பிரிண்ட் ஸ்கிரீன் பெற புதிய வழி

மானிட்டர் திரையில் காணும் காட்சிகளை அப்படியே பட பைலாகப் பெற நாம் எளிதான ஒரு வழியை இதுவரை பின்பற்றி வந்தோம். பிரிண்ட் ஸ்கிரீன் பட்டன் அழுத்தினால், திரைக்காட்சி கிளிப் போர்டுக்குச் செல்லும்.

பின் அதனை நாம் விரும்பும் இடத்தில் பேஸ்ட் செய்து எடிட் செய்து வருகிறோம். இன்னும் சற்றும் திறமையாகக் கையாள்பவர்கள், Alt-Prt Scr கட்டளை கொடுத்து, அப்போது செயல்பாட்டில் இருக்கும் விண்டோ காட்சியை மட்டும் படமாகப் பதிவு செய்வார்கள்.

இப்போது இதைக் காட்டிலும் சிறந்த வழி ஒன்று உள்ளது. இந்த வழி விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்தின் சில பதிப்புகளில் கிடைக்கிறது. இது மிக வேகமாகவும், எளிமையாகவும் இந்த வேலையைக் கையாள்கிறது. இதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.

ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, snip என டைப் செய்திடவும். பின்னர், Snipping Tool என்பதில் கிளிக் செய்திடவும். உடனடியாக இந்த புரோகிராம் செயல்படத் தொடங்கும். இப்போது உங்கள் மானிட்டர் திரையின் ஒளி சற்றுக் குறைவாக இருப்பதாகக் காட்டப்படும். கவலைப்பட வேண்டாம்.

இப்போது காட்சிகளை கட் செய்திட நீங்கள் தயாராக இல்லை என்றால், உடனே இந்த செயலைக் கேன்சல் செய்துவிடலாம். Snipping என்பது படத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியினை ஒரு பெட்டியாகக் கட்டம் கட்டி, நறுக்குவதாகும். மவுஸ் மூலம், நீங்கள் விரும்பும் காட்சியினைக் கட்டம் கட்டலாம்.

இதற்கு சிகப்புக் கோடு உங்களுக்குத் துணை புரியும். மவுஸ் பட்டனை விலக்கியவுடன், அதன் மூலம் கட்டச் சிறையில் பிடிக்கப்பட்ட காட்சி தோன்றும். இப்போது இதனை நீங்கள் விரும்பும் பார்மட்டில் (GIF, JPEG, PNG, அல்லது HTML) இதனை சேவ் செய்து விடலாம்.

கிளிப் போர்டுக்கு காப்பி செய்திடலாம். அப்படியே இமெயில் செய்தியாக அனுப்பலாம். அல்லது அதில் குறிப்புகளை எழுதலாம்.


1 comments :

middleclassmadhavi at March 19, 2011 at 10:50 AM said...

thanks

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes