ஏமாறுவது எங்கள் தொழில்

**பதிவு செய்தால் வேளை என்ற அரசு உத்திரவாதத்தில் மயங்கி பதிவு செய்து வேலை கிடைக்காமல் ஏமாந்து நிற்போர்.

*ரயில் பயண சிநேகிதனின் ரகசிய பிஸ்கட் தந்த மயக்கத்தில் பண்ப்பையை பறிகொடுத்து விட்டு ஏமாந்து நிற்போர்

*பழைய நகையை பாதுகாக்கும் எண்ணத்தில் முன் பின் தெரியாதவனிடம் பாலிஷ் போட கொடுத்து விட்டு துரும்ப கிடைக்காமல் ஏமாந்து நிற்போர்

*அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு சிறுக சிறுக சேர்த்த பணத்தை சீட்டுக் காரனிடம் கொடுக்க அவன் அதை சீட்டிங் அடித்து விட அசலே கிடைக்காமல் ஏமாந்து நிற்போர்

*வெளிநாட்டு மோகத்தில், இருந்த ஓர் ஏக்கர் நிலத்தையும் ஏஜெண்டிடம் கொடுத்து விட்டு எந்த ஒரு விசாவும் வராமல் ஏக்கப் பெருமூச்சுடன் ஏமாந்து நிற்போர்

*தொலைக்காட்சியின் விளம்பரம் கண்டு போலி மருந்தொண்று  வாங்கி உண்டு இருந்த உடல் நலத்தையும் இழந்து விட்டு ஏமாந்து நிற்போர்

*இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு  விதத்தில் ஒவ்வொரு நாளும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஏமாற்று பவர்களிடமிருந்து ஏமாறாமல் நாம் தான் உஷார் நிலையில் இருக்க வேண்டும் .


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes