மறையும் பிரவுசர் மெனுக்கள்

பிரவுசர்கள் அனைத்துமே மிக வேகமாக புதிய பதிப்புகளை வெளியிட்டுள்ளன. புதிதாக வரும் பிரவுசர்களில், இணைய தளங்களுக்கு அதிக இடம் தர வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மெனுக்கள் எல்லாம் மறைத்து வைக்கப்படுகின்றன.

பைல் மெனு பழைய கால சங்கதியாகிக் கொண்டு வருகிறது. இப்போது பிரவுசர்களில் தரப்படும் இன்டர்பேஸ் எனப்படும் இடைமுகங்கள் எல்லாம், வேறுவகையான சிறிய மெனு கட்டமைப்பில் தரப்படுகின்றன.

ஒன்றுக்கொன்று மறைத்து வைக்கப்பட்ட மெனுக்கள் எல்லாம் இடம் பெறுவதில்லை. ஆனாலும், சிலர் எனக்கு முந்தைய பிரவுசர்களைப் போல் மெனுக்கள் தேவை என விருப்பம் தெரிவிக்கின்றனர்.

பழைய தோற்றத்தில் மெனுக்கள் கிடைக்கும் வழிகளையும் இந்த பிரவுசர்கள் கொண்டுள்ளன. ஆனால், ஒவ்வொரு பிரவுசருக்கும் ஒரு வகையான வழி உள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசரில், வழக்கமான மெனுவிற்குப் பதிலாக, “Firefox” என்னும் பட்டன் தரப்பட்டுள்ளது. இதில் கிளிக் செய்வதன் மூலம் பிரவுசர் செட்டிங்ஸ் மாற்றலாம்; இணைய தளங்களில் உள்ள டெக்ஸ்ட்டை பிரிண்ட் செய்திடலாம். பழைய மெனு முறை வேண்டும் என்றால், இந்த இளஞ்சிகப்பு வண்ண பட்டனில் கிளிக் செய்திடவும்.

இந்த பட்டன் விண்டோவின் இடது மேல் புறத்தில் தரப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கும் கீழ்விரி பட்டியலில், வலது பக்கம் கீழாகச் செல்லவும். இதில் “Options” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது கூடுதலாக ஆப்ஷன்ஸ் பட்டியல் ஒன்று கிடைக்கும். இங்கு "Menu Bar" என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்; இப்போது “File,” “Edit,” மற்றும் “View” ஆகிய பட்டன்கள் உள்ள மெனு லே அவுட்டிற்கு மாறுவீர்கள்.

ஏதேனும் ஒரு வேளையில், ஒரு காரணத்திற்காக, பழையபடி எந்த மெனுவும் இல்லாத இடைமுகம் வேண்டும் எனில், மெனு பாரில் “View” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். “Toolbars” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் “Menu Bar” என்ற ஆப்ஷனில் எதிரே உள்ள டிக் அடையாளத்தினை நீக்கவும்.

துரதிருஷ்டவசமாக, கூகுள் தரும் குரோம் பிரவுசரில், பழைய மெனுக்களைக் கொண்டு
வருவதற்கான செட்டிங் எதுவும் தரப்பட வில்லை. மெனு பார் இடத்தில் “Bookmarks” என்ற டூல்பாரினைக் கொண்டுள்ளது. இதன் மூலம் நமக்குப் பிடித்த பேவரிட வெப்சைட் களின் பட்டியலை இதில் பெறலாம்.

பிரவுசரின் மேலாக டூல் பார் தேவை என்றால், முதலில் திரையின் மேல் வலது புறத்தில் காட்டப்படும், பைப் ரிஞ்சு (“Wrench”) ஐகான் மீது கிளிக் செய்திடவும். இங்கு “Bookmarks” எனப்படும் துணை மெனுவினைத் திறக்கவும்.

இதில் “Show Bookmarks Bar” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்தால், திரையின் மேல் பகுதியில், புக்மார்க்ஸ் மெனு கிடைக்கும். இதனை பார்வையிலிருந்து நீக்க வேண்டும் எனில், மீண்டும் “Bookmarks” மெனு சென்று, “Show Bookmarks Bar” என்பதில் கிளிக் செய்திடவும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் வழக்கமான அனைத்து டூல்பார்களும் நீக்கப்பட்டன. இதனால் எந்த மெனு பார் மற்றும் டூல்ஸ் காட்டப்பட வேண்டும் என்பதனை நாம் செட் செய்திட முடிவதில்லை.

ஆனால், இதனை மீட்டுக் கொண்டு வர மைக்ரோசாப்ட் அருமையான ஒரு வழியைக் காட்டியுள்ளது. எளிதாக, “Alt” பட்டனை அழுத்தவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மெனு பாரினை கொண்டு வந்திடும். மீண்டும் இதனை அழுத்த அனைத்தும் மறைந்துவிடும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes