விரைவில் வருகிறது 3டி டி.வி.,

நியூயார்க்: சினிமா தியோட்டர்களில் மட்டுமே பார்த்து வந்த 3டி எபக்டை, இனி டி.வி.,யிலும் பார்த்து கொள்ளலாம். இந்த முயற்சியில் தான் தற்போது சாம்சங் மற்றும் பானாசோனிக் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்நிறுவனங்கள் தயாரித்துள்ள 3டி டி.வி.,க்களை விரைவில் சந்தையில் விட உள்ளன. இதன் விலை 3000 டாலர் வரை இருக்கும் என்று எதிர்பாக்கப் படுகிறது. பானசோனிக் நிறுவனம் வெளியிட உள்ள 3டி டி.வி.,யில், 3 டி கண்ணாடிகள் தரப்படுகின்றன.

இது, தியேட்டர்களில் தரப்படுவதைப் போல பயன்படுத்தியதும் தூக்கியெறியும் ரகமல்ல. இவை அளவில் பெரியதாகவும், ரீசார்ஜ் செய்யக் கூடிய எலெக்ட்ரிக் கண்ணாடிகளாகவும் இருக்குமாம்.


ஹாலிவுட்டில் ஷ்ரெக், அவதார், அலைஸ் இன் வொன்டர்லேண்ட் என பெரும்பாலும் 3 டி படங்கள் வரத் தொடங்கிவிட்டதால் அவற்றுக்கு தொலைக்காட்சி உலகிலும் பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்த வேண்டிய அவசியம் காரணமாக இந்த 3டி டிவிக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


எப்படியும் இந்த ஆண்டு 40 லட்சம் 3 டி டிவிக்கள் விற்றுவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes