3 நாளில் 100 கோடி வசூல்: 3 இடியட்ஸ் படம் சாதனை

அமிர்கான் நடித்துள்ள 3 இடியட்ஸ் படம் திரையிட்ட இடமெல்லாம் வசூலைக் குவித்து வருகிறது. வெளியான மூன்றே தினங்களில் ரூ 100 கோடியைக் குவித்துள்ளது இந்தப் படம்.

இது அமிர்கானின் முந்தைய படமான கஜினியை விட 30 சதவிதம் அதிக வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. ரிலீசுக்கு முந்தைய தினம் நடந்த பிரிமியர் ஷோவில் மட்டும் இந்தப் படம் ரூ 9 கோடி வசூலைப் பெற்றது.


2007ம் ஆண்டு தாரே ஜாமீர் பர், 2008ல் கஜினி ஆகிய வெற்றிப்படங்கள் வரிசையில் அமீருக்கு இந்த ஆண்டு வெற்றியை தேடித் தந்திருக்கும் படம் 3 இடியட்ஸ். முன்னாபாய் புகழ் ராஜ் குமார் இயக்கத்தில் நடிகர்கள் அமீர்கான், மாத‌வன், ஷர்மான் நடிப்பில் உருவான 3 இடியட்ஸ் படம் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் வெளியானது.


ரூ.35 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த கலகலப்பான படம் ரசிகர்களை குஷிப்படுத்துவதுடன் வசூலையும் வாரி குவித்துக் கொண்டிருக்கிறது. உலகமெங்கும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் இப்படம் சென்னையில் மட்டும் 8 தியேட்டர்களில் ரீலிஸ் ஆனது.


சென்னை ரசிகர்களும் இந்த த்ரீ இடியட்ஸை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறார்கள். சென்னையில் அடுத்த ஒரு வாரத்துக்கு 3 இடியட்ஸ் படத்திற்கு முன்பதிவு முடிந்து விட்டதாம்.


இது தனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது, என்கிறார் நடிகர் மாதவன். 3 இடியட்ஸ் மூலம் மாதவனுக்கு இந்தியில் முன்னணி இடத்தை பிடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதும் எக்ஸ்ட்ரா தகவல்


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes