சிடி'க்கள் தரும் சிக்கல்கள்

அன்றாடம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில், சிடிக்களைக் கையாளும் பிரச்சினையும் ஒன்று. இன்றைய சூழ்நிலையில் சிடிக்களைப் பயன்படுத்துவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.

பிளாஷ் டிரைவ் பயன்பாடு, பைல்களைக் காப்பி செய்து எடுத்துபோவதை மிக எளிதாக மாற்றியுள்ளது. இருப்பினும் ஓரிரு பைல்களை எழுதி, எழுதப்பட்ட மீடியாவினை யாருக்கேனும் தந்து விட்டு வர வேண்டும் என்றால் அதற்கு சிடிதான் சரியான வழி. எனவே சிடியைக் கையாள்வதில் உள்ள பிரச்சினைகளை இங்கு காணலாம்.


அவசரமாக ஏதேனும் பைலை சிடியில் எழுதி எடுத்துக்கொண்டு செல்லத் திட்டமிடுகையில் அது வெளியே வர மறுக்கும். அல்லது எழத மறுக்கும். எழுத மறுத்து வெளியே வந்துவிட்டால், இன்னொரு சிடியை உள்ளே செலுத்தி எழுதலாம்.

சிடி வெளியே வரவில்லை என்றால் என்ன செய்யலாம்? இந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ளலாம் என்று பார்க்கலாம். பல வேளைகளில் நாம் ஒரு சிடியை அதன் டிரைவில் போட்டு பயன்படுத்திய பின்னர் வெளியே எடுத்து பாதுகாப்பாக வைக்க மறந்துவிடுகிறோம்.

டிரைவ் பிரச்சினை தருவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு முறை அதன்பின் விண்டோஸ் எக்ஸ்புளோரரை இயக்குகையில் சிடியின் டிரைவ் இயங்கும். இது தேவையற்ற ஒன்றாக இருக்கும். இதனால் சிடி டிரைவ் இயக்கத்தில் சில தடங்கல்களை ஏற்படுத்தலாம்.

குறிப்பாக சிடியில் பைல்களை எழுதி முடித்துவிட்டால், உடனே எடுத்துவிட வேண்டும். இதனால் தான் சிடியில் எழுதுவதற்குப் பயன்படும் நீரோ போன்ற புரோகிராம்களில் சிடியில் எழுதும் வேலை முடிந்துவிட்டால், உடனே அதனை வெளியே தள்ளும் எஜெக்ட் என்னும் செயல்பாட்டினை செட் செய்திடும் வகையில் வழிகள் தரப்பட்டுள்ளன.

சிடி வெளியே வராத நிலையில் அந்த சிடியில் இன்னொரு பைலை எழுதிப் பாருங்கள். ஏற்கனவே எழுதிய பைல் பார்மட்டில் இல்லாமல் வேறு வகை பார்மட்டில் எழுதிய பைலை காப்பி செய்து பாருங்கள். காப்பி ஆனவுடன் சிடி வெளியே வர வாய்ப்புகள் உள்ளன.


வர மறுக்கும் சிடியை எடுக்க இன்னொரு சிறந்த வழி கம்ப்யூட்டரை ரீ பூட் செய்வதாகும். இதனால் சிடி வெளியே வரும் வாய்ப்புண்டு. மை கம்ப்யூட்டரை கிளிக் செய்து அதில் கிடைக்கும் விண்டோவில் சிடி டிரைவிற்கான இடத்தில் ரைட் கிளிக் செய்து அதில் Eject என்பதில் கிளிக் செய்து பார்க்கலாம்.


இதில் ஒரு முறை கிளிக் செய்தால் மட்டும் போதாது. பல முறை கிளிக் செய்தால் ஏற்படும் கட்டளைத் திணிப்பில் டிரைவ் வெளியே வரலாம். இத்தனை வழிகளையும் கையாண்டு வெளியே வரவில்லை என்றால் இறுதியாக நம் பலத்தை பிரயோகிக்க வேண்டியதுதான்.


அது ஒன்றுமில்லை; ஒரு சிறிய பேப்பர் கிளிப் என்ற ஜெம் கிளிப்பைப் பிரித்து நீட்டி டிரைவின் கதவில் தெரியும் சிறிய துவாரத்தில் மெதுவாகச் செருகவும். ஒரு இடத்தில் எதிராக ஒரு சிறிய தடுப்பில் நிற்கும். அதனை மெதுவாக அழுத்தினால் கதவு திறக்கப்படும். பின் சிடியை எடுத்துவிடலாம்.சிடியைச் சரியாக அதன் டிரைவில் பொருத்தவில்லை என்றால் அது உள்ளே செல்லாமல் மீண்டும் மீண்டும் அதன் கதவு திறக்கப்படும். நாம் டிரைவின் கதவு மூடப்படுவதில்தான் பிரச்னை என்று முடிவு செய்து பலத்தைப் பயன்படுத்தி கதவை மூடக்கூடாது.


பொறுமையாக என்ன பிரச்னை என்று ஆய்வு செய்திட வேண்டும். அதன் முதலாவது செயல்தான் சிடியைச் சரியாக அதன் இடத்தில் வைப்பது. சிறிய அளவில் அது சரியாக இல்லை என்றால் அதன் உள்ளாக மோட்டார் ஸ்டெம் உட்காருகையில் அது தானே சரி செய்யப்படும்.


அப்படி சரி செய்திட முடியாத பட்சத்தில் சிடி டிரைவின் செயல்பாட்டில் மாறுதல் ஏற்படும். சரியாக இயங்காது. இதைப் போன்ற சூழ்நிலைகளில் சிடிக்கள் சில நொறுங்கிப் போன நிகழ்வுகளும் நடந்தது உண்டு. எனவே ஒரு சிடி டிரைவ் சரியாக இயங்கவில்லை என்றால் நாம் அதனைப் பயன்படுத்தும் முறைதான் சரியில்லை என்று பொருள்.


எனவே கம்ப்யூட்டரின் மீது கோபப்படுவதனை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் அதனைச் சரியாக இயக்க முயற்சிக்க வேண்டும்.சில வேளைகளில் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு ஒரு சிடியின் மீது இன்னொரு சிடியை போட்டு இயக்க முயற்சிப்பது; சிடியை தலைகீழாக வைத்து இயக்க முயற்சிப்பது; ஒரு சிடி என்று எண்ணிக் கொண்டு இரண்டு சிடிக்களை டிரைவில் வைப்பது போன் ற நிகழ்வுகள் நீங்களை நம்பாமல் இருக்கலாம்.

ஆனால் பல வேளைகளில் இவ்வாறு நடந்துள்ளது. நீங்களும் இந்த தவற்றை என்றாவது அவசரத்தில் செய்ய முற்படலாம். அவ்வாறு நேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவே இந்த எச்சரிக்கை தரப்படுகிறது.

சிடிக்கள் டேட்டாவினைப் பதிந்து வைத்திட நம்பகமான மீடியம் என்றாலும் அவையும் என்றாவது ஒரு நாள் அல்லது ஒரு வேளையில் பயன்படுத்த முடியாமல் போகலாம். எனவே சிடியில் டேட்டாக்களை எழுதிவிட்டோமே என்று அந்த பைல்களை முற்றிலுமாக அழித்துவிடக்கூடாது.

வேறு ஒரு மீடியத்தில் எழுதி வைக்கலாம். இன்னொரு கம்ப்யூட்டரில் அல்லது ஹார்ட் டிஸ்க்கின் இன்னொரு டிரைவில் போட்டு வைக்கலாம். இவ்வாறு பேக்கப் எடுத்து வைப்பது நல்லது. பயன்படுத்த நல்ல தரமான நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் சிடிக்களையே வாங்க வேண்டும். விலை குறைவாக இருக்கிறது என்று தரம் குறைந்த சிடிக்களை வாங்கிப் பயன்படுத்துவது தவறு.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes