பி.இ.: இந்த ஆண்டு 25 ஆயிரம் இடங்கள் காலி

பி.இ. படிப்பில் இந்த ஆண்டு சுமார் 25 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி.இ. படிப்பில் இன்னும் 45,420 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப இந்த மாதம் 11-ம் தேதி வரை கவுன்சலிங் நடைபெறுகிறது. இதில் சுமார் 35 ஆயிரம் மாணவர்கள் அழைக்கப்பட உள்ளனர்.

பொதுவாக, பி.இ. கவுன்சலிங்குக்கு கடந்த நாள்களில் தினசரி அழைக்கப்பட்ட மாணவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் வரவில்லை.

இந்த நிலையில், இரண்டாம் கட்ட கவுன்சலிங்குக்கு வராதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாள்களாக 43 சதவீதம் அளவுக்கு மாணவர்கள் கவுன்சலிங்குக்கு வரவில்லை. எனவே, கவுன்சலிங்கில் பங்கேற்று பி.இ. இடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்களை வைத்து கணக்கிடும்போது, பி.இ. படிப்பில் இந்த ஆண்டு சுமார் 25 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் எனத் தெரிகிறது.

16 பிரிவுகளில் 100 %: பி.இ. படிப்பில் ஏரோநாடிக்கல், சிவில், மெக்கானிக்கல் என 44 பாடப் பிரிவுகள் உள்ளன. இவற்றில் 16 பாடப் பிரிவுகளின் 100 சதவீத இடங்கள் கவுன்சலிங்கில் நிரம்பியுள்ளன.

இது தவிர, 5 பாடப் பிரிவுகளில் 90 முதல் 97 சதவீத இடங்களும், 2 பாடப் பிரிவுகளில் 80 முதல் 86 சதவீத இடங்களும் நிரம்பியுள்ளன.

அரசு ஒதுக்கீட்டில் 1.09 லட்சம் பி.இ. இடங்கள்: பி.இ. படிப்பில் இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் 1.09 லட்சம் பி.இ. இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான ஒற்றைச் சாளர பொதுப் பிரிவு கவுன்சலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.

செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்ற கவுன்சலிங்குக்கு 89,597 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 25,558 பேர் கவுன்சலிங்குக்கு வரவில்லை. 63,752 பேர் மட்டுமே கவுன்சலிங்கில் பங்கேற்றனர்.

கவுன்சலிங்குக்கு வந்திருந்தவர்களில் 285 பேர் பி.இ. இடங்களைத் தேர்வு செய்யவில்லை. 2 பேரின் விண்ணப்பங்கள் கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்ற கவுன்சலிங்கில் 63,752 பி.இ. இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. காலியாக 45,420 இடங்கள் உள்ளன. கவுன்சலிங் இந்த மாதம் 11-ம் தேதியோடு முடிகிறது


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes