நோக்கியா 110 மற்றும் 112

பட்ஜெட் விலையில், வேகமான இணையத் தேடல் பெறும் வகையில் இரண்டு மொபைல் போன்களை நோக்கியா வெளியிட்டுள்ளது.

நோக்கியா 110 மற்றும் நோக்கியா 112 ஆகிய இந்த இரண்டும் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற சமூக வலைத் தளங்களுக்கு நேரடி இணைப்பு தருவதோடு, பன்னாட்டளவில் பிரபலமான கேம்ஸ் மற்றும் நோக்கியா அப்ளிகேஷன் ஸ்டோருக்கும் இணைப்பு தருகின்றன.

இதில் தரப்பட்டுள்ள நோக்கியா பிரவுசர் இணைய தளங்களை கம்ப்ரஸ் செய்து தருவதால், டேட்டா இறக்கம் வெகுவாகக் குறைகிறது.

இதனால், மொபைல் இன்டர்நெட் செலவு குறைகிறது. நோக்கியா 112 மொபைலில் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதி இணைத்தே தரப்பட்டுள்ளது.

தரமான கேமரா இருப்பதால், படங்களுடன் முகவரிகளை அமைக்க முடிகிறது. அனைத்திற்கும் ஈடு கொடுக்கும் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு சிம்களை இவற்றில் இயக்க முடிகிறது.

எளிதில் இவற்றை மாற்ற முடிகிறது. இதற்கென போனை ஸ்விட்ச் ஆப் செய்திடவோ, பேட்டரியைக் கழட்டவோ தேவையில்லை.

ஐந்து சிம்கள் குறித்த தகவல்களை இதில் செட் செய்திட முடியும். எனவே, நகரத்து இளைஞர்களை, எப்போதும் இணைய இணைப்பில் இருக்க விரும்புபவர்களை அதிகம் கவரும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

நோக்கியா 110 அம்சங்கள் 1.8 அங்குல வண்ணத்திரை, இரண்டு சிம் பயன்பாடு, நோக்கியாவின் சிரீஸ் 40 சிஸ்டம், நெட்வொர்க் இணைப்பிற்கு EDGE/GPRS, Bluetooth 2.1, WAP 1.1, 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, WMV, 3GPP, AVI ஆகிய பார்மட்களை சப்போர்ட் செய்திடும் வீடியோ, பதிவு செய்திடும் வசதியுடன் ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 64 எம்பி வரையிலான உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரியை 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி,1020 mAh லித்தியம் அயன் பேட்டரி ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாகக் கூறலாம்.

80 கிராம் எடையில் இந்த மொபைல் கருப்பு, நீலம் மற்றும் இளஞ்சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும்.

மேலே தரப்பட்டுள்ள அம்சங்களுடன், 1020 mAh லித்தியம் அயன் பேட்டரியுடன், 86 கிராம் எடையில், கிரே, நீலம், வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் நோக்கியா 112 வடிவமைக்கப் பட்டுள்ளது.

இணைய தள விற்பனையில் நோக்கியா 110ன் அதிக பட்ச விலை ரூ. 2259 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


1 comments :

திண்டுக்கல் தனபாலன் at July 15, 2012 at 10:21 PM said...

தகவலுக்கு நன்றி நண்பா !

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes