மாறா நிலையில் பிரவுசர் எதற்காக?

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இøணைந்தே இன்டர் நெட் எக்ஸ்புளோரரும் தரப்படுகிறது. அது டிபால்ட் பிரவுசராகப் பதியப்படுகிறது. ஆனால் அதனைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை.

எந்த பிற பிரவுசரையும் நாம் டவுண்லோட் செய்து அதனையே நம் மாறாத பிரவுசராகப் செட் செய்து பயன்படுத்தலாம். இவ்வகையில் பயர்பாக்ஸ், ஆப்பரா, நெட்ஸ்கேப் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.

இவை தவிர இன்னும் பல தளங்களும் உள்ளன. இவற்றை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால், அந்த பிரவுசரை எப்படி டிபால்ட் பிரவுசராக செட் செய்வது என்று பார்க்கலாம்.

பயர்பாக்ஸ் பிரவுசரில் Tools/Options சென்று General என்பதன் கீழ் “Default Browser” என்று உள்ள இடத்திற்கு எதிராக உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

நெட்ஸ்கேப் எனில் என்.எஸ். நேவிகேட்டரில் Edit / Preferences தேர்ந்தெடுத்து மேலாக வலது மூலையில் உள்ள “Set Default Browser” என்பதில் கிளிக் செய்திடவும். ஆப்பராவில் Tools / Preferences சென்று “Advanced” டேப் செலக்ட் செய்திடவும்.

இதில் “Programs” என்பதன் கீழ் “Check if Opera is default browser on startup” என்று உள்ள இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்திடவும்.

ஓகே. வேறு பிரவுசரை டிபால்ட் பிரவுசராக செட் செய்து பயன்படுத்திய பின்னர் வேறு சில காரணங்களுக்காக இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மீண்டும் டிபால்ட் பிரவுசராக அமைத்திட விரும்பினால் என்ன செய்வது?

இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து, அதில் Tools / Internet Options / Programs என்று செல்லவும். பின் “Reset Web Settings...” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின் “Internet Explorer should check...” என்பதில் கிளிக் செய்திடவும்.

சரி, எதற்காக ஒன்றை மாறா நிலை பிரவுசர் (டிபால்ட் பிரவுசர்) என அமைக்கிறோம். சில இமெயில்கள் அல்லது டெக்ஸ்ட்டில் இணையதள முகவரிகள் இருக்கும். இவற்றில் கிளிக் செய்தால், அந்த சிஸ்டத்தில் எந்த பிரவுசர் டிபால்ட் பிரவுசராக உள்ளதோ அது இயக்கப்பட்டு அந்த தளம் திறக்கப்படும்.

நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் பிரவுசர் இல்லாமல் வேறு ஒன்று டிபால்ட் பிரவுசராக இருந்தால், பயன்படுத்து பவருக்கு சிரமமாக இருக்கலாம். எனவே தான் நாம் விரும்பும் பிரவுசரை டிபால்ட் பிரவுசராக மாற்றுகிறோம்.


1 comments :

Msakrates at March 8, 2012 at 11:40 PM said...

Nalla pathivu...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes