உண்மைகளும் நம்பிக்கைகளும்....

கிழே கொடுக்கப்பட்டவைகளில் எத்தனை உண்மை?

1) லேம்மிங்-கள் மலையுச்சியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ளும்

2) பச்சோந்திகள் சுற்றுசூழலுக்கு  ஏற்றவாறு தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்ளும்

3) நிலவிலிருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் தெரியும்

4) அலெக்சாண்டர் கிரகாம்பெல் தொலைபேசியை முதன் முதலில் கண்டு பிடித்தார்

5) ரோம் எரியும்போது நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்

6) பேஸ்பால் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது

7) Survival of the fittest என்ற கோட்பாட்டை உருவாக்கியவர் சார்லஸ் டார்வின்

8) இறந்த பின்னும் நகமும் முடியும் வளரும்

9) இந்த உலகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பிராணவாயு மரங்களிடமிருந்து தான் கிடைக்கின்றன

10) முதன் முதலில் பென்சிலினைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் பிளமிங்

11) ஹிட்லர் ஒரு சைவ ஆசாமி

http://www.thenatureofreality.com/facts.htm-படி மேலே சொன்னவை ஒன்று கூட உண்மை இல்லையாம். விக்கி பீடியாவையும் பார்த்தேன் - ஆமாம் என்கிறது அதுவும். மேலே சொன்னவை எல்லாம் காலம் காலமாக சொல்லப்பட்ட நம்பிக்கைகள் தான்.



0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes