
இரண்டு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 335 மொபைல் போனின் ஒரே சிறப்பம்சம் இதன் 3 மெகா பிக்ஸெல் கேமரா.
ரூ. 2,050 என பட்ஜெட் விலையில் கிடைக்கும் போனில் இந்த திறன் கொண்ட கேமரா இருப்பது நமக்கு அனுகூலமே.
இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 104x57x13.1 மிமீ. பார் டைப்பில், பிரவுண், வெள்ளை, பச்சை மற்றும் நீலம் என நான்கு வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டு விற்பனையாகிறது.
இதன் திரை 2.8 அங்குல அகலத்தில் டி.எப்.டி. திரையாக அமைந்துள்ளது. லவுட் ஸ்பீக்கர், எம்பி 4 மற்றும் எம்பி3 பிளேயர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட்டில் எஸ்.டி. கார்ட் மூலம் மெமரியை 4 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் புளுடூத் கிடைக்கிறது.
மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் உள்ளது. கேமராவில் டிஜிட்டல் ஸூம் வசதி தரப்பட்டுள்ளது.
இதன் பேட்டரி தொடர்ந்து 4 மணி நேரம் வசதியைத் தருகிறது.
மலிவான விலையில் மொபைல் போன் வாங்க திட்டமிடுபவர்கள் இது குறித்து எண்ணலாம்.
5 comments :
உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
http://otti.makkalsanthai.com
பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,
நண்பரே,
தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
http://www.tamilkalanchiyam.com
- தமிழ் களஞ்சியம்
தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் திரட்டியிலும் (www.tamiln.org) பதிக்கலாமே.
நன்றி நண்பரே... இதை தான் வைத்துள்ளேன்...
its good phone
Post a Comment