வெப் பிரவுசர்களில், டெக்ஸ்ட் எடிட்டர்களில் இருப்பது போல, ஹைலைட் செய்வதற்கும், டெக்ஸ்ட்டைக் குறித்து வைப்பதற்கும் வசதிகள் இல்லை. இணைய தளங்கள் சிறிய அளவில் 500 முதல் 1000 சொற்களுக்குள் இருந்தால், இந்த தேவை எழாது. 
ஆனால் 200 பக்க இணைய தளம் ஒன்றை எண்ணிப் பாருங்கள். படித்துப் பார்க்கவும், படித்ததில் குறித்து வைத்ததைத் தேடிப் பார்க்கவும் சில நாட்கள் ஆகலாம்.
இணைய தளங்களில் தகவல்களைப் படித்தறிகையில், அவற்றில் பல வரிகள் நமக்கு முக்கியமாகத் தென்படும். அவற்றை ஹைலைட் செய்திட விரும்புவோம். அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில், வெவ்வேறு வண்ணங்களில் ஹைலைட் செய்திட முயற்சிப்போம்.
பயர்பாக்ஸ் பிரவுசரில் இதற்கான வசதியை வயர்டு மார்க்கர்  Wired Marker  என்னும் சிறிய புரோகிராம் தருகிறது. இது ஒரு ஆட் ஆன் தொகுப்பாகும். இதனை எலக்ட்ரானிக் புக்மார்க்கர் என்று சொல்லலாம். இதனை இலவசமாக இறக்கம் செய்து, பதிந்து கொண்டு பயன்படுத்தலாம். இதனை தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்த பின்னர், வெப் பிரவுசரிலேயே இதற்கான டூல் இணைக்கப்படுகிறது. 
காண்டெக்ஸ்ட் மற்றும் டூல் மெனுவில் இது கிடைக்கிறது. இதில் இன்னொரு வசதியும் தரப்பட்டுள்ளது. நாம் இதன் மூலம் ஹைலைட் செய்திடும் வரிகள் அனைத்தும், ஒருவகையான ஸ்கிரேப் புக்கில் காப்பி செய்யப்படுகிறது. இதனை அப்படியே வேறு ஒரு இடத்தில் பேஸ்ட் செய்தும் கொள்ளலாம்.
எட்டு வகையான மார்க்கர்கள் உடனடியாகக் கிடைக்கின்றன. கூடுதலாக இணைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. ஒவ்வொரு மார்க்கரும் ஒரு வண்ணத்தில், ஒரு குறிப்பிட்ட ஸ்டைலில் அமைந்துள்ளது. இதனால் ஒரே இணையதளத்தில் வெவ்வேறு நோக்கத்திற்காகத் தகவல்களைத் தேடுபவர்களுக்கு இந்த மார்க்கர்கள் மிகவும் உதவியாய் இருக்கும்.
ரைட் கிளிக் செய்தால், இந்த வயர்டு மார்க்கர் மெனு கிடைக்கும். இதில் நமக்குத் தேவையான வண்ணம் மற்றும் ஸ்டைல் மார்க்கரினைத் தேர்ந்தெடுக்கலாம். இவற்றின் மூலம் ஹைலைட் செய்த டெக்ஸ்ட் வரிகள் அல்லது ஆப்ஜெக்ட்டுகள், அடுத்த முறை இந்த தளத்திற்குச் செல்கையில்,பக்கத்து பாரில் காட்டப்படுகின்றன. 
ஏற்கனவே ஹைலைட் செய்த டெக்ஸ்ட்டின் மீது டபுள் கிளிக் செய்தால், கர்சர் அந்த டெக்ஸ்ட் உள்ள இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இதனைப் பெற https://addons.mozilla.org /enUS/firefox/addon/6219/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
                    
                     
0 comments :
Post a Comment