மாலைமாற்றிக் கொண்டனர் பிரபுதேவா - நயன்தாரா

ஊரறிந்த ரகசிய காதல் ஜோடிகளாக வலம் வந்த பிரபுதேவாவும், நயன்தாராவும் சென்னையில் உள்ள வீட்டில் யாகம் வளர்த்து விசேஷ பூஜை நடத்தி, மாலை மாற்றிக் கொண்டனர். 

கோலிவுட்டின் ஹாட் நியூஸ் இதுதான். சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு பிரபுதேவாவுடன் ஏற்பட்ட நட்பு காதலில் ‌போய் நின்றது. பிரபுதேவா தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு, நயன்தாராவே கதி‌யென அவருடன் சுற்றித் திரிகிறார். 

இருவரும் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று திரும்புகிறார்கள். கல்யாணம் செய்யாமலேயே கணவன் - மனைவி போல ஓட்டலில் அறை எடுத்து தங்கும் இந்த ஜோடி, இதுவரை தங்களது காதலை ஒப்புக் கொள்ள மறுத்து வருகிறார்கள்.


இந்த காதல் ஜோடிகளுக்கு பிரபுதேவாவின் மனைவி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரபுதேவாவின் தந்தை டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், தாயார் மகாதேவம்மா ஆகிய இருவரும் ஆதரவாக இருக்கிறார்கள் என்பது லேட்டஸ்ட் தகவல். சுந்தரம் மாஸ்டர் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டையில், நாரதகான சபாவுக்கு எதிரில் உள்ளது. 

அந்த வீட்டில் டான்ஸ்மாஸ்டர் சுந்தரம், அவருடைய மனைவி மகாதேவம்மா, கடைசி மகன் நாகேந்திரபாபு ஆகியோர் வசித்து வருகிறார்கள். அந்த வீட்டில் ஒரு விசேஷ பூஜை நடந்தது. 4 புரோகிதர்கள் சேர்ந்து யாகம் வளர்த்து, பூஜை நடத்தியுள்ளனர். காலையில் தொடங்கிய பூஜை பிற்பகல் வரை நீடித்துள்ளது.

இந்த பூஜையில் நயன்தாராவும், பிரபுதேவாவும் ஜோடியாக பங்கேற்றுள்ளனர். இருவரும் மணமக்களைப்போல் கழுத்தில் மாலை அணிந்திருந்தார்கள். புரோகிதர்கள் மந்திரம் சொன்னதும், இருவரும் மாலை மாற்றிக் கொண்டார்கள். 

அப்போது இரண்டு பேர் தலையிலும் புரோகிதர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில், டான்ஸ்மாஸ்டர் சுந்தரத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள்


1 comments :

ப.கந்தசாமி at June 13, 2010 at 5:40 AM said...

இந்திய சரித்திரத்தின் ஒரு பொன்னான திருநாள். மணமக்கள் நீடூழி வாழ்க, முதல் மனைவி சும்மா இருந்தால்

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes