விலகிச் சென்ற சிம்பு; விரும்பி வந்த ஜீவா

கோ படத்தில் வம்பு பண்ணி நடிக்க மறுத்த சிம்பு அப்படத்தில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து அப்படத்தின் நாயகனாக ஜீவா நடிக்கிறார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நாயகியாக நடிப்பவர் ராதா மகள் கார்த்திகா. சிம்பு தனக்கு ஜோடியாக இந்த கார்த்திகா வேண்டாம், தமன்னாவை போட வேண்டும் என அடம் பிடித்ததால் வந்த பிரச்னையால்தான் படத்தில் இருந்‌தே விலகி விட்டார் என்ற செய்திகளும் பரவி வருகின்றன.

சி்ம்புவுக்கு முன்பாக முதலில் கோ படத்தில் கமிட் ஆகவிருந்தவர் பருத்திவீரன் கார்த்தி. அவர் ஆரம்பத்திலேயே கதையில் மூக்கை நுழைத்ததால்தான் சிம்புவிடம் சென்றார் கே.வி.ஆனந்த். இப்போது புக் ஆகியிருக்கும் ஜீவா, டைரக்டர் என்ன சொல்றாரோ...

அதுபடி நடித்துக் கொடுக்கிறேன். கதை என்ன? நாயகி யார்? என்பதெல்லாம் எனக்கு முக்கியம் கிடையாது. ஒரு படத்தில் கமிட் ஆகி விட்டால், அந்த படத்தில் இடம்பெறும் என்னுடைய கேரக்டரை நல்லபடியாக செய்து முடிப்பேன்.

அதுவே எனக்கு வெற்றியை தேடித் தரும் என்று சொல்லி விட்டாராம். ஜீவா, கே.வி.ஆனந்த், நாயகி கார்த்திகா, மற்றொரு நாயகன் அஜமல் உள்ளிட்ட குழுவினர் விரைவில் சீனா செல்கிறார்கள் சூட்டிங்கிற்காக...!


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes