ரெகுவா புதிய பதிப்பு

எதிர்பாராதவிதமாக, நம்மை அறியாமல் நாம் அழித்த பைல்களை மீட்பதில் நமக்குப் பெரிய அளவில் சிறப்பாக உதவிடும் புரோகிராம்களில் ஒன்று ரெகுவா (Recuva). இதன் புதிய பதிப்பு 1.42. 544 அண்மையில் வெளியாகி உள்ளது.

இது ஓர் இலவச புரோகிராம் என்பது அனைவருக்கும் தெரியும். டைரட்க்டரிகள் மற்றும் போல்டர்களில் இருந்து நீக்கும் பைல்கள் மட்டுமின்றி, ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்கும் பைல்களையும் இந்த புரோகிராம் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.

அத்துடன் வைரஸ், புரோகிராமின் பிழையான இயக்கம் மற்றும் கம்ப்யூட்டர் கிராஷ் ஆகியவற்றால் நீக்கப்படும் பைல்களையும் ரெகுவா நமக்கு மீட்டுத் தரும்.

சிகிளீனர் வழங்கும் நிறுவனமான பிரிபார்ம் (Piriform) நிறுவனமே இதனையும் வழங்குகிறது. இரண்டுமே இலவசம் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.


இதனுடைய சிறப்பம்சங்களாவன:

* மிக எளிதான இன்டர்பேஸ் வழியாக 'Scan' என்பதை ஜஸ்ட் கிளிக் செய்து, பின்னர் நாம் மீண்டும் பெற விரும்பும் நீக்கப்பட்ட பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

* பைல் பெயர் மற்றும் வகை அடிப்படையில், மீட்கப்பட வேண்டிய பைல்களை வரையறை செய்திடலாம்.

* List மற்றும் Tree வகையில் பைல்களைக் காணும் வசதி.

* யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவில் இருந்து இயக்கலாம்.

* ஆபீஸ் டாகுமெண்ட்ஸ், இமேஜஸ், வீடியோ, மியூசிக், இமெயில் என எந்த வகை பைல்களையும் மீட்டுத் தரும்.

* FAT12, FAT16, FAT32, exFAT, NTFS, NTFS5 , NTFS மற்றும் EFS ஆகிய அனைத்து வகை பைல்களையும் மீட்டுத் தருகிறது.

* கம்ப்யூட்டரில் இணைத்துப் பின் தனித்து எடுக்கப்படும் மீடியா வகையான SmartMedia, Secure Digital, MemoryStick, Digital cameras, Floppy disks, Jaz Disks, Sony Memory Sticks, Compact Flash cards, Smart Media Cards, Secure Digital Cards போன்ற அனைத்து வகை மீடியாக்களில் இருந்து நீக்கப்பட்ட பைல்களை மீட்கிறது.

* ஸிப் ட்ரைவ், எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் மற்றும் யு.எஸ்.பி. ஹார்ட் ட்ரைவ்களில் இருந்தும் அழிக்கப்பட்ட பைல்களை மீட்டுத் தருகிறது.

* வேகமான இயக்கம், சிறிய அளவிலான கோப்பு மற்றும் நொடியில் இயங்கி முடிக்கும் சிறப்புக்களையும் கொண்டது.


புதிய பதிப்பில்:

* ஜேபெக் மற்றும் பி.என்.ஜி. பைல்களுக்கு புதிய தொழில் நுட்ப முறை வடிவமைக்கப்பட்டு இணைக்கப் பட்டுள்ளது.

* விண்டோஸ் 8 சோதனைப் பதிப்பிற்கான தொழில் நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது.

* கீ போர்ட் நேவிகேஷனில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.

* பெரிய அளவிலான ட்ரைவ்களுக்கு, கூடுதல் மெமரி பயன்பாடு தரப்பட்டுள்ளது.

* சிறிய குறைகள் பல நீக்கப்பட்டுள்ளன.

இதனை இலவசமாகத் தரவிறக்கம் செய்திட http://www.piriform.com/ recuva/download/standard என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes