ஆப்பிள் அல்வா

தேவையான பொருட்கள்
வே‌ண்டியவை

ஆப்பிள் - 3
கோதுமை மாவு - 250 கிராம்
பால் - 250
நெய் - 150
சர்க்கரை - 500 கிராம்
முந்திரி - 10
பாதாம் - 10
ஏலகாய் பொடி - 1/2 ஸ்பூன்
கேசரிப் பவுடர் - 1/2 ஸ்பூன்
செய்முறை
ஆப்பிள் அல்வா
செ‌ய்யு‌‌ம் முறை

ஒரு கனமான வாணலியில் பாலை ஊற்றி அதில் ( துருவிய ) ஆப்பிளை போட்டு நன்கு வேகவிடவும்.

சிறிது பாலில் கோதுமை மாவை கரைத்து நன்கு வெந்த ஆப்பிள் கலவையில் ஊற்றி கேசரிப் பவுடரையும் சேர்த்து கிளறவும்.
அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து நன்கு கிளறி. சிறிது இறுகியதும் அதில் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்
அல்வா பதத்திற்க்கு வந்ததும் முந்திரி, ஏலகாய் பொடி, பாதாம் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.

ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவைத்து நமக்கு பிடித்த வடிவில் வெட்டி அத்துடன் நறுக்கிய முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

சுவையான ஆப்பிள் அல்வா தயார்


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes