ஆம், என்கிறது கூகிள். கூகிள் சமீபமாக எடுத்த கணக்கெடுப்பின் படி, 52.4 சதவீத இண்டர்நெட் எக்ஸ்பளோரர் உபயோகிப்பாளர்கள் ஆன்லைன் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்கிறது. ஏனெனில், இன்டர்நெட் எக்ஸ்பளோரர், ஃபயர்ஃபாக்ஸை போல அடிக்கடி அப்டேட் ஆவது இல்லை. ஆகையால், தினம் தினம் புதிதாய் உருவாகிடும் வைரஸ் / செக்குரிட்டி ஹோல்களிடமிருந்து, இந்த இன்டர்நெட் எக்ஸ்பளோரரால் அதனையும் கணினியையும் பாதுகாத்து கொள்ள முடிவதில்லை. மேலும் பல வைரஸ்/ட்ரோஜன் புரோகிராம்கள் இன்டர்நெட் எக்ஸ்பளோரரில் மட்டுமே செயல்படும் என்பது கூடுதல் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி. கீழே உள்ள படத்தைப் பாருங்கள், உங்களுக்கே புரியும்.
ஆதாரம் & மூலம்: கூகிள் வலைப்பூ.
இணைய உலாவியில், ஃபயர்ஃபாக்ஸ் முதலிடத்தையும், இண்டர்நெட் எக்ஸ்பளோரர் கடைசி இடத்தையும் பிடித்திருப்பதைப் படத்தில் பார்க்கலாம். ஆகையால், கூகிள் ஃபயர்ஃபாக்ஸைத் தத்தெடுத்து பரப்பி வருகிறது.
ஃபயர்ஃபாக்ஸின் நன்மைகள்:
1) Tabbed Browsing
பத்து இணைய தளம் திறக்கும் போது, தனித்தனி திரையாக திறக்காமல், ஒரே திறையில் பல Tab-களில் திறக்கலாம்.
2) Popup Blocking - சில இணையதளங்கள் திறந்திடும் போது அதனுடன் ஒன்றிரண்டு பாப் அப் திறை தேவையில்லாமல் திறந்து தொல்லை கொடுக்கும். ஃபயர்ஃபாக்ஸ் பாப் அப் திறைகளை தனிச்சையாக தடுத்திடும்.
3) மாதம் ஒரு முறை அப்டேட் ஆகிவிடும்.
4) Easy History cleaner - ப்ரொவ்ஸிங் ஹிஸ்டரியை அழிக்க தனி மென்பொருள் தேவை இல்லை. ஃபயர்ஃபாக்ஸ் மூடிடும் போது அனைத்து ஹிஸ்டரி, குக்கீ அழியும் படி செட்டிங்கை மாற்றி கொள்ளலாம்.
5) Integrated Search Engine - கூகிள், யாகூ, லைவ், ஆகிய தேடு பொறிகள் ஃபயர்ஃபாக்ஸிலேயே இருக்கும்.
6) Download Manager - கோப்புகள் தரவிறக்கம் ஆகி கொண்டிருக்கும் போது, இணையத் தொடர்பு துண்டித்துப் போனால் கூட இணைப்பு வந்தவுடன் தொடர்ந்து தரவிறக்கம் செய்யும்.
7) Add-On - இத்தனைக்கும் மேலாக, ஃபயர்ஃபாக்ஸை உங்களுக்கு ஏற்றாற் போல அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, இந்த பக்கதில் இருக்கும் ஆட்-ஆனை நிறுவினால், உங்கள் ஃபயர்ஃபாக்ஸ் முழுவதும் தமிழில் மாறிவிடும்.
இன்னும் பல நன்மைகள் உள்ளன. ஒருமுறை உங்கள் கணினியில் நிறுவி பாருங்கள், உங்களுக்கே தெரியும் பல வித்தியாசங்கள்.
0 comments :
Post a Comment