விண்டோஸ் 8 சோதனை பதிப்பு இறுதி நாள்

மைக்ரோசாப்ட் தன் புதிய விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சோதனை பதிப்பை மூன்று வகைகளாக, மக்களுக்குத் தந்தது.

Developer Preview, Consumer Preview and Release Preview என இவற்றை அழைத்தது. இவற்றைப் பல லட்சக்கணக்கான மக்கள், உலகெங்கும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

வர்த்தக ரீதியாக மக்களுக்கு அக்டோபர் 26 அன்று, விண்டோஸ் 8 கிடைக்கும் எனவும் மைக்ரோசாப்ட் பின்னர் அறிவித்தது. அப்படியானால், இந்த சோதனை தொகுப்புகளின் அனுமதிக்கப்பட்ட இறுதி நாள் எது? அதற்குப் பின் நம்மால் இதனைப் பயன்படுத்த முடியாதா? என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.

இந்த சோதனை தொகுப்புகள் அனைத்துமே குறிப்பிட்ட நாளில் முடக்கப்படும். இவை இயங்காது. அப்படி முடக்கப்படும் முன்னர், அது குறித்த செய்தி, இவற்றைப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் காட்டப்படும்.

முடக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் எனில், புதிய உரிமம் பெற்ற விண்டோஸ் 8 தொகுப்பினை வாங்கிப் பதிய வேண்டும். மைக்ரோசாப்ட் அறிவித்துள்ள வெவ்வேறு சோதனை தொகுப்புகளின் இறுதி நாட்களை இங்கு காணலாம்.

1. விண்டோஸ் 8 டெவலப்பர் பிரிவியூ இயங்குவது, முதலில் மார்ச் 11, 2012 அன்று முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், இதனை 2013 ஜனவரி 15 வரை மைக்ரோசாப்ட் நீட்டித்துள்ளது.

2. விண்டோஸ் 8 கன்ஸ்யூமர் பிரிவியூ தொகுப்பின் இறுதி நாள் அதே ஜனவரி 15, 2012 ஆகும்.

3. விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ, ஜனவரி 16, 2013 வரை இயங்கும்.

4. விண்டோஸ் 8 எண்டர்பிரைசஸ் ஆர்.டி.எம். சோதனைத் தொகுப்பினை எப்போது வேண்டுமானலும் இயக்கத் தொடங்கலாம். தொடங்கப்பட்டு 90 நாட்கள் வரை இதனை இயக்கலாம்.

ஆனால், ஆகஸ்ட் 15, 2013க்குப் பின்னர் இதனை இயக்க முடியாது. 90 நாட்கள் கொண்ட காலத்திற்குப் பின்னர், தானாகவே இதன் இயக்கம் நின்றுவிடும். ஆகஸ்ட் 14, 2013ல் இதனை இயக்கினால், அதன் பின்னர் 90 நாட்கள் இதனை இயக்கலாம்.

நீங்கள் விண்டோஸ் 8 சோதனைத் தொகுப்பினைப் பதிந்து இயக்கிக் கொண்டிருந்தால், உங்கள் தொகுப்பு என்று வரை உயிரோட்டத்துடன் இருக்கும் என்பதனை அறிய, விண்டோஸ் அழுத்தி, winver என டைப் செய்து என்டர் தட்டவும்.

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சோதனைத் தொகுப்பு முடிவிற்கு வந்த பின்னர் என்ன நடக்கும்? உங்களுடைய கம்ப்யூட்டரின் டெஸ்க் டாப் பேக் கிரவுண்ட் கருப்பாக மாறும். உங்களின் வால் பேப்பர் நீக்கப்படும். நீங்கள் இதனை மீண்டும் மாற்றினாலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் இது நீக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

ஆப்பரேட்டிங் சிஸ்டம் உரிமம் பெற்ற உண்மையானது அல்ல என்ற செய்தி எப்போதும் திரையில் காட்டப்படும்.

உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒவ்வொரு மணிக்கொரு முறை நிறுத்தப்படும். இதனால், நீங்கள் மேற்கொண்ட வேலை சேவ் செய்யப்படாமல் வீணாகும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes