இந்திப் படத்தில் நடிக்கிறார் விஜய் டி.ராஜேந்தர்

திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசி பிரபலமானவர் நடிகர் விஜய் டி.ராஜேந்தர். உயிருள்ளவரை உஷா, மைதிலி என்னைக்காதலி, உறவைக் காத்த கிளி, மோனிசா என் மோனலீசா, வீராசாமி உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் ராஜேந்தருக்கு அவருடைய தாடியும் அடையாளத்தை கொடுத்தது. 

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த ராஜேந்தர், இப்போது தனது பார்வையை பாலிவுட் பக்கம் பதிக்கப் போகிறாராம். இதற்காக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஜிம்முக்கு சென்று உடம்பை ஸ்லிம் ஆக்கிக் கொண்டிருக்கிறாராம். அதோடு இந்தியும் படித்துக் கொண்டிருப்பதாக சொல்கிறது கோடம்பாக்கத்து தகவல்.

தமிழ் சினிமாவைப் போலவே இந்தியிலும் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, தயாரிப்பு என ஏழெட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்ய திட்டமிட்டிருக்கும் ராஜேந்தர், இந்தி படத்தில் பஞ்சாபி பாடகர் வேடமேற்கப் போ‌கிறாராம். 

அதற்காக சிங் கெட்-அப்பில் சமீபத்தில் போட்டோ‌செஷன் முடித்திருப்பதுடன், பாடல்கள் கம்போஸ் பணிகளையும் முடித்து விட்டாராம். "பொதுவா பாலிவுட்ல இந்த ஸ்டைலில் யாரும் படம் எடுத்ததும் இல்ல. 

நடிச்சதும் இல்ல" என்று சொல்லும் டி.ஆர்., பாலிவுட்டுக்காக தனது ஸ்டைலில் இருந்து மாறவே மாட்‌டேன். எனது அடுக்குமொழி ஸ்டைல் பாலிவுட்டிலும் தொடரும், என்றும் கூறியிருக்கிறார்.


1 comments :

Balakumar at June 13, 2010 at 10:57 PM said...

தமிழர்களுக்கு 25 ஆண்டுகளாக பீதியை கொடுத்து கொண்டு இருந்த டி.ஆர். இப்போது ஒட்டு மொத்த இந்தியாவையும் டெரர் ஆக்க கிளம்பிவிட்டார்!

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes