பெண்ணியம் இல்லங்கோ.. பரவலாக என் ஆண் நண்பர்களும், அலுவலாக நண்பர்களும், உறவினர்களும் இந்த கருத்தை முன்னிருத்துவார்கள்... அதான் நானும் அந்த துறையில் இருப்பதால் அதைப்பற்றி என் கண்ணோட்டம்,
நான் அறிந்த ஆண்கள் அனைவரும் ஆணியம் பேசினாலும் எனக்கு அனைத்து வகையிலும் உதவியாகவே தான் இருப்பார்கள்.. என்னை எந்த வகையிலும் கட்டுப்படுத்த மாட்டார்கள்.. தண்ணி தெளிச்சிவிட்டார்களா என்று தெரியவில்லை... :) ஆனாலும் அவர்கள் என்னை மிகவும் கிண்டல் செய்வார்கள்.. அவற்றை யோசித்தால் எனக்கு சில சமயம் கோபமாகவும் வரும், சில சமயம் சிரித்துவிட்டு விட்டுவிடுவேன்... இப்போ எழுத ஊடகம் இருப்பதால் எழுதுகிறேன்.
நான் முதுகலை கல்லூரி படித்த போது, பெண்கள் கல்லூரியில் படித்தேன்.. திறமையாக நிகழ்வு(புரோக்கிறாம்) எழுதும் பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்... ஆனால் அது கலை அறிவியல் கல்லூரி.. தொழில் நுட்பக் கல்லூரிகளில் அறிவாளிப் பெண்கள் இருந்திருக்கலாம்.. ஆனால் மற்றவர்களின் பார்வை ஒன்றாகத்தான் இருந்திருக்குமென்று நினைக்கிறேன்...
விசயத்திற்கு வருகிறேன்... அந்த விரல் விட்டு எண்ணும் பெண்களில் பலர் திருச்சியை விட்டு வெளியே வரவே மாட்டார்கள்... வேலை எல்லாம் கனவுதான். நல்ல அறிவாளிப் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை, வாய்ப்பு கிடைப்பவர்கள் எல்லாம் அறிவாளிகலும் இல்லை.. பெரிய பின்னடைவு என்னெவென்றால் "ஆங்கிலம்".. ஆண்களை விட பெண்களே ஆங்கிலம் நன்றாக பேசுவதை கவனித்துள்ளேன்.. ஆனால் அவர்கள் புத்திசாலியாகவும் இருக்க மாட்டார்கள்.. அந்த ஆங்கிலத்திற்காகவே வேலையில் அமர்த்தும் நிறுவனங்களும் அதிகம்... அப்படிப்பட்ட நேரத்தில் திறமையான பெண்கள் வாய்ப்பை நழுவ விடுகிறார்கள்...
சரி, கெம்ப்பசில் வேலை தேடலாம் என்றால் அங்கு தான் விசயம் ஆரம்பிக்கின்றது.. நானும் ஒரு பெத்த கம்பெனியில் நேர்முகத்தில் கலந்து கொண்டேன்... நான் கவரும் அளவு அழகெல்லாம் இல்லை... தேர்ச்சி பெற்ற அனவரும் அ வையும் பி யயும் கூட்டி சி யில் போடக் கூட தெரியாதவர்கள்... அழகானவர்கள்... மதிப்பெண் அதிகம் 12த் தில்..
மிகவும் உடைந்து போனேன்.. நமக்கு கிடைக்கலையே.. கான்செப்ட் கூரும் முன் கோட் எழுதும் எனக்கு வந்த இயல்பான கோபம்., போங்கடா யாரை நம்பி நான் பிறந்தேன் என்று பெங்களூரில் வந்து இப்போது சேர்ந்திருக்கும் கம்பெனியில் கூட நல்ல பெயர். ஏன் சொல்ல வந்தேன்னா.. திறமை பார்த்து வேலைக்கு அமர்த்தினால் தான் வேலை பார்ப்பார்கள், அழகு பார்த்து அமர்த்தினால் அவர்கள் கொலு பொம்மையாகத் தான் இருப்பார்கள்... அது தானே லாஜிக்..
என் அம்மான் அவர்கள் மைக்குரோ சாப்ட்டில் வேலை பார்க்கிறார், அவர் சொல்லுவார் எங்க டீமில் 15 பேர், அதில் 2 பெண்கள்னா நாங்க 13 நாக தான் டீமை நினைப்போம் என்று... மைக்குரோ சாப்ட்டிலேயே இப்படியா..? அதுவும் அலுவலகத்தில் அழகு பெண்கள் இருப்பதை பலர் விரும்புகிறார்கள்.. திறமைக்கும் இடம் உண்டு என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்..
பெரும்பாலான இடங்களில் திறமையை விட அழகும், ஆங்கிலமும், பந்தாவுமே எடுபடுகின்றன.. மனிதர்களுக்கு மற்றவர்களை கவனிக்கும் திறன் அல்லது கலை பொதுவாக குறைந்து வருகிறது.. அதனால் வெளித்தோற்றத்திற்கு மதிப்பு கொடுத்து தவறான கண்ணோட்டத்தில் உள்ளவர்களை அதிகம் பார்க்கிறேன்.. ஆனால் முதல் கோணல் முற்றிலும் கோணல்.. அதனால் தேர்வு செய்யும் போது கோட்டை விடும் ஆண்கள் இருக்கும் வரை, கிண்டல் செய்யும் ஆண்களும் இருப்பார்கள்... கண்டுகொள்ளாமல் போவது தான் புத்திசாலித்தனம்..
நன்றாக வேலை செய்தால் ஈகோ பார்க்கும் ஆண் நண்பர்களும், பெண்களுடன் கண் பார்த்து பேசும் தைரியம் இல்லாமல் தரை பார்த்து பேசும் அலுவலக பெரிய தலைகளும், பெண்களைக் கவர கோட் எழுதி உதவி செய்யும் ஆண்களும் அலுவலகத்தில் அதிகம்.. அவர்களை நினைத்தால் எரிச்சல் தான் வரும்., அவர்களின் இந்த நடவடிக்கை மனதளவில் பாதிக்கும், பல முறை நாம் வேலை செய்வதைப் பற்றி கூட எங்களிடம் பேச தயங்கும் ஆண்களை நிறைய பார்க்கிறேன்.. (இத்தனைக்கும் நான் எளிமை மற்றும் பந்தா இல்லாத பார்ட்டி) அதனால் அவர்களின் அறிவை நாங்கள் பகிர்ந்து கொள்ள முடியாது.. ஆண்கள் அவர்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் அளவு, பெண்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை அதை நான் நிறைய கண்டுள்ளேன்..
என்னை முதலில் வேலைக்கு அமர்த்திய சிறிய கம்பெனி முதலாளி, தான் பெண்களை வேலைக்கு அமர்த்துவதில்லை என்றும் என்னை மட்டுமே அமர்த்துவதாகவும் கூறுவார்...(!!!!) நான் 11 மணி வரை கூட இருந்து சில முறை வேலைப் பார்ப்பேன்...( தேவைப்பட்டால்..) அதிக நேரம் வேலைப்பார்ப்பதில் எனக்கு உடன் பாடு இல்லை, ஆண்களாக இருந்தாலும், மென் துறையாக இருந்தாலும் 8 மணி நேரமே அதிகம் என்பதே என் கருத்து.. இரவு பூராக இருக்கும் ஆண்கள் தான் அதிகம் வேலை பார்க்கிறார்கள் என்றால் அது அபத்தம்... தேவையும் அற்றது...
அதனாலேயெ பெண் மென் துறை வல்லுனர்களுக்கு பொருப்பு இல்லை என்று கூறும் ஆண்களை நான் கண்டு கொள்வதே இல்லை., என்னால் 8 மணி நேரத்தில் எழுத முடியாததை 16 மணி நேரம் கொடுத்தாலும் எழுத முடியாது., இது என் கருத்து.. என் வழக்கம்.. இப்போது நான் வேலைப் பார்க்கும் அலுவலகத்தில் சப்போர்ட்டுக்காக வரும் மென் பொறியாளை கூட இதை வலியுருத்துவார்.. பெண்கள் ரொம்ப நேரம் இருக்காதிங்கம்மா என்று, சில ஆண் அலுவலக நண்பர்களும் கூறுவதுண்டு அவசியமில்லையென்று...(நான் இருப்பது)
அடடா எதை விடுவது, எதை எடுத்துக்கொள்வது, மொத்தத்தில் திறமையிருந்தால் மதிப்பார்கள், ஆனல் திறமைக்கு இடமும் கொடுக்க வேண்டும்.. எதைத் தேடுகிறோமோ அது தான் கிடைக்கும், அறிவைத் தேடினால் அறிவும், அழகைத் தேடினால் அழகும்... அழகானவர்கள் அறிவில்லாதவர்கள் என்றும் சொல்ல வரவில்லை... முக்கியத்துவம் என்றும் அறிவிற்கே கொடுக்கப்பட வேண்டும், அலுவலகத்திலாவது(.........!)
எளிதாகக் கிடைக்கும் பழங்கள், மரத்தடியிலேயே கிடக்கும், நல்ல பழங்களுக்கு மரத்தில் ஏறி துன்பப்படத்தான் வேண்டும்.. ஏற சோம்பேரித்தனம் பட்டுக் கொண்டு நல்ல பழங்களே இல்லை என்பது முட்டாள் தனம்... (எங்காவது நம்ப தலைப்பிற்கு பொருந்துகிறதா?)
0 comments :
Post a Comment