விமான கட்டணம்: ஏர் இந்தியா குறைப்பு

ஏர் இந்தியா நிறுவனம் விமான கட்டணத்தை 20 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை குறைத்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 50 சதவீதம் கட்டணக் குறைப்பை அறிவித்ததால் அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஏர் இந்தியாவும் விமான கட்டணத்தைக் குறைத்துள்ளது.

இம்மாதம் 18-ம் தேதி வரை இந்த கட்டண குறைப்பு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. இதன்படி ஏர் இந்தியா விமானத்தில் மும்பையிலிருந்து தில்லிக்கு பயண கட்டணம் ரூ. 2,729 ஆகும். இதேபோல தில்லியிலிருந்து பெங்களூருக்கான கட்டணத்தை ரூ. 3,229 ஆகக் குறைத்துள்ளது.

தில்லியிலிருந்து சென்னைக்கான விமான கட்டணம் ரூ. 3,079. இதேபோல தில்லியிலிருந்து ஸ்ரீநகர் செல்ல விமான கட்டண் ரூ. 1,929- ஆகவும் நாகபுரியிலிருந்து மும்பைக்குச் செல்ல கட்டணம் ரூ. 3,079 ஆகவும் குறைத்துள்ளது.

மும்பையிலிருந்து கொல்கத்தாவுக்கான கட்டணம் ரூ. 3,529 ஆக ஏர் இந்தியா குறைத்துள்ளது. தில்லியிலிருந்து ஹைதராபாத் செல்ல கட்டணம் ரூ. 3,329 ஆகும். இந்த கட்டண குறைப்பு சலுகையில் செப்டம்பர் 17-ம் தேதி வரை பதிவு செய்யலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes