மார்பக புற்றுநோய் வருவதற்கு காரணமான ஒரு விஷயம்

பெண்களை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்றான மார்பக புற்றுநோய் வருவதற்கு காரணமான ஒரு விஷயம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது குடிநீர் வைத்திருக்கும் பிளாஷ்டிக் கேன்கள் அதிக வெப்பமான சூழ்நிலையில் இருக்கும்போது, அந்த பிளாஸ்டிக் உருகுவதால் அதில் இருக்கும் ஒருவித ரசாயனம் தண்ணீரில் கலக்கிறது. இந்த ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை தோற்றுவிக்கும் அபாயம் கொண்டதாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பொதுவாக காரில் வேலைக்கோ, கடைகளுக்கோ செல்லும்போது காரில் இருக்கும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பொதுவாக கார்களிலேயே விட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். பின்னர் காருக்கு திரும்பி வந்ததும் அந்த குடிநீரையேப் பயன்படுத்துகிறார்கள்.

அதனால் காருக்குள் உருவாகும் வெப்பத்தால் அந்த பிளாஸ்டிக் மிக லேசாக உருகுவதால் அதில் இருந்து டாக்சின் என்ற ரசாயனம் தண்ணீருடன் கலக்கிறது. அந்த நீரைப் பருகும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

தற்போது ஆஸ்ட்ரேலியாவில் மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

அதைப் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் தான் கார்களில் வைக்கப்படும் குடிநீரை அதிகமாக குடிக்கும் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதும், டாக்சின் என்ற ரசாயனத்திற்கு மார்பக புற்றுநோயைத் தோற்றுவிக்கும் ஆற்றல் இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

  

எனவே காருக்குள் வைத்திருக்கும் தண்ணீரைபெண்கள் அருந்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

உங்களால் முடிந்தால் எவர்சில்வர் அல்லது கண்ணாடி பாட்டில்களில் தண்ணீரை ஊற்றி வைத்துக் குடியுங்கள் என்கிறது அந்த ஆய்வு


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes