சற்றுக் குறைந்த விலையில் 3ஜி ஸ்மார்ட் போனைத் தேடுபவர்கள், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் போன்கள் பக்கம் நிச்சயம் சென்று பார்ப்பார்கள்.
தொடர்ந்து இரண்டு சிம் இயக்கத்துடன் பல 3ஜி மொபைல் போன்களை தன் கேன்வாஸ் வரிசையில் மைக்ரோமேக்ஸ் வெளியிட்டு வருகிறது.
அண்மையில் வெளியான மைக்ரோமேக்ஸ் ஏ 88 கேன்வாஸ் மியூசிக், இந்த வகையில் அனைவரும் விரும்பும் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு சிம் இயக்கம், ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.1.1 சிஸ்டம், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் ப்ராசசர், 4.5 அங்குல அகலத்தில் டி.எப்.டி. மல்ட்டி டச் ஸ்கிரீன் திரை, லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 512 எம்.பி. ராம் மெமரி, 4 ஜிபி ரீட் ஒன்லி மெமரி, நெட்வொர்க் இணைப்பிற்கு எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., வை-பி, A2DP இணைந்த புளுடூத் ஆகியவை தரப்பட்டுள்ளன.
5 எம்.பி. திறன் கொண்ட விஜிஏ கேமரா, டூயல் எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டு இயங்குகிறது. இதன் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது.
எம்.பி.3 மற்றும் எம்.பி. 4 பிளேயர், பதிந்திடும் வசதி கொண்ட எப்.எம். ரேடியோ, அக்ஸிலரேட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவையும் தரப்பட்டுள்ளன.
எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதிகள் தரப்பட்டுள்ளன.
வேர்ல்ட் கிளாக், மல்ட்டிபிள் அலாரம், கால்குலேட்டர், காலண்டர், ஆட்டோ பவர் ஆன்/ ஆப் போன்ற பல வசதிகளும் கிடைக்கின்றன.
இதன் லித்தியம் அயன் பேட்டரி 1800 mAh திறனுடன், தொடர்ந்து 5 மணி நேரம் பேசும் வசதி அளிக்கிறது. மின் சக்தியை 260 மணி நேரம் தக்க வைக்கிறது.
0 comments :
Post a Comment