தெருவோரத்தில் ஒரு புளியமரம் இருந்தது.
புளியம்பழத்தை நினைத்துக்கொண்டே மரத்தில் ஏறிவிட்டான்.
மரத்தில் காய்களோ பழங்களோ இருக்கின்றனவா என்றுகூட அவன் கவனிக்கவில்லை.
புளியமரத்தில் பூக்கள்கூட இல்லை.
மரத்தில் அவன் ஏறி இருப்பதைத் தெருவில் சென்ற பெரியவர் ஒருவர் பார்த்துவிட்டார்.
அவனுடைய எண்ணம் அவருக்குப் புரிந்துவிட்டது.
“ஏனடா புளியமரத்தில் ஏறினாய்?” என்று கேட்டார்.
தன்னுடைய ஆவல் அவருக்குத் தெரிந்துவிட்டது என அவன் புரிந்துகொண்டான்.
ஊராருக்குத் தெரிந்தால் அவமானமாகிவிடும்; எப்படியாவது சமாளிக்க எண்ணினான்.
“ஏனடா புளியமரத்தில் ஏறினாய்?” என்று மறுபடியும் கேட்டார் பெரியவர்.
“அண்டை வீட்டில் இருக்கும் பூனைக்குட்டிக்குப் புல் பறிக்கத்தான் மரத்தில் ஏறினேன்!" என்றான் அவன்.
(ஏனடா புளியமரத்தில் ஏறினாய் என்றால் பூனைக்குட்டிக்குப் புல் பறிக்க என்கிறான் - இது பழமொழி)
"ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக பா.ம.க. இருந்திருந்தால் ம.தி.மு.க.வையும் அழைத்துக்கொண்டு தி.மு.க.வுக்கு வந்திருக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் தவறான கூட்டணியில் உள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் கூறியுள்ளதை அறிந்தேன். அவர் கூறியது தவறானது. ஈழ தமிழர்களுக்கு நேர் எதிரானவர் ஜெயலலிதா, பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியவர். இப்படி காங்கிரஸ் கட்சியோ, சோனியா காந்தியோ யாரும் சொல்லவில்லை. தவறான கூட்டணி வைத்துள்ளது விடுதலை சிறுத்தைகளா, பா.ம.க.வா என்று வருகிற தேர்தலுக்கு பிறகு தெரியும். ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றும் குரல் கொடுக்கும்.” - திருமாவளவன்
0 comments :
Post a Comment