குறிப்பாக இரத்த மாதிரியைக் கொண்டு மேற்கொள்ளப்படும் மரபனு பரிசோதனைகளின் ஊடாக பல்வேறு தகவல்களை வெளியிட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஒரு நபரது புவியியல் பூர்விகம் பற்றிய தகல்களை மரபனு சோதனைகளின் மூலம் அறிந்து கொள்ளக் கூடிய தொழில்நுட்ப சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
மரபனு சோதனை வரைபடங்களின் மூலம் ஐரோப்பாவின் எந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதை தெளிவாக குறிப்பிட முடியும் என ஆரம்ப கட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தில் உள்ள பல்வேறு மொழிகளைப் பயன்படுத்தும் சுவிஸ் பிரஜைகளை பிரத்தியேகமாக அடையாளம் காணக்கூடிய வகையில் இந்த தொழில்நுட்பம் அமைந்துள்ளது.
இந்த முறையின் மூலம் ஒருவரது நாட்டு பூர்வீகத்தை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என ஆய்வுகளை மேற்கொண்ட பிரதான ஆய்வாளர் டொபி ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment