லினக்ஸ் தொகுப்பிற்கான பிரவுசர்கள்

லினக்ஸ் பயன்படுத்துபவர்களும், அந்த சிஸ்டத்திற்கென உள்ள அனைத்து பிரவுசர்கள் குறித்து அறிந்திருப்பதில்லை. ஒன்றிரண்டு பிரவுசர்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருப்பது பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்கள் மட்டுமே. லினக்ஸ் இயக்கத்தில் இயங்கக் கூடிய மற்ற பிரவுசர்கள் குறித்தும் இங்கு காணலாம்.


1. குரோம்:

எந்த சந்தேகமும் இன்றி, குரோம் பிரவுசர் தான் நல்ல வேகத்தில் இயங்கக் கூடிய ஒரு பிரவுசராகும். லினக்ஸ் சிஸ்டத்தில் இயங்க குரோம் மற்றும் குரோம் பிரிமியம் (Chrome and Chromium Browser) என இரண்டு பிரவுசர்கள் கிடைக்கின்றன. குரோம் பிரவுசரின் ஓப்பன் சோர்ஸ் பிரவுசரே குரோமியம் பிரவுசராகும். இரண்டும் ஒரே மாதிரியான வசதிகளை அளிக்கின்றன.


2. பயர்பாக்ஸ்:

மொஸில்லா வழங்கும் பயர்பாக்ஸ், வெகுகாலமாக லினக்ஸ் பயன்படுத்து பவரிடையே மிகவும் பிரபலமானது. மேலும், பல லினக்ஸ் தொகுப்பு களுடன், பயர்பாக்ஸ் இணைந்தே இன்ஸ்டால் செய்யப்பட்டு, மாறா நிலை (Default) பிரவுசராகக் கிடைக்கிறது.


3.ஆப்பரா:

சில வேளைகளில், லினக்ஸ் பயன்பாட்டில், மற்ற பிரவுசர்களைப் பின்னுக்குத் தள்ளி, ஆப்பரா முதலிடம் பெற முயற்சிக்கும். ஆனால் முதல் இடத்தை இதுவரை பெற்றதில்லை. ஆப்பரா பிரவுசரை டவுண்லோட் செய்கையில், அது எந்த வகை லினக்ஸ் சிஸ்டத்தினை, டவுண்லோட் செய்திடும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறது என்று உணர்ந்து, அதற்கேற்ற பதிப்பினை டவுண்லோட் செய்திடத் தந்திடும்.

குரோம் தவிர மற்ற பிரவுசர்களை டவுண்லோட் செய்திடுகையில், குறிப்பிட்ட பிரவுசர் பதிப்பினைச் சுட்டிக் காட்டி, இதனை டவுண்லோட் செய்திடப் போகிறீர்களா என்ற கேள்விக்குப் பதில் பெற்ற பின்னரே, அந்த பிரவுசர் தொகுப்பு இறக்கப்படும்.

இந்த பிரவுசரைப் பெற http://www.opera.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


4.கான்குவரர் (Konqueror):

கே.டி.இ. டெஸ்க்டாப் என அழைக்கப்படும் லினக்ஸ் தொகுப்பிற்கு எல்லாமே Konquerorதான். பைல் மேனேஜ ராகவும், பிரவுசராகவும் இதுவே பயன்பட்டது. பின்னர், கே.டி.இ. தயாரித்த குழுவினர், Dolphinபிரவுசரை இதில் மாறா நிலை பிரவுசராக அறிமுகப்படுத்தினர். ஆனால், Konqueror அருமையான ஒரு பிரவுசர் எனப் பல லினக்ஸ் அபிமானிகள் கூறியுள்ளனர்.

வேறு எந்த பிரவுசரும் தராத சில வசதிகளை இந்த பிரவுசர் தருகிறது. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைய இன்ஜின் செயல்பாடு உள்ளது.இந்த பிரவுசரை இன்ஸ்டால் செய்கையில் அதுKHTML பார்மட் பயன்பாட்டினை இணைத்தே இன்ஸ்டால் செய்கிறது. இந்த பிரவுசரைப் பெறhttp://www.konqueror.org என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


5. லின்க்ஸ் (Lynx):

வெகுகாலமாக, இந்த பிரவுசர் தான் சிறப்பான ஒரே பிரவுசராக இருந்து வந்தது. இணைய தளங்களில் டெக்ஸ்ட் மட்டுமே படிக்க தரப்பட்ட நிலையில், இந்த பிரவுசர் அனைவராலும் பிரியத்துடன் பயன்படுத்தப்பட்டது. கிராபிக்ஸ் யூசர் இன்டர்பேஸ் தராத சர்வருடன் நீங்கள் இணைப்பேற்படுத்தினால், இந்த பிரவுசர் உங்களுக்கு அதிகப் பலனைத்தரும்.

எனவே இப்போதைய ஸ்டாண்டர்ட் பிரவுசரில் கிடைக்கும் லிங்க்ஸ், இமேஜஸ், பிளாஷ் அல்லது ஜாவா அப்ளிகேஷன்கள் எதுவும் இந்த பிரவுசரில் கிடைக்காது. இந்த பிரவுசரைப் பெறhttp://lynx.browser.org/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


6. எபிபனி (Epiphany):

நீங்கள் நம்புகிறீர் களோ, இல்லையோ, எபிபனி பிரவுசர் தான், GNOME டெஸ்க்டாப்பின் மாறா நிலை பிரவுசராக இடம் பெற்றிருந்தது. எபிபனி பிரவுசரை மட்டுமின்றி, அதனுடன் கிடைக்கும் எக்ஸ்டன்ஷன் பேக்கேஜை யும் இணைத்து இன்ஸ்டால் செய்திட்டாலே, அதன் முழு பயனையும் அனுபவிக்க முடியும்.

இந்த பேக்கேஜ் இன்ஸ்டால் செய்யப்படுகையில், அனைத்து ப்ளக் இன் சாதனங்களும் இன்ஸ்டால் செய்யப்படுகின்றன. இந்த பிரவுசரைப் பெற http://projects.gnome.org/epiphany/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


7. அரோரா (Arora):

லினக்ஸ் தொகுப்பு மட்டுமின்றி, மேக் மற்றும் விண்டோஸ் சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்ட பிரவுசர். மூன்று சிஸ்டங்களிலும் பயன்படுத்திப் பார்த்த போது, மூன்றுமே திருப்தியாக, பயனளிக்கும் வகையில் இருந்தது.

பலருக்கு இது போல ஒரு பிரவுசர் இருப்பதே தெரியாது. இதன் தொழில் நுட்பத் திறன் மிகவும் பாராட்டத்தக்கது. அடிக்கடி கிராஷ் ஆகும் பல பிரவுசர்களுக்கிடையில், மிக வலுவாக, சரிந்துவிடாமல் இயங்கும் நல்ல பிரவுசர் இது. இந்த பிரவுசரைச் சோதித்துப் பார்த்து, மாறிக் கொள்ள விரும்பினால், போக வேண்டிய வலைத்தள முகவரி: http://code.google.com/p/arora/


8.மிடோரி(Midori):

எளிமையாகவும் வேகமாக இயங்கக் கூடியதாக ஒரு பிரவுசர் இருக்க வேண்டும் எனத்தான், அனைத்து பிரவுசர் நிறுவனங்களும் இலக்கு வைத்துள்ளன. ஆனால் பல பிரவுசர்கள் இந்த இலக்குகளை அடைவதில்லை. மிடோரி பிரவுசர் இந்த இலக்கினைச் சிறப்பாக அடைந்துள்ளது என்பது ஒரு நல்ல உண்மையாகும்.

இந்த பிரவுசர் கிராஷ் ஆகாமல் தொடர்ந்து செயல் படக் கூடியது. இந்த பிரவுசருக்கென ஆட் ஆன் தொகுப்பு, பிளக் இன் புரோகிராம்கள், தீம்ஸ் போன்றவை எதுவும் இல்லை. இதன் இஞ்சின் தரும் வேகமான இணையச் செயல்பாடு குறிப்பிடத்தக்க தாகும். இந்த பிரவுசரைப் பெற http://www.twotoasts.de /index.php?/ pages/midori_summary.html என்ற முகவரி யில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


9.நெட்சர்ப் (Netsurf):

சுண்டெலியைப் போலச் சிறியதாகவும், சிறுத்தையைப் போல வேகமாகவும் செயல்படும் இந்த பிரவுசர், இணையத்தில் கிடைக்கும் இலவச பிரவுசர். அதிவேகமாகச் செயல்படும் பிரவுசர்களில் இதுவும் ஒன்று. ஆனால் இன்னும் இது சோதனைத் தொகுப்பாகவே உள்ளது. பல புதிய வசதிகளை இன்னும் இது கொண்டிருக்கவில்லை.

ஆனாலும், தயாரிப்பின் தொடக்கத்தில் இருந்தாலும், விளம்பரங்களைத் தடுக்க, பபர் அமைப்பு, பிரவுசர் ஹிஸ்டரி பராமரிப்பு, மெமரி தேக்கம், அச்செடுத்தல், தீம்ஸ் எனப் பல வசதிகளைத் தருகிறது. மேலே சொன்ன அனைத்து பிரவுசர்களையும் பயன்படுத்திப் பார்த்த வகையில், அவற்றின் திறன், தரும் வசதிகள், கூடுதல் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.

குரோம், கான்குவரர், பயர்பாக்ஸ், அரோரா, ஆப்பரா, லிங்க்ஸ், மிடோரி, நெட்சர்ப், எபிபனி எனக் கொள்ளலாம். ஆனாலும் சில குறிப்பிட்ட வசதிகளுக்கு, அதில் சிறப்புப் பெற்ற பிரவுசர்களே சரியானவையாக உள்ளன.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes