பதிப்பு 16 பதியப்படுவது இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்திலேயே நடைபெறுகிறது. டேப்கள் இன்னும் மேலாக இடம்பிடித்துள்ளன. ஆம்னிபாக்ஸ் (Omnibox) என அழைக்கப்படும் தள முகவரியிடம் மிகவும் குறைந்த இடத்தைக் கொண்டுள்ளது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே கண்ட்ரோல் பட்டன்கள் கிடைக்கின்றன. பல முக்கிய செயல்பாடுகளுக்கானபட்டன்களும் டூல்ஸ் துணை மெனுவில் (Tools submenu) மறைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

பயர்பாக்ஸ் பிரவுசர் தன் ஆட் ஆன் தொகுப்புகள் மூலம், அதன் தோற்றத்தைப் பல வகைகளில் மாற்ற வசதி தருகிறது. ஆனால் குரோம் பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்புகள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது. இதனால் அனைவருக்கும் ஒரே மாதிரியான பிரவுசர் தோற்றமே கிடைக்கிறது. சைட்பார் போன்ற வசதிகள் இதில் இல்லை. இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்ட் திறக்கையில், ஒவ்வொருவருக்கான ஐகான் மேல் இடது மூலையில் டேப்களின்
வரிசையில் காட்டப்படுகின்றன.

குரோம் பிரவுசரின் வசதிகள் அனைத்தையும்,நேவிகேஷன் பாரின் வலது பக்கம் உள்ள பைப் ரிஞ்ச் ஐகான் கிளிக் செய்து பிரிபரன்சஸ் (Preferences) மெனு வழியாகப் பெறலாம். பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. டேப் பிரவுசிங், புதிய விண்டோ உருவாக்கம், இன்காக்னிடோ (Incognito)என அழைக்கப்படும் பிரைவேட் பிரவுசிங், எக்ஸ்டன்ஷன் சப்போர்ட் மற்றும் பிற வழக்கமான பிரவுசிங் வசதிகள் கிடைக்கின்றன. பிரைவேட் பிரவுசிங் மூலம் குக்கீ வழி நம் தேடல்கள் மற்றும் தளங்களைக் கண்டறிவது தடுக்கப்படுகிறது.

குரோம் பிரவுசர், ஆப்பிள் சபாரி பயன்படுத்தும் ஓப்பன் சோர்ஸ் இயக்கமான வெப்கிட் சாப்ட்வேர் தொகுப்பினையே பயன்படுத்துகிறது. ஆனால், கூகுள் குரோம் தனக்கே உரித்தான வகையில் சில மாறுதலான புரொகிராம்களையும் தன்னு டன் இணைத்துள்ளது.

குரோம் பிரவுசரின் டேப்கள்தான் அதன் மிகச் சிறப்பான அம்சமாகும். அவற்றைப் பிரித்து எடுக்கலாம். அதே போல தனித்தனி விண்டோக்களுடன் அவற்றை மாற்றிக் கொள்ளலாம். தனியே பிரிக்கப்பட்ட ஒரு டேப்பினை எங்கும் இழுத்துச் சென்று ஒட்ட வைக்கலாம். ஒவ்வொரு டேப்பின் இயக்கமும் தனியான இயக்கமாக உள்ளது. இதனால், ஒரு டேப்பின் இயக்கம் முடங்குகையில், மற்றவை பாதிக்கப் படுவதில்லை.

குரோம் பிரவுசரில் திறக்கப்படும் டேப்களின் எண்ணிக்கை 30 ஐத் தாண்டுகையில், இதன் இயக்கம் சற்று மந்தப்படுத்தப்படுகிறது. ஆனாலும், இது பெரும்பாலும், கம்ப்யூட்டரின் ப்ராசசர் திறனைப் பொறுத்தே அமைகிறது.

குரோம் பிரவுசரின் சில வசதிகள் மிக மென்மையாகக் கையாளப்பட்டு இயக்கப் படுகின்றன. எடுத்துக்காட்டாக, இணையப் பக்கம் ஒன்றில் தகவல்களைத் தேடுகையில், பிரவுசரின் வலது மூலையில் டெக்ஸ்ட் டைப் செய்வதற்கான கட்டம் திறக்கப்படுகிறது. சொல் டைப் செய்திடுகையில் அதன் எழுத்துக்களைப் பின்பற்றி ஏற்கனவே மேற்கொண்ட தேடல்கள் காட்டப் படுகின்றன. அவை இணையப் பக்கத்திலும் ஹைலைட் செய்யப் படுகின்றன.

பயர்பாக்ஸ் பிரவுசரைப் போலவே சர்ச் இஞ்சின் மற்றும் அவற்றை நம் வசப்படுத்துவதில் குரோம் நமக்கு வசதிகளைத் தருகிறது. எந்த சர்ச் இஞ்சின் நம்முடைய மாறா நிலை சர்ச் இஞ்சினாக இருக்க வேண்டும் என்பதனையும், ஷார்ட் கட் கீ தொகுப்புகளையும் வரையறை செய்திடலாம். கூகுள், பிங்கோ மற்றும் யாஹூ தளங்களுக்கான ஆப்ஷன்கள் பிரவுசரிலேயே கிடைக்கின்றன.

எக்ஸ்டன்ஷன் மேனேஜர், புக்மார்க் மேனேஜர் மற்றும் டவுண்லோட் மேனேஜர் ஆகியவை புதிய டேப்களில் கொடுக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் தேடல், நீக்கல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, புக்மார்க் மேனேஜரில் மவுஸ் கர்சர் மேலாகச் செல்கையில், அந்த இணையப்பக்கத்தின் முகவரி காட்டப் படுகிறது. தேவைப்படின் ஒரு முகவரியை அதில் நிலையாக அமைக்கலாம்.

தானாக அப்டேட் செய்திடும் வசதி இதில் தரப்பட்டுள்ளது. இதனால், பிரவுசர் அப்டேட் செய்யப்பட்ட பின், பழைய பதிப்பிற்கு மாற இயலவில்லை. ஆனால், குரோம் பிரவுசரைப் பொறுத்தவரை, யாரும் முந்தைய பதிப்பிற்கு மாற வேண்டிய சூழ்நிலையைச் சந்தித்ததில்லை. அடுத்ததாக, கூகுள் தரும் மொழி பெயர்ப்பு வசதி இந்த பிரவுசரில் தானாகவே இணைத்துத் தரப்படுகிறது.

பிரவுசர் இயக்கத்தில் எச்.டி.எம்.எல்.5 தொழில் நுட்பத்தினை அமல் படுத்தியதில் முன்னிலையில் இயங்கி வருகிறது. பாதுகாப்பினைப் பொறுத்த வரை, குரோம் பிரவுசர் தானாகவே, மோசமான இணைய தளங்களை தடுத்து ஒதுக்கி வைக்கிறது; ஆபத்து கொண்டவை என அடையாளம் காட்டி வைக்கிறது.

வெப்கிட் தொழில் நுட்பம் மற்றும் கூகுளுக்குச் சொந்தமான வி8 ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் இஞ்சின் இணைந்து, குரோம் பிரவுசர் அதிவேகத்தில் செயல்பட திறன் அளிக்கின்றன. இதனைப் பல பிரவுசர் ஆய்வு நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. அதிவேகமான முதல் பிரவுசர் என சான்றிதழும் கொடுத்துள்ளன. வேகமான, பாதுகாப்பான மற்றும் எளிமையான இந்த பிரவுசரை இயக்கிப் பார்த்து நீங்களும் இதனோடு உங்கள் இணையப் பயணத்தைத் தொடரலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes