இன்றைக்குள்ள மாணவர்கள் முதல் அவர்களது தாத்தாக்கள் வரை, உலகத்தின் கூரை என்றால், திபெத் என்று புவியியல் பாடத்தில் படித்திருப்பார்கள். கடல் மட்டத்துக்கு மிக உயரமான இடத்தில் அமைந்திருப்பதாலேயே திபெத்துக்கு இந்தப் பெயர். இது மட்டுமல்ல, வட துருவம் தென் துர்வம் தவிர்த்து மூன்றாவது துருவம் என்றும் திபெத் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் இருப்பதால், இதன் தட்ப வெப்ப நிலை, எப்போதும் சிலு சிலுவென இருக்கும். பச்சைப் பசேலென்ற புல்வெளிகள், வானுயர நிற்கும் பனி மலைகள், ஒடையாய் உருவெடுத்து குதித்தோடி பாறையிலிருந்து கீழே விழும் நீர்விழ்ச்சிகள் என இயற்கை அண்ணையின் அழகான ஒரு அன்பளிப்பாய், கண்களுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு இதமும், உடலுக்கு புத்துணர்ச்சியும் தரும் நில அமைவை உடையது, திபெத். ஆனால் இன்றைக்கு சுருங்கிக்கொண்டிருக்கும் பனிமலைகள், உறைபனி நிலத்தின் உருகுதல், புல்வெளிகள் மஞ்சள் நிறமாதல், ஆறுகளின் வறட்சிமயமாக்கம் என திபெத்திலான உலக வெப்பமேறலின் பாதிப்புகளை ஆய்வு செய்வோர், பெரிதும் கவலைப்படுகின்றனர். அண்மையில் யாங்சு ஆற்றின் நதிமூலப்பகுதியிலான பனிமலைகள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக குறைந்து வருகின்றன, சுருங்கி வருகின்றன என்கிறார் சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த லி யாஜியே. இவர் நான்சிங் புவியியல் மற்றும் நீர்நிலையியல் நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலாளாவார். சிங்காய் திபெத் இருப்புப்பாதையில் பயணிப்பவர்களுக்கு வழியில் காணப்படும் யூசு மலை உள்ளிட்ட 15 பனிச்சிகரங்களை பார்ப்பது ஒரு மகிழ்ச்சிகரமான, சிலிர்ப்பான அனுபவமாகும். ஆனால் யூசு மலையின் மேற்கே பனிமலை பள்ளத்தாக்கு பகுதிக்குள் நுழையும்போது, தற்போது 5000 மீட்டருக்கு மேல் பனிமலை இருப்பதற்கான அறிகுறியே காணமுடியவில்லை. பனி மலைக்கு பதிலாக, சிறிய ஓடைகளாக நீருற்றுகள் வழிந்தோடுவதை காணமுடிகிறது. மலையின் மறுபக்கத்தில் பனி மலையின் மிச்சம் மீதியை காணமுடிகிறதாம். ஒரு மனிமலையின் மறைதல், உருகுதல், இல்லாமல் போதலுக்கு நான்கு நிலைகள் உண்டு. இந்தக் குறிப்பிட்ட பனிமலை அதில் நான்காவது, இறுதிக்கட்டத்தில் இருக்கிறது என்பது துயரமான சேதி என்கிறார் லி யாஜியே. சிங்காய் திபெத் பீடபூமி 36 ஆயிரம் பனி மலைகளுக்குச் சொந்தக்காரி என்று புகழ்பெற்று விளங்கியது. 50 ஆயிரம் சதுர கி மீ பரப்பளவிலான் ஐந்த 36 ஆயிரம் பனி மலைகள், சீனாவின் முக்கிய நதிகளுக்கும், தென்கிழக்காசியாவின் முக்கிட நதிகளுக்கும் ஊற்றுமூலமாய் அமைந்து, நீரை வாரி வழங்கிக்கொண்டுள்ளன. ஆனால் கடந்த 100 ஆண்டுகளில், இந்தப்பனிமலைகளின் பரப்ப் 30 விழுக்காடு குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலக வெப்பமேறலின் ஒரு தோராய மதிப்பீட்டின் படி தற்போதுள்ளதை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்தால், இந்தப் பனிபிரதேசத்தின் பரப்பளவு பாதியாகிவிடும் என்று எச்சரிக்கை தொனிக்க கூறுகின்றனர் அறிவியலர்கள். உலக வெப்பமேறலின் கசப்பான, கொடுமையான முரண்களில் ஒன்று, இப்படி பனிமலைகள் வெப்பத்தால் உருகினாலும் அது நீர் தேவை மற்றும் வினியோகத்துக்கு ஆக்கப்பூர்வ பங்காற்றாது என்பதே. பனி மலைகள் உருகியோடும்போது அதிகமான நீர், வெப்பமான தட்பவெப்ப நிலையால் ஆவியாகி விடுகின்றன. மட்டும்மல்ல வெப்ப நிலையின் அதிகரிப்பு திபெத்தின் நில அமைவில் குழப்பங்களியும் ஏற்படுத்துகிறதாம். சிங்காய் திபெத் நெடுஞ்சாலை வழியே செல்லும் பயணிகள், கடந்த சில ஆண்டுகளாக, குண்டும் குழியுமான சாலைப் பகுதிகளால் அவதியுறுகின்றனர். கடல் மட்டத்திலிருந்து 4700 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான உடாலிங் என்பதை உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்த சிறிய நகரத்தை ஒட்டிய நெடுஞ்சாலை பகுதி மிக மோசமான நிலையில் உள்ளது. அசுரபலம் கொண்ட ராட்சதர்கள், ராட்சத ஆயுதங்கள் கொண்டு தாக்கியது போல காட்சியளிக்கும் இந்த நெடுஞ்சாலை பகுதி, இயற்கையின் திருவிளையாடலால் அப்படி ஆனது என்றால் நம்பமுடிகிறதா. இயற்கையின் இந்த திருவிளையாடலின் பின்னணியில் மனிதனின் தன்னலத்தால் உருவான செயற்கைத்தனங்கள் அணி வகுத்துள்ளது வேறு கதை. புவியின் மேற்பரப்புக்கு கீழே உறைந்துள்ள பனிப்படலம் உருகுவதால், திடமான பனி திரவமாக, மேற்பரப்பில் போடப்பட்ட சாலை, குமுங்கிவிடுகிறது, ஆகவே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிரது. இந்த உறைபனி உருகுதலால் கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்திலுள்ள தாவர வாழ்க்கைச் சூழலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளில் உலக வெப்பத்தாலும், நீராவியதலாலும் ஏற்பட்ட நீரின் இழப்பு இப்பகுதியிலான நீர் இருப்பை குறைத்து புல்வெளிகலை வறட்சிகாணச் செய்துள்ளது என்கிறார் சீன அறிவியல் கழகத்தின் பனி மற்றும் விளைநிலப் பிரதேச சுற்றுச்சூழல் மற்றும் பொறியியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலாளர் லி யுவன்ஷுவோ. கடந்த 15 ஆன்டுகளில் கடல் மட்டத்திலிருந்து உய்ரமான இடங்களிலுள்ள 15 விழுக்காட்டு புல்வெளிகளும், கால் பன்குதி சதுப்பு நிலங்களும் காணாமல் போயுள்ளன என்கிறார் லி யுவன்ஷுவோ. சீனா உள்ளிட்ட பல நாடுகள் உலக வெப்பமேறலை தணிவுபடுத்த, வேகம் குறைக்க முயற்சிகளிஅ மேற்கொண்டுள்ளன. ஆனால் இந்த் அபிரச்சனையின் அளவு எவ்வளவு பெரிது என்றால், அனைத்து நாடுகளும் அனைத்து மக்களுன் இந்தப்பணியில் கைகோர்த்து செயல்படவேண்டும், அப்போதுதான் பயன் கிட்டும்.
உலகத்தின் கூரை
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment