எஸ்.எம்.எஸ்., கட்டணங்கள் குறைப்பு: ரிலையன்ஸ்

எஸ்.எம்.எஸ்., கட்டணம் குறைக்கப் படுவதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் படி, ஒரு எஸ்.எம்.எஸ்.,க்கு ஒரு பைசா மட்டுமே இனி வசூலிக்கப் படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 


ஒரு நாள் முழுக்க எஸ்.எம்.எஸ்., அனுப்பினாலும் ஒரு ரூபாய் செலுத்தினால் போதுமானது. ஒரு மாதம் முழுக்க எஸ்.எம்.எஸ்., அனுப்ப 11 ரூபாய் மட்டுமே வசூலிக்கப் படுகிறது. 


ரிலையன்ஸ் அறிவிப்பினை தொடர்ந்து பார்தி ஏர்டெல், வோடபோன் மற்றும் பி.எஸ்.என்.‌எல்., உள்ளிட்ட நிறுவனங்களும் எஸ்.எம்.எஸ்., கட்டண குறைப்பில் ஈடுபட உள்ளன. 


ஒரு எஸ்.எம்.எஸ்., அனுப்ப ஒரு கே.பி.,க்கும் குறைந்த அலைவரிசை இருந்தாலே போதும். இதற்கான கட்டணம் ஒரு பைசாவுக்கு குறைவாகத் தான் இருக்கும் என்பது கூடுதல் விபரம்


சோனியின் புதிய டிவிடி ரைட்டர்

டிவிடி ரைட்டர் இன்னும் மக்களிடையே நம்பிக்கை மிக்க சாதனமாக வலம் வருகிறது. புளு ரே ரைட்டர், பிளாஷ் டிரைவ் என எத்தனை வந்தாலும் டிவிடி ரைட்டர் இன்னும் தேவையாய் தான் உள்ளது.

எனவே தான் சோனி நிறுவனம் கூட இன்னும் புதிது புதிதாய் டிவிடி ரைட்டர்களை வெளியிட்டு வருகிறது. அண்மையில்AD7240S என்ற பெயரில் புதிய டிவிடி ரைட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. முதல் முதலாக 24 எக்ஸ் (24x DVDRW) வேகத்தில் டிவிடியில் எழுதும் ரைட்டர் இதுதான் என சோனி அறிவித்துள்ளது.

இதில் ஆட்டோ ஸ்ட்ரேட்டஜி தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு டிவிடியில் தகவல்களை எழுதுகையில் இந்த டிரைவ் மீடியாவில் உள்ள தகவல்களைச் சற்று முன் கூட்டியே படித்து வைக்கிறது.

இதனால் எழுதும் ஹெட் அதற்கேற்ற வகையில் முழுவதும் பயன்படுத்தப்படும் வகையில் அட்ஜஸ்ட் செய்யப்படுகிறது. எனவே இதுதான் மிக வேகமாகவும் புதிய முறையிலும் செயல்படும் டிவிடி ரைட்டர் என சோனி நிர்வாகி அறிவித்துள்ளார்.

இதில் சீரியல் ATA இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இது டிவிடிக்களை 24 எக்ஸ் வேகத்திலும் சிடிக்களை 48 எக்ஸ் வேகத்திலும் எழுதுகிறது. டபுள் லேயர் டிவிடி எனில் 12 எக்ஸ் வேகத்தில் எழுதுகிறது.

இந்தியாவில் இந்த டிவிடி ரைட்டரை ராஷி பெரிபரல்ஸ் விற்பனை செய்யும் உரிமையைப் பெற்றுள்ளது. இதனை அனைத்து கம்ப்யூட்டர் மற்றும் டிஜிட்டல் சாதன விற்பனைக் கடைகளில் வாங்கலாம். விலை ரூ. 1,500. ஒராண்டு வாரண்டி தரப்படுகிறது.


மொபைல் போன் வைரஸ்

கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் அளவிற்கு மொபைல் போன் வைரஸ் தாக்கமும் பரவலும் இல்லை என்றாலும் அவை குறித்து அறிந்து கொள்வது நல்லது. முன் கூட்டியே நம் மொபைல் போன்களைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். செல் போன் வைரஸ்கள் தன்மை மற்றும் அவை எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இங்கு பார்க்கலாம்.


மொபைல் வைரஸ் – சில அடிப்படைக் கூறுகளும் பரவும் விதமும்:

மொபைல் போனில் பரவும் வைரஸ் புரோகிராமும் கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராம் போலவே தேவையற்ற ஒரு எக்ஸிகியூட்டபிள் பைல் ஆக வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. ஒரு சாதனத்தைக் கைப்பற்றிப் பின் மற்ற சாதனங்களுக்கு அதன் காப்பியை அனுப்பும் வழியையே இந்த வைரஸும் பின்பற்றுகிறது.

கம்ப்யூட்டர் வைரஸ் இமெயில் அட்டாச்மெண்ட் மற்றும் இன்டர்நெட் டவுண்லோட் புரோகிராம் வழியாகப் பரவுகின்றன. மொபைல் போன் வைரஸும் இன்டர்நெட் டவுண்லோட் பைலுடன் வருகிறது; எம்.எம்.எஸ். மெசேஜ் இணைந்து பரவுகிறது; புளுடூத் வழி பைல்களை மாற்றுகையில் உடன் செல்கிறது.

பெரும்பாலும் கம்ப்யூட்டருடன் பைல்களை பரிமாறிக் கொள்கையில் மொபைல் போன்களுக்கு வைரஸ்கள் பரவி வந்தன. இப்போது மொபைல் போன் களுக்கிடையேயும் பைல் பரிமாற்றத்தின் போது பரவி வருகின்றன.

இந்த வகை பரவல் பெரும்பாலும் சிம்பியன் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் மொபைல் போன்களுக்கிடையே நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்களுக்கென தயாரித்து பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள போன்களில் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

வைரஸ் பாதிக்கப்பட்ட மொபைல் போன்களில், வைரஸ்கள் கேம்ஸ், செக்யூரிட்டி பேட்ச், கூடுதல் வசதி தரும் ஆட் ஆன் புரோகிராம், பாலியியல் படங்கள் போலக் காட்சி அளிக்கின்றன. சில வைரஸ்கள் போனுக்கு வந்திருக்கும் மெசேஜ் டெக்ஸ்ட்டின் தலைப்பு வரிகளைத் திருடி, அவற்றையே தங்கள் தலைப்பாகவும் வைத்துக் கொள்கின்றன.

இதனால் நாம் அவற்றைத் திறக்க ஆர்வம் காட்டுவோம். ஆனால் மெசேஜைத் திறப்பதனால் உடனே வைரஸ் நம் போனை முடங்கச் செய்துவிடும் வாய்ப்புகளும் நூறு சதவிகிதம் இல்லை. அந்த மெசேஜ் உடன் வந்திருக்கும் வேறு இணைப்பு பைலைத் திறந்தால் தான் வைரஸ் தன் வேலையைக் காட்டும்.

இது போன்ற பரவும் வழிகளில், போன் பயன்படுத்துபவர் தானாக ஒன்று அல்லது இரண்டு முறை மெசேஜ் இயக்க அழுத்த வேண்டியதிருக்கும். பொதுவாக போன் அழைப்புகளை ஏற்படுத்தவும் பெறவும் மட்டுமே பயன்படும் மொபைல்களில் அவ்வளவாக வைரஸ்கள் பரவுவதில்லை.


ஜிமெயில் பயனாளர்களுக்கான செய்தி

ஜிமெயில் தனது பயனாளர்களுக்காக ஒரு புதிய பாதுகாப்பு முறையை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் உங்கள் அலுவலகத்திலோ அல்லது வெளியில் ப்ரௌசிங் செண்டரிலோ ஜிமெயில் பார்த்துவிட்டு லாக்-அவுட் செய்யாமல் வந்துவிட்டால் உடனடியாக வேறு கணினி மூலமாக லாகின் செய்து அந்த கணினியில் உள்ள உங்கள் ஜிமெயில் இணைப்பை துண்டிக்க முடியும்.

அல்லது உங்கள் ஜிமெயிலை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்றும் அறிந்து கொள்ளலாம்.தமிழில் ஜிமெயிலை தமிழில் காண

உங்கள் ஜிமெயில் திரையில் மேல் பகுதியில் setting என்ற பகுதிக்கு சென்று ,அதில் Gmail display Language -ல் Tamil- தேர்வு செய்தால் உங்கள் ஜிமெயில் திரை இப்போது தமிழில் தெரியும்


புளு-ரே மற்றும் எச்.டி–டிவிடிக்களை தயாரிக்க

சிடி மற்றும் டிவிடிக்களைத் தயாரிக்க அதற்கான சாப்ட்வேர் அப்ளிகேஷன்களைத் தேடுகிறீர்களா? அதுவும் இலவசமாக! மேலும் கூடுதல் வசதிகளாக புளு ரே மற்றும் எச்.டி–டிவிடிக்களையும் தயாரிக்கும் வசதி கொண்டதாகத் தேடுகிறீர்களா!. சிடி பர்னர் எக்ஸ்பி என்ற புரோகிராம் இதைத்தான் செய்கிறது. உங்கள் சிஸ்டம் ஒத்துழைத்தா புளு ரே மற்றும் எச்.டி –டிவிடிக்களையும் தயாரித்து வழங்குகிறது.

இதன் லேட்டஸ்ட் பதிப்பு (4.2.4) ஆக கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து நேரடியாக உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தி டலாம். மற்ற சிடி பர்னர்களைக் காட்டிலும் இது நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் எந்தவிதமான விளம்பர புரோகிராம்கள் அல்லது கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களோ இணைந்து வருவதில்லை.

கம்ப்யூட்டரில் இதனை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன் தொடக்க திரையில் ஐந்து பட்டன்கள் உள்ளன. அவை Data Disc, Audi Disc, Burn ISO image, Copy Disc and Erase Disc. ஆகியனவற்றினைத் தேர்ந்தெடுக்கத் தரப்பட்டிருக்கும் இன்டர்பேஸ் ஆகும்.

இதில் எது உங்கள் வேலைக்குச் சரியான பட்டனோ அதனைக் கிளிக் செய்திடவும். எடுத்துக் காட்டாக நீங்கள் டேட்டா பைல்களைக் கொண்டு சிடி உருவாக்கப் போகிறீர்கள் என்றால் இதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடன் கிடைக்கும் விண்டோவில் மேலும் இரு பட்டன்கள் உள்ள ஆப்ஷன் திரை கிடைக்கும். பின் அதன் வழியே சென்றால் எளிதாக சிடி பர்ன் செய்யலாம்


தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

இந்த புரோகிராமினை விண் டோஸ் 2000 ல் தொடங்கி இன்றைய விஸ் டா ஆப்ப ரேட்டிங் சிஸ்டங்கள் வரையில் இயக்கலாம். இதனை இன்ஸ்டால் செய்திடும் முன் உங்கள் சிஸ்டத்தில் .net framework இருப்பதனை உறுதி செய்திடுங்கள். இது இல்லை என்றால் இந்த புரோகிராம் சரியாகச் செயல்படுவதில்லை.


3ஜி மொபைல் பேன்சி எண்கள் ஏலம்

பி.எஸ்.என்.எல்., சென்னை தெலைபேசி சமீபத்தில் வர்த்தக ரீதியாக வெளியிட்ட '3ஜி' மொபைல் இணைப்பின் 'பேன்சி எண்' விரும்புவோர் ஏலத்தில் எடுக்கலாம் என தெரிவித்துள்ளது. அதிகப்படியான தொகைக்கு ஏலம் கேட்பவருக்கு விரும்பிய எண் வழங்கப்படுகிறது.


பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.,தற்போது இரண்டாம் தலைமுறை '2ஜி' சேவையில் இருந்து முன்னேறி வீடியோ கால் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட 3ஜி சேவைக்கு மாறியுள்ளது.


இந்தியாவின் முக்கிய பல நகரங்களில் இந்த சேவை வர்த்தக ரீதியாக வெளிவந்துள்ளது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி சமீபத்தில் '3ஜி' மொபைல் சேவையை அறிமுகப்படுத்தியது.


இந்த சேவையை வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முன்பே, இச்சேவையை பெற விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று சென்னை தொலைபேசி அறிவித்திருந்தது.


தற்போது '2ஜி' சேவை வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், 3ஜி சேவைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு சிம்கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர,' 2ஜி' சேவையில் இருப்போரும் மொபைல் எண்ணை மாற்றாமல், கட்டணம் ஏதுமின்றி '3ஜி' சேவைக்கு மாறுவதற்கான வசதியையும் சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது.


சிம் கார்டை மாற்ற வேண்டியதில்லை என்றாலும், கூடுதல் திறனுடைய புதிய சிம்கார்டு 59 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது '3ஜி 'மொபைல் இணைப்பு எண்களில் 'பேன்சி' எண்களை பெறுவதற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.


புதிய '3ஜி' இணைப்புகள் அனைத்தும் '94455' என துவங்குமாறு அமைந்துள்ளது. இந்த எண்களை தொடர்ந்து வரும் அடுத்த 5 எண்கள் தொடர் எண்களாகவோ, ஒரே எண்களாகவோ அமையும் பட்சத்தில் அவை பேன்சி எண்களாக குறிக்கப்படுகின்றன.


சாதாரணமாக இந்த எண்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கென குறைந்த பட்ச தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி மூன்று எண்கள் ஒன்றாக இருப்பின் ஆயிரம் ரூபாயும், கடைசி நான்கு எண்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், கடைசி 5 எண்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.


தற்போது ஏலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொகை குறைந்த பட்ச இருப்பு தொகையாகவும், ஏலம் கேட்க விரும்புபவர்கள் இந்த தொகையை தொடர்ந்து 100ன் மடங்கில் ஏலத்தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது.


இந்தவகையில், சென்னையில் '3ஜி' மொபைல் எண்களில் 293 எண்கள் பேன்சி எண்களாக பிரிக்கப்பட்டு, அவற்றிற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு செய்தித்தாள்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கான கட்டணம் ரூ. 1.50 மட்டுமே. பதிவுக்கட்டணம் 50 ரூபாயாகவும், பிரீபெய்டு போனில் இருந்து விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்ச இருப்பு தொகை 300 வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏலத்தில் இருந்து விலக நினைப்பவர்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 1ம் தேதி வரையில் ஏலத்தில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


சமீபத்தில் தான் '2ஜி' சேவைக்கான மொபைல் எண்கள் ஏலம் முடிந்தது. அதில், 250 பேன்சி எண்கள் ஏலம் விடப்பட்டன.இந்த ஏலத்தில் தான் விரும்பிய மொபைல்போன் எண்ணிற்காக ஒருவர் அதிகபட்சமாக ' 55 ஆயிரம்' ரூபாய் செலுத்தி எடுத்துள்ளார்.


தொடர்ந்து தற்போது '3ஜி' சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அதில் 293 எண்கள் ஏலத்தில் விடப்படுகிறது. '2ஜி' மொபைல் எண்கள் ஏலத்தில் சென்னை தொலைபேசிக்கு 4.5 லட்சம் ரூபாய் வரையில் கிடைத்ததாக கூறப்படுகிறது. சென்னை தொலைபேசி தவிர தமிழ்நாடு தெலைதொடர்பு வட்டம் மற்றும் கேரளா, கர்நாடகாவிலும் தொலைபேசி எண்கள் ஏலம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.


இவ்வாறு எண்கள் ஏலம் விடப்படும் நிலையில், பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்திற்கும் அதிகளவில் வருமானம் கிடைக்கும். தற்போது நடந்துவரும் 3 ஜி மொபைல் எண்கள் ஏலத்தில் ஒரு எண் குறைந்த பட்சமாக 25 ஆயிரம் ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டால் கூட சென்னை தொலைபேசிக்கு 73 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.


மக்களிடமும் விழிப்புணர்ச்சி அதிகம் ஏற்பட்டு வரும் நிலையில் இது போன்ற ஏலம் நடத்தப்படுவது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அதிகளவில் வருமானத்தை ஈட்டித் தருவதாக அமைகின்றது.


இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' 2 ஜி மொபைல் எண்கள் ஏலத்தை விட இதில் அதிக தொகை நிறுவனத்திற்கு கிடைக்கும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் திடீரென விலகிக் கொண்டால் அவரிடம் இருந்து எந்த தொகையும் பிடிக்கப்படமாட்டாது.


அதே நேரத்தில் அவர் குறிப்பிட்ட தொகை அதிகபட்சமாக இருந்தால் 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஏலத்தில் அதிக தொகை எடுப்பவர்கள் திடீரென விலகும் நிலையில், அடுத்து இருப்பவர், விலகியவர் குறித்த தொகையை தந்தால் அவர் விரும்பிய எண் கிடைக்கும்,'' என்றார்.


பழிவாங்கும் ஹெட்லியின் 'இ - மெயில்'

இந்தியாவைப் பழிவாங்குவேன்' என, அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி டேவிட் ஹெட்லி தன் நண்பனுக்கு அனுப்பியுள்ள இ - மெயிலில் தெரிவித்துள்ளான். இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய, டேவிட் ஹெட்லி என்ற அமெரிக்கனை, அந்நாட்டு பெடரல் புலனாய்வு நிறுவனத்தினர் சமீபத்தில் கைது செய்தனர்.

அவனுடன் அவனது பள்ளிக்கால நண்பன் தகாவுர் உசேன் ரகுமான் என்பவனையும் கைது செய்தனர். இவன் பாகிஸ்தானில் பிறந்தவன். தற்போது கனடா குடியுரிமை பெற்றவன். இந்நிலையில், தனது பள்ளிப் பருவ தோழன் ஒருவனுக்கு கடந்த பிப்ரவரியில் டேவிட் ஹெட்லி இ - மெயில் ஒன்றை அனுப்பியுள்ளான். அதில் கூறியுள்ளதாவது:

பயங்கரவாதம் கோழைகளின் ஆயுதம் என, சிலர் சொல்கின்றனர். நான் சொல்கிறேன், "பயங்கரவாதத்தை ஒரு காட்டுமிராண்டித்தனமான அல்லது முறைகேடான அல்லது கொடூரமான செயல்' என, நீங்கள் அழைக்கலாம். பயங்கரவாதம் ஒரு போதும் கோழைத்தனமான செயலாகாது. முஸ்லிம் நாடுகளுக்கே உரித்தானது தைரியம். எந்த வகையிலும் இந்தியாவை பழிவாங்குவேன்.

இவ்வாறு ஹெட்லி கூறியுள்ளான். ஹெட்லியின் தந்தை பாகிஸ்தானைச் சேர்ந்தவர். அவரின் தாயார் அமெரிக்காவைச் சேர்ந்தவர். பிறந்தது முதல் மேலை நாட்டுக் கலாசாரம் மற்றும் பாகிஸ்தான் கலாசாரத்தை எதிர்கொண்டு வளர்ந்தவன்.

தாவூத் கிலானி என்ற மற்றொரு பெயரும் இவனுக்கு உண்டு. இறுதியாக பயங்கரவாதத்தினால், ஈர்க்கப்பட்டுள்ளான்.ஹெட்லிக்கு பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த மனைவி உண்டு. அவர் தன் குழந்தைகளுடன் சிகாகோவில் வசிக்கிறார். அதேநேரத்தில், ஹெட்லிக்கு அமெரிக்க பெண் தோழி ஒருவரும் உண்டு. அவர் நியூயார்க்கில் மேக் அப் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிகிறார்.புதிய சட்டம் :

இதனிடையே, அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி தகாவுர் உசேன் ராணா, வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என, இந்தியாவில் விளம்பரம் கொடுத்து, பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த விவரம் வெளியானதால், வெளிநாட்டு வேலை தொடர்பான விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து, இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுபோன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், வெளிநாட்டு இந்தியர் விவகார அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக புதிய சட்டம் ஒன்றும் கொண்டு வரப்படலாம் என, வெளிநாட்டு இந்தியர் விவகார அமைச்சர் வயலார் ரவி கூறியுள்ளார்


பைல்களை அழிக்க முடியவில்லையா!

ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். 

அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.

சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம். 

எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.

முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.

இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.

டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும்


கூகுள் பிரைவசி

நாம் கூகுள் தரும் எந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்கினாலும், நம்மைப் பற்றிய அனைத்து தகவல்களையும் கூகுள் வைத்துப் பயன்படுத்தத் தொடங்கிவிடும் என்று நாம் அறிவோம். 

ஜிமெயில், யு–ட்யூப், கூகுள் செக் அவுட், கூகுள் டாக்ஸ், கூகுள் காலண்டர், ஐகூகுள், பிகாசா வெப் ஆல்பம்ஸ், கூகுள் டாக் என எத்தனையோ இணைய வசதிகளைக் கூகுள் நமக்குத் தருகிறது. 

அப்போது நம்மைப் பற்றிய தகவல்களையும் பெறுகிறது. அது மட்டுமின்றி நாம் இவற்றைப் பயன்படுத்தும்போது, அது பற்றிய புள்ளி விபரங்களையும் தன்னிடம் வைத்துக் கொள்கிறது. 

ஒரு சிலர் கூகுள் நம்மைப் பற்றிய அளவுக்கதிகமான தகவல்களைப் பெற்று வைத்துக் கொள்கிறது என்று கருதுகின்றனர். ஒரு சிலர் இது நம் தனி உரிமையைக்குள் தலையை விடும் செயல் என்றும் எண்ணுகின்றனர். 

இதனை எண்ணிப் பார்த்தோ என்னவோ, கூகுள் சென்ற மாதம் தன்னிடத்தில் தன் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை அவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் ஓர் ஏற்பாட்டினைச் செய்து தந்துள்ளது. 

தான் வைத்துள்ள தகவல்களை பயனாளர்கள் எடிட் செய்திடவும் வழி தருகிறது. இத்தகைய தகவல்கள் தங்கவைத்திடும் இடத்திற்கு கூகுள் பிரைவசி டேஷ்போர்டு எனப் பெயர் கொடுத்துள்ளது. 

இதில் நுழைந்து நாம் கூகுள் வைத்துக் கொள்ளக்கூடாத தகவல்களை எடிட் செய்திடலாம்.http://www.google.com/dashboard என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றவுடன் நம்முடைய கூகுள் இமெயில் முகவரி கொடுக்கப்பட்டு பாஸ்வேர்ட் கேட்கப்படுகிறது. பின் நம்மைப் பற்றிய தகவல்கள் கூகுளின் பல்வேறு சாதனங்கள் வாரியாகத் தரப்படுகின்றன. 

நம் மின்னஞ்சல் கடிதங்கள் எண்ணிக்கை, தொடர்பு கொள்ளும் முகவரிகள் எண்ணிக்கை, படங்கள், காலண்டர், வெப் ஹிஸ்டரி என அனைத்தும் பகுதி பகுதியாகத் தரப்படுகின்றன. ஆனால் அனைத்துமே ஒருவர் ஏற்கனவே தான் அறிந்து தந்த தகவல்களாகத்தான் இருக்கின்றன. 

இதில் என்ன நல்ல செய்தி என்றால், மற்ற இணைய சேவைத் தளங்கள் போல் அல்லாமல், கூகுள் இவற்றையும் எடிட் செய்திட நமக்கு உரிமை தருகிறது. எந்த தகவலையாவது கூகுள் கொண்டிருக்கக்கூடாது என நாம் எண்ணினால், அதனை நீக்கவும் இடம் உள்ளது.


எல்லா அப்ளிகேஷனுக்கும் அப்டேட்

விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது, மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும் பேட்ச் பைல்களைக் கொண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்வதுதான். 


அது மட்டுமின்றி இப்போது நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள் மற்றும் பிற அப்ளிகேஷன் புரோகிராம் களும் அவ்வப்போது பேட்ச் பைல் மூலம் அப்டேட் செய்திட வேண்டியுள்ளது. அப்படியானால் நாம் எத்தனை பைல்களுக்கான அப்டேட் பைல்களைக் கண்காணிக்க முடியும். 


எம்பி3, வீடியோ, தொலைபேசி, டிவி ட்யூனர், கேமரா மற்றும் மொபைல் இணைப்பிற்கான அப்ளிகேஷன் கள் என அனைத்தையும் நாம் கண்காணித்து அப்டேட் செய்வது எளிதா என்ன? சில வேளைகளில் இது போன்ற புரோகிராம்களுக்கு அப்டேட் இருப்பதாகச் சொல்லி, நம்மை ஒரு குறிப்பிட்ட தளத்திற்கு அழைத்துச் சென்று வைரஸ்களை நம் கம்ப்யூட்டருக்குள் தள்ளிவிடும் போலி புரோகிராம்களும் நிறைய உண்டு. 


இதற்கெல்லாம் விடிவாக நமக்கு ஒரு புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர்Secunia PSI. (PSI Personal Software Inspector)  இதனை என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். 


இந்த புரோகிராம் நம் கம்ப்யூட்டரில் உள்ள பழைய புரோகிராம்களுக்கு அவற்றின் நிறுவனங்கள் அப்டேட் தந்தாலும் தரவிட்டாலும், செகுனியா அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. ஸ்கேன் செய்த பின் பாதுகாப்பற்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் என ஒரு பட்டியலை நமக்கு அளிக்கிறது. 


எந்த புரோகிராம்களுக்கெல்லாம் அப்டேட்டட் பைல்கள் உள்ளனவோ அவற்றின் லிங்க்குகளைப் பட்டியலிட்டு தருகிறது. இந்த லிங்க்குகளில் கிளிக் செய்து நம் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களை அப்டேட் செய்து கொள்ளலாம். இவற்றுடன் எந்த புரோகிராம்களுக்கு அப்டேட் பைல்களை அவற்றைத் தயாரித்து அளித்த நிறுவனங்கள் தரவில்லையோ அவற்றையும் சுட்டிக் காட்டுகிறது. 


செகுனியா சிஸ்டம் தொடங்கும்போதே இயங்கி, கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து புரோகிராம்களையும் ஸ்கேன் செய்கிறது. புதிய புரோகிராம்கள் இருந்தால் அவற்றிற்கான அப்டேட் பைல்களை ஆய்வு செய்கிறது. புரோகிராம்களில் ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் கோட் இருந்தால் அதனையும் சுட்டிக் காட்டுகிறது. 


செகுனியா பி.எஸ்.ஐ. கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் அல்லது பயர்வால் புரோகிராம்களுக்குப் பதிலியாகக் கொள்ள முடியாது. ஆனால் இவை மேற்கொள்ளாத ஒரு முக்கிய வேலையை மேற்கொண்டு நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கிறது. 


இந்த அருமையான பாதுகாப்பு புரோகிராமினைhttp://secunia.com/vulnerability_scanning/personal/  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். சென்ற ஆகஸ்ட் மாதம் இதன் அண்மைக் காலத்திய பதிப்பு வெளியானது. 


பதிப்பு எண் 1.5.0.1. இதன் பைல் சைஸ் 716,320 bytes ஆகும். 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு நாளில் சராசரியாக இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3,228.


பழசிராஜா - சினிமா விமர்சனம்


கேரளாவில் 1850-களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய பழசிராஜா மன்னன் பற்றிய வரலாற்று படம்.

இந்தியாவுக்குள் வியாபாரத்துக்கு வரும் வெள்ளையர்கள் குறுநில மன்னர்களை பிரித்து நாடு பிடிக்கத்துவங்குகின்றனர். கேரளாவிலும் மன்னர்களை அடிபணிய வைத்து வரி விதிக்கின்றனர். பழசிராஜா அடிபணிய மறுக்கிறார். 


அவன் கோட்டைக்குள் வெள்ளையர் படை நுழைகிறது. அரண்மனையை கைப்பற்றி கஜானாவை கொள்ளையடிக்கின்றனர்.

பழசிராஜா தளபதி எடச்சன குங்கனுடன் தலைமறைவாகிறார். மலைவாழ் மக்களை திரட்டி ஆங்கிலேயருடன் யுத்தம் செய்கின்றார். வெள்ளையர் படைக்கு பேரழிவு ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் பழசிராஜாவுடன் சமரச ஒப்பந்தம் போட்டு போரை நிறுத்துகின்றனர். 


பிறகு திடீரென ஒப்பந்தத்தை மீறுகின்றனர். ஆவேசமாகும் பழசிராஜா மீண்டும் போரை துவக்குகிறார். வெள்ளையர் படைகளுக்கு உதவ வேறுபகுதிகளில் இருந்து நவீன ஆயுதங்களுடன் வீரர்கள் குவிகிறார்கள். உள்ளூர் எட்டப்பர்களும் வெள்ளையர்களுக்கு துணை நிற்கின்றனர்.

இதனால் ஆங்கிலேயர் படைகளை எதிர்க்க முடியாமல் பழசிராஜா வீரர்கள் நிலைகுலைகின்றனர். பழசியின் தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். சரணடையும்படி பழசிராஜாவுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ்...

கையில் வாள், வீராவேச பேச்சு, அழுத்தமான நடையில் பழசிராஜா மன்னராக பளிச்சிடுகிறார் மம்முட்டி. மனைவியிடம் நேசம் காட்டுவது, வீர உரையாற்றி படைகளை திரட்டுவது, தளபதிகள் கொல்லப்பட்டதை கண்டு கண்கள் சிவப்பாகி கலங்குவது என உணர்வுகளை கொட்டுகிறார். கிளைமாக்சில் வீரமரணத்தை தழுவி நெஞ்சில் நிற்கிறார்.

எடச்சனகுங்கன் கேரக்டரில் சரத்குமார் வாழ்ந்துள்ளார். முறுக்கேறிய தேகம், லாவகமான வாள்வீச்சு, மன்னனை காக்க வெள்ளைய படையை எதிர்க்கும் வெறி என வரலாற்று தளபதியாய் இன்னொரு பரிணாமம் காட்டுகிறார்.

எட்டப்பவேலை செய்யும் சுமனை வாள் சண்டையில் கொன்று பழிதீர்ப்பது கைதட்டல். பதவி போட்டியில் பழசிராஜா படை பிரியும்போது பழசிராஜா வளர்ப்பு தந்தை என பிளாஷ்பேக் கதை சொல்லி தளபதி பதவியை தூக்கி எறிந்து மனம்பூரா வியாபிக்கிறார். 


இறுதியில் வெள்ளைய படைகள் சுற்றி வளைத்ததும் உங்களிடம் சிக்கி தூக்கில் தொங்கமாட்டேன் என கூறி தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்து மாவீரனாய் பிரதிபலிக்கிறார்.

மலைவாழ் பெண்ணாக வரும் பத்மபிரியா எதிரிகளுடன் துணிச்சலாக சண்டையிட்டு கேரக்டருக்கு வலுசேர்க்கிறார். பழசிராஜா மனைவியாக வரும் கனிகா சோகத்தை பிழிகிறார். மலைவாழ் மக்கள் தலைவனாக வந்து தூக்கியிடப்படும் மனோஜ் கே.விஜயன், மனதில் நிற்கிறார்.

இளையராஜா இசை, ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு பலம் சேர்க்கின்றன. ஆரம்ப காட்சிகளில் நாடகத்தனம். வரலாற்று கதையை ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான காட்சிகளுடன் கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர் ஹரிஹரன்


சாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள்

சில சாப்ட்வேர்களை நாம் கணிணியில் இன்ஸ்டால்
செய்வோம். பிறகு அது தேவையில்லையென்று
அதை அன்இன்ஸ்டால் செய்துவிடுவோம். 


அவ்வாறு அன்இன்ஸ்டால் செய்யும்போது முறையாக அதை
அன்இன்ஸ்டால் செய்யவேண்டும். அவ்வாறு
அன்இன்ஸ்டால் செய்ய முத்தான மூன்று வழிகளை
இப்போது பார்க்கலாம்.


முதல் வழிமுறை:-
தேவையில்லாத சாப்ட்வேரை முடிவு
செய்துகொள்ளுங்கள். அடுத்து Start கிளிக் செய்து
வரும் - Programs -ல் நமது சாப்ட்வேரை தேர்ந்தேடுங்கள்.
அந்த ப்ரோகிராமுடன்Uninstall என்கின்ற யுட்டிலிட்டி
கொடுத்திருப்பார்கள்.அதை பயன்படுத்தி சாப்ட்வேரை
நீக்கலாம்.
இரண்டாவது வழிமுறை:-


Start கிளிக் செய்யுங்கள்.Settings கிளிக் செய்யு்ங்கள்.
வரும் மெனுவில் Control Pannel கிளிக் செய்யுங்கள்.
வரும் விண்டோவில் Add/Remove Programs கிளிக்
செய்து வரும் விண்டோவில் வேண்டாத சாப்ட்வேரை
தேர்வு செய்து Uninstall கிளிக் செய்யவும்.


மூன்றாவது வழிமுறை:-


இதை கவனத்துடன் செய்யவேண்டும். இது மெயின்
பாக்ஸில் பீஸ்போடுவது போன்றது.சரியாக செய்ய
வில்லையென்றால் ஒன்றும் ப்ரச்சினை யில்லை.
பார்த்துக்கலாம். என்ன .மீண்டும் சர்வீஸ் இன்ஜினியரை
கூப்பிட வேண்டும். அவ்வளவு தான்.சரி இனி
ரெஜிஸ்டரில் இருந்து சாப்ட்வேரை நீக்குவது பற்றி
இப்போது பார்க்கலாம்.


முதலில் Start கிளிக் செய்து Runஓப்பன் செய்து
REGEDIT.EXE-ஐ தட்டச்சு செய்யவும். கீழே உள்ள
விண்டோவினை பாருங்கள்


வரும் விண்டோவில் உள்ள HKEY-LOCAL-MACHINE
கிளிக் செய்யவும்

அதில் உள்ள Software கிளிக் செய்யவும்.


பின் வரும் விண்டோவில் Microsoft கிளிக் செய்யுங்கள்.

அதில் உள்ள கூட்டல் குறியை நீங்கள் கிளிக்
செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

வரும் விண்டோவில் முறையே Curent Version
மற்றும் Uninstal தேர்ந்தேடுங்கள். கீழே உள்ள
விண்டோவினை பாருங்கள்

இதில் Uninstal கிளிக் செய்ய உங்கள் கணிணியில் உள்ள
சாப்ட்வேர் லிஸ்ட் அனைத்தும் வரும்.

இதில் தேவையான சாப்ட்வேரை தேர்வு செய்து அதை Delete செய்யுங்கள்.

இறுதியில் முறையே வெளியெறுங்கள். அவ்வளவுதான்Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes