பிப்ரவரி 23ல் சாம்சங் கேலக்ஸி S5


சாம்சங் நிறுவனத்தின் அடுத்த காலக்ஸி வரிசை மொபைல் போன் குறித்து பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

2014 ஆம் ஆண்டில், சாம்சங் பல மாற்றங்களைத் தன் போன்களின் வடிவமைப்பிலும், இயக்கத்திலும் கொண்டு வர இருப்பதாகவும், அதன் தொடக்கமாக கேலக்ஸி 5 இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. 

ஸ்பெயின் நாட்டில், பார்சிலோனா நகரில், விரைவில் நடைபெற இருக்கும் உலக அளவிலான மொபைல் கருத்தரங்கில், Mobile World Congress (MWC) பிப்ரவரி 23 அன்று இது வெளியாகலாம் என்று பலரும் உறுதியாக எதிர்பார்க்கின்றனர். 

வர்த்தக ரீதியாக வரும் ஏப்ரலில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த போனின் விலை காலக்ஸி எஸ்4 விலை அளவிலேயே இருக்கும் என்று தெரிகிறது. 

இது இரண்டு வடிவில் அமைக்கப்படும். உலோக கவசத்துடன், உயர் ரகமாகக் கூடுதல் விலையிலும், வழக்கமான பிளாஸ்டிக்கில் அமைக்கப்பட்டு, வழக்கமான விலையிலும் இது இருக்கலாம். 

உலோகக் கவசத்துடன் வடிவமைக்கப்படும் எஸ் 5, சாம்சங் காலக்ஸி எப் (Samsung Galaxy F) என அழைக்கப்படலாம். இதன் சிறப்பம்சங்கள் குறித்து வந்த வதந்தித் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இதன் திரை 5.25 அங்குல அளவில் Super AMOLED டிஸ்பிளேயுடன் இருக்கும். பிக்ஸெல் அளவு 2560 × 1440 ஆக இருக்கலாம். இந்த போனை வடிவமைப்பதில், புதிய பொருள் ஒன்று பயன்படுத்தப்படும் என்றும், அதனால், அது வளையும் தன்மையை இந்த போனின் திரைக்குக் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த போனில் சாம்சங் நிறுவனத்தின் டச்விஸ் சாப்ட்வேர் தொகுப்பின் புதிய பதிப்பு, நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் கிடைக்கும். 

விரல் ரேகை ஸ்கேனர் இருக்கும். கேமரா 16 எம்.பி. திறன் மற்றும் ISO CELL சென்சார் கொண்டு கிடைக்கும். ப்ராசசர் ஸ்நாப்ட்ரேகன் 800 அல்லது நியூ எக்ஸைனோஸ் ஆக இருக்கலாம். ராம் மெமரி 3 ஜிபி தரப்படும். இதன் பேட்டரி 4000 mAh திறனுடன் இருக்கும்.

இந்த போனின் மொத்த எண்ணிக்கையிலான உற்பத்தி ஜனவரியில் தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes