எக்ஸெல் தொகுப்பினை நம் வசமாக்க

1. பைல் அமையும் இடம்: பல பயனாளர்கள், அவர்களின் பைல்கள் சென்றடையும் இடம் My Documents ஆக இருப்பதனை ஏற்றுக் கொள்வதில்லை. இதனை மாற்றி, நீங்கள் விரும்பும் போல்டரிலேயே, பைல்களைப் பதியும்படி செய்து கொள்ளலாம்.

File டேப் கிளிக் செய்து Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2007 புரோகிராமில், Office பட்டன் கிளிக் செய்து பின்னர் Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், டூல்ஸ் மெனு சென்று ஆப்ஷன்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இடது பக்க பிரிவில், Save தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2003ல் General டேப் கிளிக் செய்திடவும். பின்னர், Save Documents செக்ஷனில் Default File Location பீல்டில் பைல் எங்கு சென்று சேவ் செய்யப்பட வேண்டுமோ, அதற்கேற்ப path ஐ மாற்றவும். அல்லது அந்த ட்ரைவ் மற்றும் போல்டர் பிரவுஸ் செய்து காட்டி அமைக்கவும். இவை அனைத்தும் செய்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


2. ஷீட்களின் எண்ணிக்கை:

ஒவ்வொரு புதிய எக்ஸெல் ஒர்க் புக்கும் மூன்று ஷீட்களுடன் கிடைக்கும். இதன் பின்னர், நீங்கள் ஒர்க்ஷீட்டுகளை இணைக்கலாம் அல்லது நீக்கலாம். அதே நேரத்தில், மாறா நிலையில் உள்ள ஒர்க்ஷீட்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம்.

File டேப் கிளிக் செய்து, பின்னர் ஹெல்ப் பகுதியில் Options கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2007ல், Office பட்டன் கிளிக் செய்து, அதன் பின்னர், Excel Options கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல், Tools மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும்.

இடது பிரிவில் General கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல் ஜெனரல் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு When Creating New Workbooks என்ற பிரிவில், எத்தனை ஷீட்கள் மாறா நிலையில் அமைக்கப்பட வேண்டுமோ, அந்த எண்ணை Include This Many Sheets என்ற பீல்டில் அமைக்கவும். எக்ஸெல் 2003ல், Sheets In New Workbook என்பதைப் பயன்படுத்தி இந்த எண்ணை அமைக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


3. குறிப்பிட்ட ஒர்க்புக்குடன் திறக்க:

எக்ஸெல் புரோகிராம் திறக்கும்போது, சிலர் ஏதேனும் ஒரு ஒர்க்புக்கினை எப்போதும் திறந்து அதிலிருந்து தங்கள் பணியினைத் தொடங்குவார்கள். இவர்களுக்கு எக்ஸெல் புரோகிராம் திறக்கும்போது அந்த குறிப்பிட்ட ஒர்க்புக்குடன் திறந்தால், பல வேலைகள் மிச்சமாகும்.

இதனையும் நாம் செட் செய்துவிடலாம். அந்த குறிப்பிட்ட ஒர்க்புக்கினை XLStart போல்டரில் சேவ் செய்து விட்டால், எக்ஸெல் புரோகிராமினைத் திறக்கையில், அந்த ஒர்க்புக்குடனே திறக்கப்படும். நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில், இந்த போல்டரைக் கீழே குறிப்பிட்ட வகையில் காணலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி: C:\Documents and Settings\user name\Application Data\Microsoft\Excel\XLStart

விண்டோஸ் விஸ்டா: C:\Users\user name\AppData\Local\Microsoft\Excel\XLStart

விண்டோஸ் 7: C:\Program Files\Microsoft Office\Office\XLStart எப்போதும் ஒரு பைலை சேவ் செய்வது போல, அதனை இந்த XLStart போல்டரில் சேவ் செய்துவிடவும்.


4. கர்சர் செல்லும் முறை:

நீங்கள் என்டர் தட்டினால், எக்ஸெல் புரோகிராமில் கர்சர் கீழாக ஒரு செல் செல்லும். ஆனால், நீங்கள் வலது பக்கம் உள்ள செல்லில் டேட்டா அமைக்க விரும்பினால், என்டர் தட்டியவுடன், வலது பக்கம் உள்ள செல்லுக்குச் செல்லும் வகையில் அமைக்கலாம்.

File டேப் கிளிக் செய்து, பின்னர் ஹெல்ப் பகுதியில் Options கிளிக் செய்திடவும்.

எக்ஸெல் 2007ல், Office பட்டன் கிளிக் செய்து, அதன் பின்னர், Excel Options கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல், Tools மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். இடது பிரிவில் Advanced கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல் Edit டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

Editing Options பிரிவில் Direction என்ற கீழ்விரி மெனுவில், After Pressing Enter Move Selection என்பதன் கீழ் Right என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு எந்த திசையில் வேண்டுமானாலும் கர்சர் செல்லும்படி அமைக்கலாம்.

அதற்கென Right, Left, Up, மற்றும் Down ஆக நான்கு ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். எக்ஸெல் 2003ல் இது Move Selection After Enter எனக் கொடுக்கப்பட்டிருக்கும். கர்சர் நகர்த்தப்படக் கூடாது என எண்ணினால், இங்கு ஆப்ஷன் கட்டத்தில் டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம். இவ்வளவும் செட் செய்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


1 comments :

திண்டுக்கல் தனபாலன் at July 31, 2012 at 10:18 PM said...

விளக்கமான பதிவிற்கு நன்றி...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes