ரூ.980 கோடிக்கு விற்கப்பட்ட பிளாட் வீடு

இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் உள்ள நைட்பிரிட்ஜ் என்ற இடத்தில் ஒரு அடுக்குமாடி வீடு (பிளாட்) உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டு உள்ளது. அதன் விலை 980 கோடி ரூபாய் ஆகும்.

அங்கு உள்ள ஒன் ஹைட் பார்க் என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீடு இந்த விலைக்கு விற்று உள்ளது. 6 ஆயிரம் சதுர அடி உள்ள இந்த வீடு 2 தளங்கள் கொண்ட பிளாட் ஆகும். தரையில் இருந்து கூரை வரையான ஜன்னல்கள் அனைத்தும் குண்டு துளைக்காதவை ஆகும்.

கார் நிறுத்துமிடம், விளையாட்டு திடல்கள், ஆகியவை உள்ளன. இந்த குடியிருப்பில் உள்ள சுரங்கப்பாதை அருகில் உள்ள மண்டாரின் ஓரியண்டல் ஓட்டலை இணைக்கிறது. 24 மணிநேர ரூம் சர்வீஸ் இருக்கிறது. குடியிருப்பிலேயே அனைத்து பொருள்களும் கிடைக்கும் கடைகள் உள்ளன.

விஷவாயு தாக்குதல் நடத்தாமல் தடுப்பதற்காக ஏர் பியூரிபையர் பொருத்தப்பட்டு உள்ளது. கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள் ஆகியோரிடம் இருந்து தப்பிப்பதற்காக பேனிக் ரூம் உள்ளது.

அங்கு தங்கி உரிமையாளர்கள் ஓய்வு எடுக்கலாம். வீடு முழுவதும் ஆடம்பரமான உள் அலங்கார வேலைகள் செய்யப்பட்டு உள்ளன.


1 comments :

Tamil News 24x7 at August 14, 2010 at 5:03 PM said...

உங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://writzy.com/tamil/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes