விஜய்யின் வேலாயுதம் படத்தின் கதை!

அடுத்தடுத்து தோல்விப்படங்களை கொடுத்து வரும் நடிகர் விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் படம் வேலாயுதம். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்தினை டைரக்டர் ஜெயம் ராஜா இயக்குகிறார். 

நாயகியாக ஜெனிலியா நடிக்க உள்ளார். பிரமாண்ட அளவில் தொடக்க விழாடை நடத்த திட்டமிட்டிருக்கிது வேலாயுதம் டீம். இந்நிலையில் வேலாயு‌தம் படத்தின் கதை பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஜெயம் ராஜாவும், விஜய்யும் ரீ-மேக் பிரியர்கள். விஜய்யை பொருத்தவரை அவ்வப்போது காலை வாரிவிட்டாலும் தொடர்ந்து ரீ-மேக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஜெயம் ராஜாவுக்கு ரீ-மேக்தான் ரொம்ப ராசி. 

இப்போது அவர் வேலாயுதம் படத்திற்காக தேர்ந்‌தெடுத்திருக்கும் கதையும் ரீ-மேக்தான் என்கிறது விவரமறிந்த கோடம்பாக்கம் வட்டாரம்.

மறைந்த இயக்குனர் திருப்பதிசாமி சில ஆண்டுகளுக்கு முன் ‌தெலுங்கில் இயக்கிய 'ஆசாத்' என்ற படத்தை தழுவித்தான் வேலாயுதத்தை உருவாக்கப் போகிறாராம் ராஜா. இந்தியன், முதல்வன், அந்நியன் என்று ஷங்கரின் கைவண்ண கலவைதான் இந்த ஆசாத் படம் என்று தெலுங்கு பட வட்டாரம் சொல்கிறது. அப்போ... படத்தோட கதை என்னவாக இருக்கும்னு புரியுதா?!


லேப் டாப், நெட்புக் அல்லது ஸ்மார்ட் போன்

பெர்சனல் கம்ப்யூட்டிங் உலகம் மாறி வருகிறது. இப்போது நமக்குக் கிடைக்கும் விற்பனை அறிக்கைகளை வைத்துப் பார்க்கையில், டெஸ்க் டாப் விற்பனை பின்னுக்குச் செல்கிறது. லேப்டாப் அதன் இடத்தைப் பிடித்துள்ளது. 

கம்ப்யூட்டர் என்றால் அது லேப்டாப் தான் என்று ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதே வகையில் நெட்புக் கம்ப்யூட்டர்கள் விற்பனையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எடுத்துச் செல்ல எளிதாக இருப்பதாலும், விலை குறைந்து இருப்பதாலும், கம்ப்யூட்டர் செயல்பாட்டு எதிர்பார்ப்பில் சிலவற்றை தியாகம் செய்து, மக்கள் நெட்புக் கம்ப்யூட்டரினைப் பயன்படுத்தத் தயாராகி வருகின்றனர்.

இவை எல்லாவற்றைக் காட்டிலும், இவற்றின் இடத்தை ஸ்மார்ட் போன்கள் பிடித்து வருகின்றன. இவற்றின் இயக்கம் முற்றிலும் ஒரு கம்ப்யூட்டர் போலவே இருப்பதால், கம்ப்யூட்டருக்குப் பதிலாக, ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

அதனாலேயே இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள், பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை, ஸ்மார்ட் போனுக்கு இணைவாக உருவாக்கி வெளியிட்டு வருகின்றன. இவற்றைப் பயன்படுத்துபவருக்குப் பணம் செலவானாலும், நேரத்தின் அருமை கருதி, பலரும் ஸ்மார்ட் போன்களைக் கம்ப்யூட்டரின் இடத்தில் பயன்படுத்தத் தொடங்கி வருகின்றனர். 

இந்த மூன்று சாதனங்களுக்குமான விற்பனை விலையில் வேறுபாடு அப்படி ஒன்றும் அதிக அளவில் வித்தியாசமானதாக இல்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆஹா! இப்படிச் சொன்னால் எப்படி! எதனை நாங்கள் வாங்க வேண்டும் எனப் பட்டியலிட்டால் தானே, ஒரு முடிவு எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கிறீர்களா! 

இதோ நம் வேலை அடிப்படையில் இவற்றின் நிறை, குறைகளைப் பார்க்கலாம். இவை எல்லாமே மொபைல் சாதனங்கள் என்ற அடிப்படையில் வருகின்றன. கைகளில் எடுத்துச் சென்று, எந்த இடத்திலும் நம் கம்ப்யூட்டர் வேலைகளை நாம் மேற்கொள்ள முடியும். 

1. நிறுவன, அலுவலக வேலைகள்: நம் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள நிறுவன, அலுவலக வேலைகளுக்கு நீங்கள் கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்துகிறீர்களா! பெரிய வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஒர்க் ஷீட்கள், மல்ட்டிமீடியா காட்சித் தொகுப்புகள், உங்கள் நிறுவனத்திற்கென அமைத்துத் தரப்பட்ட சாப்ட்வேர் புரோகிராம்கள் ஆகியன உங்கள் பணியை நிர்ணயம் செய்கின்றனவா? 

இந்த சாதனங்கள் உங்களுக்கு எப்படி பயன்படும் என்று பார்க்கலாம்?

இத்தகைய வேலைகளுக்கு ஒரு முழுமையான லேப்டாப்தான் சிறந்த தேர்வாக அமையும். அதிக சக்தியுடன் கூடிய சி.பி.யு., ராம் மெமரி, எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருந்து இடர்களைத் தாங்கும் சக்தி லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கே உள்ளது. ஆனால் ஒரு நல்ல பிசினஸ் லேப்டாப், மற்ற இரண்டு சாதனங்களின் விலையைக் காட்டிலும் இரு மடங்காக இருக்கும்.

இந்த வகையில் நெட்புக் கம்ப்யூட்டர்கள் கொஞ்சம் இடவசதி குறைவான கீ போர்ட், திரை மற்றும் திறன் குறைந்த சிபியு, ராம் மெமரி, அலுவலகப் பயன்பாட்டிற்கு இதனைத் தேர்ந்தெடுக்கத் தடையாய் உள்ளன. இத்தகைய வேலைகளில் ஈடுபடுவோருக்கு ஸ்மார்ட் போன் ஒன்று நிச்சயம் தேவையாய் இருக்கும். 

ஆனால் அது லேப்டாப் கம்ப்யூட்டரில் கிடைக்கும் வேகத்தினைத் தருவதில் இன்னும் பின்தங்கியே உள்ளது. எனவே இந்த பணியில் ஈடுபடுபவர்கள், நல்ல திறன் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றையும், ஸ்மார்ட் போன் ஒன்றையும் தங்களுக்கென வாங்கிக் கொள்ளலாம்.

2. வீடுகளிலும் மாணவர்களிடமும்: பெரிய அளவில் நிறுவன வேலைகள் இல்லாதவரா? மாணவரா? இந்த இருவகையினரும் வெளியே அலைந்து திரிந்து தங்கள் நாளைக் கழிப்பவர் என்றாலும், ஒரு நிறுவன ஊழியர் அளவிற்குக் கம்ப்யூட்டர் தேவை இருக்காது. குறிப்பாக மாணவர்களுக்கு நோட்ஸ் எடுக்க, இணையம் பார்க்க, பிரசன்டேஷன் காட்சிகள் அமைக்க, கட்டுரைகளை எழுத எனப் பல கல்வி சார்ந்த வேலைகளைத் தாங்கள் செல்லும் இடங்களிலெல்லாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

இவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் சற்று கனமான தாகவும், புத்தகங்கள் மற்றும் பைகளுடன் தூக்கிச் செல்லச் சற்று சிரமமானதாகவும் இருக்கும். எனவே இவர்கள் நெட்புக் கம்ப்யூட்டரைத் தேர்ந்தெடுக்கலாம். 

இதன் திரை, கீ போர்டு இவர்களின் வேலையை அவ்வளவாகப் பாதிக்காது. ஏனென்றால் இவர்களின் பணி சற்றுப் பொறுமையாக மேற்கொள்ளும் வகையில் அமையும். இவர்களுக்கு ஸ்மார்ட் போன் நல்ல துணைவனாக இருந்தாலும், கற்பனை மற்றும் உழைப்பின் அடிப்படையில் அமைக்கப்படும் திட்டங்களுக்கு அது உதவாது. 

3. இணைய உலா வர: இணையத்தில் எதனையேனும் திடீர் திடீரெனப் பார்க்க வேண்டியதிருக்கும். யாரேனும் நண்பர் போன் செய்து, உனக்கு ஒரு பைல் அனுப்பி உள்ளேன். பார்த்து உடன் பதில் அனுப்பு என்பார். அல்லது இந்த இணைய தளத்தில் புதிதாக ஒன்றின் விலை வந்துள்ளது. வாங்கி மாற்றிவிடலாமா? என்பார். 

அப்போது நீங்கள் வீட்டில் இருந்து வெளியே இருக்கலாம். இணையத் தொடர்பிற்கென லேப் டாப் கம்ப்யூட்டரைத் தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா? இணைய உலா மேற்கொள்ள, நெட்புக் கம்ப்யூட்டர்கள் லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் கொண்டதாக அமையும். ஆனால் ஸ்மார்ட் போன்கள், நெட்புக் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் கூடுதலாகப் பயன்களைத் தரும். இவை எப்போதும் இணையத் தொடர்பினை மேற்கொள்ளத் தயாராய் இருக்கும். எனவே இதற்கு ஸ்மார்ட் போன் தான் சிறந்தது.

6.சமுதாயத் தளங்கள் தொடர்பு: சோஷியல் நெட்வொர்க் என்னும் இணையத் தொடர்புகளை மேற்கொள்வது, தற்போது பெரும்பாலோரால் மேற்கொள்ளப்படும் தொடர் நிகழ்வாக மாறிவிட்டது. தங்கள் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் எப்போதும் தொடர்பில் இருந்து கொண்டு, நிகழ்வுகளை அவ்வப்போது மேம்படுத்த, இந்த சமுதாய தளங்கள் உதவுகின்றன. 

இந்த வகையில் ட்விட்டர், பேஸ்புக், லிங்க்டு இன் மற்றும் போர் ஸ்குயர் போன்ற தளங்கள் இயங்குகின்றன. இதற்கு மிகவும் உதவுவதும் பயன்படுவதும் ஸ்மார்ட் போன்களாகும். லேப்டாப் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்கள் விரைவாக விரித்து இயக்குவதில் இதில் பின்வாங்குகின்றன. ஆனால் போட்டோக்களை அனுப்ப, அவற்றை எடிட் செய்திட, ரியல் டைம் சேட் செய்திட, ஸ்மார்ட் போன்களைக் காட்டிலும் நெட்புக் கம்ப்யூட்டர்களே கை கொடுக்கின்றன. 

எனவே இந்த தேவைகளுக்கும் நெட்புக் கம்ப்யூட்டர்களே நமக்குச் சிறந்த சாதனமாக உள்ளன.

மேலே கூறப்பட்ட தேவைகள் அனைத்துமே பலருக்கு இருக்கலாம். எந்த வகை தேவைகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கணக்கிட்டு அதற்கான சாதனத்தை வாங்குவதே சிறந்தது.


கம்ப்யூட்டர் சாவியாக யு.எஸ்.பி. ஸ்டிக்

நீங்கள் பணியாற்றும் சூழ்நிலை மிகவும் கும்பலான இடமாக இருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் வேறு யாரேனும் உட்புகுந்து இயக்கிவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா? கம்ப்யூட்டரை எப்படி பூட்டிச் செல்வது? லாக் ஆப் செய்திடாமல் எப்படி இதனைப் பாதுகாப்பாக வைப்பது? என்ற கேள்விகளுக்குப் பதிலாக பிரிடேட்டர் (Predator)என்னும் புரோகிராம் தரப்பட்டுள்ளது. 

இதனை ஒரு யு.எஸ்.பி. ஸ்டிக்கில் பதிந்து வைத்து, அந்த ஸ்டிக்கை, உங்கள் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம்.http://www.montpellierinformatique.com/predator/en/index.php?n=Main. DownloadFree என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பிரிடேட்டர் புரோகிராமின் ஸிப் பைலை டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். 

பின் இதனை விரித்து, உங்கள் சி ட்ரைவில் இதனைப் பதிந்து கொள்ளுங்கள். யு.எஸ்.பி. ட்ரைவில் இதனைப் பதிய வேண்டாம். இப்போது பிரிடேட்டர் பைலை இயக்குங்கள். உங்கள் யு.எஸ்.பி.போர்ட்டில், யு.எஸ்.பி. ஸ்டிக்கினை இன்ஸெர்ட் செய்திடும்படி உங்களைக் கம்ப்யூட்டர் கேட்டுக் கொள்ளும். பின் இதற்கான பாஸ்வேர்ட் ஒன்றை நீங்கள் அமைக்க வேண்டும். அவ்வளவுதான்.

இனி விண்டோஸ் ஸ்டார்ட் செய்கையில், இந்த யு.எஸ்.பி. ஸ்டிக்கை அதன் போர்ட்டில் செருகி வைக்கவும். விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும்போது பிரிடேட்டரை இயக்கவும். பின், எப்போதெல்லாம், கம்ப்யூட்டரை லாக் செய்து செல்ல வேண்டும் என விரும்புகிறீர்களோ, அப்போது, இந்த யு.எஸ்.பி.ஸ்டிக்கினை எடுத்துச் செல்லலாம். 

எடுத்தவுடன் கீ போர்ட் மற்றும் மவுஸ் லாக் செய்யப்பட்டு, திரை கருப்பாக மாறிவிடும். மீண்டும் இதனை அதன் இடத்தில் செருகிப் பயன்படுத்தினால் மட்டுமே, கம்ப்யூட்டர் இயங்கும்.

கம்ப்யூட்டரை லாக் ஆப் செய்து செல்லலாமே என நாம் நினைக்கலாம். விண்டோஸ் கீ + எல் கீயை அழுத்தினால், லாக் செய்திடலாமே என்ற எண்ணம் ஓடலாம். இதனையும் பயன்படுத்தலாம். இங்கு நீங்கள் மீண்டும் இயக்க பாஸ்வேர்டினை டைப் செய்திட வேண்டும். 

இந்த பாஸ்வேர்ட் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டால், தொல்லைதான். ஆனால் பிரிடேட்டர் ஒரு சாவி போலவே செயல்படுகிறது. யு.எஸ்.பி. ஸ்டிக்கினை கம்ப்யூட்டர் வீட்டின் சாவி போலப் பயன்படுத்தலாம்..


வருகிறது ஐ போன் 4

அதோ இதோ என்று சொல்லப்பட்ட ஐ போன் 4 அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனமே ஐபோனையும் அது குறித்தத் தகவல்களையும் வெளியிட்டுள்ளது. 

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரிட்டனில் இந்த போன் ஜூன் 24 அன்று விற்பனைக்குக் கிடைக்கும். அடுத்து ஜூலை மாதத்தில் மேலும் 18 நாடுகளில் வெளியிடப்படும். மேல் நாடுகளில், வெளியான பின், இந்தியாவிலும் விற்பனைக்கு இது செப்டம்பர் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த போனின் சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்.

1.வடிவம்

புதியதாக, முழு சதுரமாக, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இதன் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. வால்யூம் கீகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. முந்தைய போனைக் காட்டிலும் 28% ஸ்லிம்மாக உள்ளது. 9.33 மிமீ தடிமன் உள்ளது. இப்போது உள்ள மொபைல் போன்களில், இதுவே மிகக் குறைந்த தடிமன் உடையாதாக இருக்கிறது. 

போனைச் சுற்றிச் செல்லும் ஸ்டீல் வளையம், ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதுவித உலோகமாகும். இது போனுக்கான ஆன்டென்னாவாகவும் இயங்குகிறது. இரண்டாவதாக ஒரு மைக் இணைக்கப்பட்டு, ஒலியின் தேவைற்ற இரைச்சலை நீக்குகிறது. இதன் டூயல் ஸ்பீக்கர்கள் கீழாக அமைக்கப்பட்டுள்ளன. எடை 137 கிராம். 

2. மைக்ரோசிம்: 

இந்த போனில் வழக்கமான சிம் கார்டுக்குப் பதிலாக மைக்ரோ சிம்மினைப் பயன்படுத்தலாம். 

3.டிஸ்பிளே: 

ஐபோன் 4–ன் திரை அதே 3.5 அங்குல அகலம் கொண்டுள்ளது. ரெசல்யூசன் 640 x 960 ஆக 320 x 480  லிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. மொபைல் போன் ஒன்றின் திரையில் அதிக பட்சம் காணப்படும் ரெசல்யூசன் இதுவாகத்தான் இருக்கும். எல்.இ.டி. பேக் லைட்டுடன் கூடிய எல்.சி.டி. திரையாக இது உள்ளது. இந்த திரையை‘Retina Display’  என அழைக்கின்றனர். 

இந்த தொழில் நுட்பம் ஒரு சதுர அங்குலத்தில் 326 பிக்ஸெல்களைத் தருகிறது. இந்த திரை மேற்புறம் அலுமினோ சிலிகேட் கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், இதில் ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படாது. இதை ரீசைக்கிள் செய்திட முடியும் என்பதால், அடுத்து ஐபோன் 5 வரும்போது எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

4. கேமரா: 

இதன் கேமரா நேரடியாக 8 எம்.பி.க்கு உயரும் என்று எதிர்பார்த்த வேளையில், 5 மெகா பிக்ஸெல் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு எல்.இ.டி. பிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. இதனை வீடீயோ ரெகார்டிங் போது பயன்படுத்தலாம். வீடியோ ரெகார்டிங் நொடிக்கு 30 பிரேம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

டச் போகஸ், 5 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் மற்றும் ஜியோ டேக்கிங் ஆகியவை கிடைக்கின்றன. போன் முன் பக்கம் உள்ள இன்னொரு கேமரா, வீடியோ சேட்டிங் செய்திட மிகவும் உதவுகிறது. பேஸ் டைம் என்னும் வசதி மூலம் கேமராக்களுக்கிடையே மாறிக் கொள்ளலாம்.

5.சிப்: 

ஆப்பிள் ஏ4 சிப் ஒரு கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. இதே சிப் ஐ பேடிலும் பயன்படுத்தப்படுகிறது. மல்ட்டி டாஸ்க் மற்றும் கேம்ஸ் இயக்கங்கள் இதன் மூலம் மிக எளிதாகக் கிடைக்கின்றன.  HSDPA/HSUPA, WiFi 802.11 b/g/n  என நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்குகிறது. 

6. கூடுதல் உதிரி வசதிகள்: 

பார்வை வசதி குறைந்தவர்களுக்கென ஸ்கிரீன் ரீடிங் என்னும் புதிய நுட்பம் தரப்பட்டுள்ளது. இது போனில் ஏற்படுத்தப்படும் அசைவுகள் மற்றும் தொடுதல் மூலம் இயங்குகிறது. கீ போர்டில் தொடப்படும் எழுத்துக்களை வாய்ஸ் மூலம் தருகிறது. இதன் உள்ளே உள்ள 21 மொழிகளில் இதனை இயக்கலாம். வீடியோ சேட் வசதி இதில் புகுத்தப்பட்டுள்ளது. 

இதற்கென வீடியோ சேட் எனப்படும் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனை 30 புளுடூத் சாதனங்களுடன் ஒரே நேரத்தில் இணைத்து இயக்கலாம். இதில் தரப்பட்டுள்ள ஸூம் செயல்பாடு மூலம், திரையை ஐந்து பங்கு பெரிதாக்கிக் காணலாம். 

தான் அடுத்து வடிவமமைக்கும் போன்களில் மின்திறன் அதிகப்படுத்தப்படும் என ஆப்பிள் முன்பு அறிவித்திருந்தது. இதில் மின்திறன் 40% அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 3ஜி பிரவுசிங் தொடர்ந்து ஆறு மணி நேரம், வீடியோ 10 மணி நேரம், மியூசிக் 40 மணி நேரம் பயன்படுத்தலாம். ஒரு முறை ஏற்றப்பட்ட சார்ஜ் 300 மணி நேரம் தங்குகிறது.

இதன் விலை 16ஜிபிக்கு 199 டாலர்; 32 ஜிபிக்கு 299 டாலர். உடனே இதனை இந்தியப் பணத்தில் கணக்கிட வேண்டாம். ஏனென்றால் இந்த விலை, போனைப் பயன்படுத்தும் திட்டங்களுடன் இணைக்கப்பட்டு கணக்கிடப்பட வேண்டும். முந்தைய ஐ போனைப் போலவே, இதுவும் சில மாதங்களில், அதிகார பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும். 

அப்போது இந்திய விலை தெரிவிக்கப்படும். வெளிநாடுகளில் வோடபோன் நிறுவனம் இதனை விற்பனை செய்வதால், இந்தியாவிலும் வோடபோன், இதனை விற்பனை செய்திடும் உரிமையைப் பெறலாம்.


பவர் பாய்ண்ட்டில் கிராபிக்ஸ்

பவர் பாய்ண்ட் பிரசன்டேஷனில் கிராபிக்ஸ் ஏதேனும் பயன்படுத்தினால் அதற்கான ஆப்ஜெக்டை ச் சரியான இடத்தில் வைத்திட வேண்டும். இல்லை என்றால் உங்களின் திறமை அவ்வளவுதானா? என்று மற்றவரை எண்ண வைத்துவிடும். அதற்கான சில வழிமுறைகள் இங்கே தரப்படுகின்றன. 

1.கிரிட் – ஐ எப்போதும் பயன்படுத்துங்கள்: 

கிரிட் என்பது நெடுவிலும் படுக்கையாகவும் நம் கண்களுக்குத் தெரியாமல் இருக்கும் கோடுகள் ஆகும். இந்த கோடுகளுக்கு அருகே எந்த பொருளை/படத்தை வைத்தாலும் கோடுகள் அருகே பொருட்கள் இழுக்கப்படும். 

ஏதோ அந்தக் கோடுகளுக்கு என்று தனி ஈர்ப்பு விசை இருப்பது போல செயல்படும். இதனால் தான் பிரசன்டேஷன் சாப்ட்வேர் தொகுப்பில் ஒரு ஆப்ஜெக்டை இழுக்கும் போது அது நம் வசத்திற்கு வராமல் திரையின் குறுக்கே கண்ட இடத்திற்குச் செல்லும். இந்நிலையில் சீர் 
செய்திட என்ன செய்யலாம் என்று பார்ப்போம். 

முதலில் கிரிட் கோடுகளைக் காட்டவும் மறைக்கவும் உள்ள பட்டனைத் (Show/Hide Grid)  தட்டி கோடுகளைக் கொண்டு வரவும். இது ஸ்டாண்டர்ட் (Standard)  டூல் பாரில் உள்ளது. அல்லது ஷிப்ட் அழுத்தி எப் 9  (Shift + F9) பட்டனைத் தட்டவும். 

தற்காலிகமாக கிரிட்–ஐப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் ஆல்ட் பட்டனை அழுத்திக் கொள்ளலாம். இதனால் ஆப்ஜெக்ட்களை நீங்கள் எளிதாக இழுக்கலாமேயொழிய அவை சரியான கோடுகளில் அமரும் என்று எதிர்பார்க்க முடியாது. 

2. கைட் லைன்களின் (Guidelines)  உதவி: 

ஆப்ஜெக்ட் ஒன்று நெட்டு வரிசையிலோ அல்லது படுக்கைவசத்திலோ அமர வைக்க வேண்டும் என்றால் ஸ்கிரீனில் கோடுகளை ஏற்படுத்தி பயன்படுத்துங்கள். இதற்கு Alt + F9 கீகளை அழுத்தவும். இப்போது நெட்டாகவும் படுக்கையாகவும் கோடுகள் தென்படும். உங்களுடைய ஆப்ஜெக்டுகள் இதனுடன் இணைந்து கொள்ளும். 

இந்த கோடுகளின் உதவியுடன் சரியான இடத்திற்கு ஆப்ஜெக்டுகளை இழுத்து வைத்திடுங்கள். பின் நீங்கள் எப்போது Alt + F9 அழுத்தினாலும் கோடுகள் மறைந்துவிடும். இந்த கைட் லைன்கள் இரு பக்கமும் ஒன்று தான் கிடைக்கும். இது உங்களுக்குப் போதவில்லையா? 

கண்ட்ரோல் (Ctrl) அழுத்தி எந்த கோட்டை இழுத்தாலும் அது இரண்டாக மாறும். ஏதேனும் கைட் லைன் தேவை இல்லை என்றால் அதனை எப்படி நீக்குவது? மவுஸின் கர்சரை அதன் மீது வைத்து அழுத்தி அப்படியே இழுத்து பிரேமிற்கு வெளியே விட்டுவிடவும். 

நீங்கள் கைட் லைனை இழுக்கையில் ஒன்றை கவனிக்கலாம். மவுஸ் பாய்ண்டரில் சிறிய எண்கள் இணைக்கப்பட்டு தெரியும். இது எதைக் குறிக்கிறது தெரியுமா? நீங்கள் இடம் அமைக்கப் போராடும் ஆப்ஜெக்ட் ஸ்லைடின் மையப் பகுதியிலிருந்து எத்தனை அங்குலம் தள்ளி இருக்கிறது என்பதை இந்த எண் குறிக்கிறது. 

இந்த எண்கள் பூஜ்யத்திலிருந்து தொடங்கினால் நீங்கள் எவ்வளவு அங்குலம் இழுக்கிறீர்கள் என்பதைத் துல்லிதமாக அறிய வேண்டும் என்றால் இழுக்கும்போது ஷிப்ட் (Shift)  கீயை அழுத்தவும். 

எடுத்துக்காட்டாக ஆப்ஜெக்ட் ஒன்றின் அடிப்பாகத்தில் அரை அங்குலத்திற்குக் கீழாக கைட் லைன் ஒன்றை அமைக்க நீங்கள் விரும்பினால் படுக்கை வசக் கோடு ஒன்றை ஷிப்ட் கீயை அழுத்தியவாறே கீழாக இழுக்கவும். மவுஸ் பாயிண்ட்டரில் உள்ள எண் 0.50 ஆக இருக்கையில் விட்டுவிட்டால் அரை அங்குலம் கீழாகக் கோடு அமைக்கப்படும்.

3. கிரிட் மற்றும் கைட்லைன் செட் செய்யும் வழி: 

Ctrl + G  கீகளை அழுத்தினால் கிடைக்கும் Grid and Guides  திரையில் இவற்றை எப்போதும் கிடைக்கும் படியும், கிடைக்காதபடியும் அமைக்கலாம். அதாவது நீங்கள் ஆல்ட் கீ அழுத்திக் கிடைக்கும் விளைவினை இந்த கீகளை அழுத்தி மேற்கொள்ளலாம். இந்த டயலாக் பாக்ஸில் இந்த கோடுகள் எந்த அளவில் அமைக்கப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள் வரையறை செய்திடலாம். 

4. துல்லிதமான அளவில் அமைத்திட: 

ஆப்ஜெக்ட் ஒன்றை, மிகத் துல்லிதமான அளவில், அதாவது அங்குலம் ஒன்றின் பத்தில் ஒரு பங்கு அல்லது நூறில் ஒரு பங்கு அளவில் கூட, நீங்கள் அமைத்திடலாம். எந்த பக்கம் செல்ல வேண்டுமோ அதற்கான ஆரோ கீயினை கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தினால் ஆப்ஜெக்ட் அங்குலத்தில் பத்தில் ஒரு பங்காக அமைக்கும் வகையில் மெல்ல மெல்ல நகரும். ஆப்ஜெக்டை ஓர் அங்குலத்தில் 100ல் ஒரு பங்கு நகர்த்திட கண்ட்ரோல் கீ (Ctrl)  அழுத்தி சம்பந்தப்பட்ட ஆரோ கீயினை அழுத்தவும்.


5. ஆப்ஜெக்டை இரு திசையில் வேகமாக நகர்த்த: 

ஆப்ஜெக்டை படுக்கை வசமாகவும் அல்லது நெட்டு வாக்கிலும் வேகமாக இழுக்க ஷிப்ட் (குடடிஞூt) கீயை அழுத்தியவாறே ஆப்ஜெக்டை இழுக்கவும். ஆனால் ஷிப்ட் கீயை அழுத்தியவாறே நெட்டு வாக்கில் ஆப்ஜெக்டை இழுக்கும் போது அதனை நெட்டுவாக்கில் மட்டுமே இழுக்க முடியும். படுக்கை வாக்கில் இழுக்க முடியாது. இதே போல மாறுபக்கத்திலும் செய்ய முடியாது. 

போனஸ் டிப்ஸ்: 

ஆப்ஜெக்ட் ஒன்றை இழுக்கையில் அதனை இன்னொரு காப்பியும் செய்திட வேண்டும் என்றால் இtணூடூ கீயை அழுத்தியவாறே இழுக்கவும். இப்போது ஆப்ஜெக்டின் இன்னொரு நகல் கிடைக்கும். இந்த நகல் படுக்கை வாக்கிலும் நெட்டு வாக்கிலும் சரியாக அமைக்கப்பட வேண்டுமென்றால் Ctrl  மற்றும் Shiftகீகளைச் சேர்த்து அழுத்தி இழுக்கவும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes