மைக்ரோசாப்ட் ஜன்னல்களுக்கு வயது 25

கம்ப்யூட்டர் ஆப்ரேட்டிங் சிஸ்டம் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோசிற்கு தற்போது 25 வயதாகும்,

1975ம் ஆண்டில் ஏப்ரல் 04ம் தேதி பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் துவங்கப்பட்ட போதிலும், தங்களின் முதல் பதிப்பு சாப்ட்வேர் விண்டோஸ் 1.0, நவம்பர் 1985ம் ஆண்டில் வெளியி்ட்டது.

இந்த விண்டோஸ் 1.0 பதிப்பு, கமாண்ட் லைன் பதிப்பிலிருந்து கிராபிக்கல் யூசர் இண்டர்பேஸ் பகுதிக்கு மாற எளிதாக உதவியது. அடுத்ததாக, விண்டோஸ் இரண்டாவது மேஜர் வெர்சனை, 1987 அக்டோபர் மாதம் வெளியிட்டது. விண்டோஸ் 2.0 என்று பெயரிடப்பட்ட இந்த வெர்சன், மேம்படுத்தப்பட்ட யூசர் இண்டர்பேசையும், கீபோர்ட் சார்ட்கட்டையும் தன்னகத்தே கொண்டிருந்தது.

1990களில் வெளியிடப்பட்ட விண்டோஸ் 3.0 பதிப்பு, முந்தைய இருபதிப்புகளை மிஞ்சும் வகையிலும், எண்ணற்ற புதுப்புது அம்சங்களுடனும், மல்டிமீடியா வசதிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டிருந்தது. 1993ம் ஆண்டில்,'நியூ டெக்னாலஜி' எனும் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 'விண்டோஸ் என்டி' (விண்டோஸ் 3.1) எனற பெயரில் புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது.

1995ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி, ஹார்டுவேர்களை இன்ஸ்டால் செய்வதற்கு ஏற்ற வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக அமைக்கப்பட்ட 'விண்டோஸ் 95' அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டே விண்டோஸ் 95 விற்பனைக்கும் வந்தது குறிப்பிடத்தக்கது.

1998ம் ஆண்டு, ஜூன் மாதம் 25ம் தேதி, இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரீ-இன்ஸ்‌டால் செய்யப்பட்டு 'விண்டோஸ் 98' அறிமுகப்படுத்தப்பட்டது. விண்டோஸ் 98 உடன், விண்டோஸ் 95 ஆட்ஆன் பேக்கேஜாகவும் விற்பனைக்கு வந்தது.1999ம் ஆண்டு, விண்டோஸ் 98 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் தரம் மேம்படுத்தப்பட்டு, விண்டோஸ் 98 செகண்ட் எடிசன் என்ற பெயரில் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.


2000வது ஆண்டில், உபயோகிப்பாளர்களின் பல்வேறு தேவைகளை கருத்தில் கொண்டு, 6 வெவ்வேறான பதிப்புகளில் 'விண்டோஸ் 2000 புரொபசனல்' எனற பெயரில் வெளியிடப்பட்டது. அதே ஆண்டிலேயே, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உன்னத மற்றும் பிரமாண்ட படைப்பான 'விண்டோஸ் மில்லினியம் எடிசனும்' வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


'விண்டோஸ் மில்லினியம் எடிசனை ' சுருக்கமாக 'விண்டோஸ் மீ' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. உபயோகிப்பாளர்களிடையே பெரும் வரவேற்பபை ‌இந்த விண்டோஸ் மீ ஆபரேடிங் சிஸ்டம் பெறும் என்று நினைத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. விண்டோஸ் மீ ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை கையாளுவதில் பெரும் அசவுகர்யம் ஏற்பட்டதால் அவர்களிடையே அதிருப்திதான் மேலோங்கி இருந்தது.


இந்நிலையில், அதனுள் உள்ள குறைகளை களைத்திடும் பொருட்டு, 2001ம் ஆண்டில், , இந்த (2010ம் ஆண்டிலும்) உபயோகத்திற்கு ஏற்றவாறு, சிறந்த வடிவமைப்புடன் கூடிய விண்டோஸ் எக்‌ஸ்பி ஆப்ரேடிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி வெளியிட்டது. எக்ஸ்பீரியன்ஸ் என்பதன் சுருக்கமே 'எக்ஸ்பி' ஆகும்.


தற்போதைய நிலையில், சர்வதேச அளவில் அதிகமானோர் விரும்பி உபயோகிக்கப்படும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்ற பெருமையை 'விண்டோஸ் எக்ஸ்பி' பெறுகிறது. பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்காக, புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை 'விண்டோஸ் விஸ்டா' எனற பெயரில் 2007ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. விண்டோஸ் மீ போ‌லவே விண்டோஸ் விஸ்டா ஆப்ரேட்டிங் சிஸ்டமும் பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லாததால் பல்வேறு சர்ச்சைகளுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உட்படுத்தியது.


ஏற்கனவே, விண்டோஸ் மீ மூலம், களங்கத்தை சம்பாதித்த மைக்ர‌ோசாப்ட் நிறுவனத்திற்கு விண்டோஸ் விஸ்டாவும் தோல்வியுற்று, தங்களது நிறுவன வளர்ச்சிக்கு பெரும் தடைக்கற்களாக அமைய, அதிலிருந்து மீண்டு வரும் பொருட்டு, 2009ம் ஆண்டில், விண்டோஸ் 7 என்ற ‌பெயரில் டெக்‌ஸ்டாப் ஆபரேடிங் சிஸ்டத்‌தை அறிமுகப்படுத்தியது. 2011ம் ஆண்டுவாக்கில், ‌விண்டோஸ் 8 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தையும் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இருப்பதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.


1 comments :

ம.தி.சுதா at September 26, 2010 at 12:16 AM said...

தகவலுக்கு நன்றி சகோதரம்...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes