பெங்களூருவில் கூகுளின் தெருப்பார்வை

கூகுள் சில மாதங்களுக்கு முன் தொடங்கி வெற்றிகரமாக இயக்கிக் கொண்டிருக்கும் ஒரு வசதி கூகுள் ஸ்ட்ரீட் வியூ (Street View). இது கூகுள் மேப்ஸின் ஒரு பகுதியாக 27 நாடுகளில் 100 நகரங்களில் இயங்கி வருகிறது.

தற்போது இந்தியாவிலும் இந்த வசதி அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது. முதல் முறையாக பெங்களூருவில் இது தொடங்கப்படுகிறது. அதற்கான அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்ட்ரீட் வியூ எனப்படும் தெருப் பார்வை நமக்கு என்ன வழங்கும்? இது அமல்படுத்தப்படும் நகரின் தெருக்களை மிகவும் நெருக்கமாகக் காட்டும். கூகுள் மேப்ஸ் சென்று தெருக்களை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பின் மேப்பின் இடது பக்கம் ஆரஞ்ச் வண்ணத்தில் உள்ள “Pegman” ஐகானை இழுத்துவந்து நீல நிற வண்ணத்தில் உள்ள தெருவில் இட வேண்டும். உடன் அந்த தெருவின் தெளிவான தோற்றம் நமக்குக் கிடைக்கும்.

இதற்கென கூகுள் நிறுவனம் பெங்களூருவில் முதலில் தெருக்களைத் தன் கேமராவிற்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. கார்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் கூகுள் கேமராக்களை அமைத்து, படங்களைப் பிடித்து வருகிறது.

சில இடங்களில் சைக்கிள்களில் கேமராவினைப் பொருத்தி படங்களை எடுத்து வருகிறது. எடுக்கப்பட்ட இந்த படங்கள், புரோகிராம் மூலமாக வழிமுறை செய்யப்பட்டு, கூகுள் மேப்களில் 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வகையில் பதிக்கப்படும்.

இதனால் நகரங்களில் உள்ள வீதிகளில் நாம் ஏதேனும் ஒரு தெருவில் உள்ள முக்கிய அலுவலகம் அல்லது வர்த்தக மையம் இருக்கும் இடத்தைச் சரியாக நினைவில் கொள்ளவில்லை என்றால், இதன் மூலம் தேடிப் பெறலாம்.

இந்த ஸ்ட்ரீட் வியூ வசதியைப் பயன்படுத்த, கூகுள் மேப்ஸ் தளம் சென்று, நேவிகேஷன் டூல் மேலாக உள்ள ஒரு மனிதனின் சிறிய படத்தின் மீது (Pegman) கர்சரை வைத்து இழுத்து வந்து, எந்த தெருவின் படம் வேண்டுமோ அங்கு விட வேண்டும்.

பெங்களூரு இந்திய தகவல் தொழில் நுட்பத்தின் தலைநகரமாக இயங்கி வருவதால், கூகுள் ஸ்ட்ரீட் வியூ வசதியை அதில் தொடங்கத் திட்டமிட்டு இயங்கி வருவதாக, கூகுள் இந்தியா உற்பத்திப்பிரிவின் தலைவர் வினய் கோயல் தெரிவித்துள்ளார்.

நகரம் ஒன்றின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்பவர்கள், பணியாற்றும் வல்லுநர்கள், சட்ட விதிமுறைகளை அமல்படுத்துபவர்கள், ஏன், வீடு வாடகைக்கு தேடுபவர்களுக்குக் கூட இது உதவும்.

சுற்றுலா பயணங்களை மேற்கொள்பவர் கள் இந்த வசதி மூலம் தாங்கள் தங்கும் மற்றும் செல்ல விரும்பும் இடங்களைப் பார்க்கலாம். வர்த்தகர்கள் தங்கள் மையங்களின் வரைபடத்தை இன்னும் தெளிவாகத் தங்கள் இமெயில் மற்றும் இணைய தளங்களில் பதித்து வைக்க முடியும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes