எஸ்.எம்.எஸ். வழி ரீசார்ஜ்

உங்களுடைய பிரீ பெய்ட் போனில் சார்ஜ் பணம் தீர்ந்து, உங்களால் குறிப்பிட்ட நிறுவன விற்பனை மையம் சென்று ரீ சார்ஜ் செய்ய முடியவில்லையா? கவலையே வேண்டாம். ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி உங்கள் பிரீபெய்ட் அக்கவுண்ட்டை ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம்.

Mobikwik.com என்ற பெயரில் உள்ள தளம் இந்த வசதியைத் தருகிறது.'Recharge through SMS' என்ற சேவையை இது அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முதலில் இந்த தளம் சென்று உங்கள் பெயரில் ஓர் அக்கவுண்ட் திறக்க வேண்டும்.

அதன் பின் உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் நீங்கள் விரும்பும் பணத்தை கிரெடிட் செய்திட வேண்டும். நீங்கள் பின்னர் மேற்கொள்ளப் போகும் பண அளவிற்கு ஏற்றபடி இதில் பணம் செலுத்த வேண்டும்.

பின்னர் ரீசார்ஜ் தேவைப்படும்போது 9711981981என்ற மொபிவிக் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். எஸ்.எம்.எஸ். செய்தி குறிப்பிட்ட பார்மட்டில் இருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக 9444110303 என்ற எண்ணுக்கு ரூ.100 க்கு ரீசார்ஜ் செய்திட வேண்டும் என விரும்பினால், RC 100 9444110303 என டைப் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.

தற்போது இந்த சேவை இந்திய மொபைல் போன்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. முன்பே குறிப்பிட்ட நாளில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என எண்ணினால், அதற்கும் நாள் குறித்து செட் செய்திடலாம். Axis Bank போன்ற வங்கிகள் இந்த சேவைய வழங்கினாலும், மொபிவிக் மொபைல் ரீசார்ஜ் சேவைக்கு மட்டும் செயல்படுகிறது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes