பிரபல சாப்ட்வேர் நிறுவனமான சன் மைக்ரோ சிஸ்டம்ஸை கையகப்படுத்திவிட்டது ஆரக்கிள் நிறுவனம்.
இதற்காக அந்த நிறுவனம் 7.4 பில்லியன் டாலர்களை சன் மைக்ரோ சிஸ்டம்ஸுக்குத் தருகிறது. இதன்மூலம் ஆரக்கிள் நிறுவனம் சர்வதேச அளவில் சாப்ட்வேர் சூப்பர் பவராக உருவெடுத்துள்ளது.
ஏற்கெனவே பீப்பிள் சாப்ட், சைபல் சிஸ்டம்ஸ், ஜேடி எட்வர்ட்ஸ், ஐ பிளெக்ஸ் மற்றும் பிஇஏ சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்களை கையகப்படுத்தியிருந்தது ஆரக்கிள்.
சன் மைக்ரோசிஸ்டம்ஸை கையகப்படுத்தியதன் மூலம், சர்வதேச அளவில் முதல் நிலையில் உள்ள மைக்ரோசாப்டை ஓரங்கட்டும் அளவுக்குப் பெரிய நிறுவனமாக ஆரக்கிள் மாறியுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் மட்டும் ஆரக்கிள் நிறுவனத்தின் வருமானம் ரூ.5800 கோடி. இதே ஆண்டில் சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் ரூ.1674 கோடி சம்பாதித்தது. ஆரக்கிளுக்கு இந்தியாவில் 24000 பணியாளர்கள் உள்ளனர். சன்னுக்கு 1,200 உள்ளனர்.
'இந்த இணைப்பின் மூலம் மைக்ரோசாப்ட்டும் ஆரக்கிளும் உடனடி பணிப்போரில் இறங்குவார்கள் என எதிர்ப்பார்க்க முடியாதுதான். ஆனால் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. இனி சாப்ட்வேர் துறையில் ஆரக்கிளின் கை ஓங்கிவிடும் என்பதே அது' என்கிறார்கள் ஐடி நிபுணர்கள்.
சன் மைக்ரோசிஸ்டத்தை வாங்க ஐபிஎம் நிறுவனமும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
சன் மைக்ரோசிஸ்டம்ஸ் இப்போது ஆரக்கிள் வசம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment