லண்டன்: காய்கறிகளால் வடிவமைக்கப்பட்டு சாக்லேட்டை எரிபொருளாக கொண்டு ஓடக்கூடிய பந்தய காரை பிரிட்டன் வார்விக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர்.இது குறித்து,வார்விக் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் மெரிடித் கூறியதாவது:பந்தய கார்களால் சுற்றுசூழல் பாதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை களைவதற்காக காய்கறிகளால் செய்யப்பட்ட காரை உருவாக்கியுள்ளோம்.ஈகோ எப் 3 என பெயரிடப்பட்டுள்ள இந்த காரின் ஸ்டியரிங் காரட்,பீட்ரூட்,முள்ளங்கியாலும்,கார் கண்ணாடி மற்றும் காரின் வெளிபாகங்கள் உருளைகிழங்காலும்,கார் இருக்கைகள் சோயாபீன்சாலும் உருவாக்கப்பட்டுள்ளன.சாக்லேட்டை எரிபொருளாக கொண்ட திரவத்தாலும்,எரிவாயுவாலும் ஓடக்கூடிய இந்த கார் மணிக்கு 145 மைல் வேகத்தில் செல்லக்கூடியது என்றாலும் உண்மையான பந்தய காருக்கு இணையாக இதை ஒப்பிடமுடியாது. இவ்வாறு மெரிடித் கூறினார்.
0 comments :
Post a Comment