விண்டோஸ் 8 வெளியான பின்னர், பயனாளர்களின் பின்னூட்ட தகவல்களின் அடிப்படையில், அதிகமான மாற்றங்களை மேற்கொண்டு, விண்டோஸ் 8.1 பதிப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டது.
இதனையும் சோதனைப் பதிப்பாகக் கொடுத்து, பயனாளர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும், இந்த புதிய சிஸ்டத்தில் உள்ள குறை மற்றும் நிறைகள் குறித்து தெரிவிக்கலாம் என்றும் அறிவித்தது.
பின்னர், வர்த்தக ரீதியான, முழுமையான விண்டோஸ் 8.1 பதிப்பினை வெளியிட்டது. வெளியிட்ட பின்னர், சோதனைப் பதிப்பினை வரும் ஜனவரி 15 வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது.
ஜனவரி 15க்குப் பின்னர், இந்த சிஸ்டம் முழுமையான பயன்பாட்டில் இருக்க முடி யாது. இதில் சேவ் செய்யப்படாத டேட்டா வினைத் திரும்பப் பெற இயலாது. விண்டோஸ் 8 சிஸ்டத்தினை கட்டணம் செலுத்தி வாங்கியவர்கள், விண்டோஸ் 8.1 சோதனைப் பதிப்பினைப் பயன்படுத்தினால், அவர்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1க்கு இலவசமாக மாறிக் கொள்ளலாம்.
விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் விஸ்டா/எக்ஸ்பி பயன்படுத்தியவர்கள், இந்த 8.1 சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அவர்கள் உடனடியாக இதனைக் கைவிட்டுத் தங்கள் பழைய சிஸ்டத்திற்குச் செல்ல வேண்டும். அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தி, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தினைப் புதியதாகப் பெற்று இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால், விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களிலிருந்து, விண்டோஸ் 8.1க்கு நேரடியாக அப்டேட் செய்திடும் வசதி தரப்படவில்லை. அல்லது விண்டோஸ் 8க்கு முதலில் மாறிக் கொண்டு, பின்னர் விண்டோஸ் 8.1க்கு மாறிக் கொள்ளலாம்.
இதற்கான வழிமுறைகள் குறித்து அறிய விரும்புபவர்கள் http://windows. microsoft.com/enus/windows8/upgradefromwindowsvistaxptutorial என்ற முகவரியில் உள்ள இணையதளம் சென்று அறிந்து கொள்ளலாம்.
ஆனால், விண்டோஸ் 8 உட்பட எந்த சிஸ்டத்திலிருந்து, விண்டோஸ் 8.1க்கு மாறினா லும், நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தையும், மீண்டும் பதிந்து கொள்ள வேண்டும். Net Applications என்னும் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளபடி, விண்டோஸ் 8 மற்றும் 8.1 பயன் படுத்துபவர்கள், மொத்த பயனாளர்களில் 9.3 சதவீதம் மட்டுமே.
இது குறித்து மேலதிகத் தகவல்களுக்கும், சந்தேகங்களுக்கான தீர்வுகளுக்கும்,http://windows.microsoft.com/enus/windows8/upgradetowindows8 என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லலாம்.
0 comments :
Post a Comment