ரிலையன்ஸ் ஜிஎஸ்எம் புதிய திட்டம் அறிமுகம்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஜிஎஸ்எம் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிறுவனத்தின் ஜிஎஸ்எம் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு லைஃப்டைம் இலவச வசதி அளிக்கப்படுகிறது. இதன்படி ஜிஎஸ்எம் சேவையை 2021-ம் ஆண்டு வரை செயல்படுத்த இந்நிறுவனம் லைசென்ஸ் பெற்றுள்ளது. எனவே 2021 வரை ஆயுள்கால இலவச சேவையை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

இது தவிர உள்ளூர் அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்துக்கு 50 காசுகளும், எஸ்டிடி அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ. 1 கட்டணம் என நிர்ணயித்துள்ளது.

அதிக எண்ணிக்கையில் எஸ்டிடி அழைப்புகள் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு திட்டங்களையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதைத் தேர்வு செய்வோருக்கு நிமிஷத்துக்கு 55 காசுகள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes